2015 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நம்மை அதிர வைத்த உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டு உணவுக் குறித்த சர்ச்சைகள் ஏராளமாக இருந்தது. அவற்றில் சில நாம் அன்றாடம் உட்கொண்டு வந்த உணவுகளாக இருந்தால், பலருக்கும் அது ஓர் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதில் நம் அனைவருக்கும் தெரிந்தது மேகி பற்றி தான். மேகியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் லெட் என்னும் பொருள் அதிகமாக இருந்ததால், அது தடைசெய்யப்பட்டது. இதுப்போன்று நிறைய உணவுப் பொருட்கள் குறித்த சர்ச்சைகள் வந்தன.

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!!

இங்கு அப்படி 2015 ஆம் ஆண்டு நம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கி அதிர வைத்த உணவு சர்ச்சைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸ்

பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸ்

மேகி தடை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவில் யோகாகுரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் உடலுக்கு ஆரோக்கியமான கோதுமை மாவினால் ஆன புதிய பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த நிறுவனம் இதை வெளியிடும் முன் உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையத்தின் அனுமதியைப் பெறாமவ் வெளியிட்டதோடு, ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் இந்த பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸ் பாக்கெட்டில் வண்டு ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.

ட்ராப்பிக்கானா ஜூஸ்

ட்ராப்பிக்கானா ஜூஸ்

முகநூலில் ஒருவர் ட்ராப்பிக்கானா ஜூஸில் கருப்பு நிற பூஞ்சை இருப்பது போன்ற ஓர் படத்தை பதிவு செய்திருந்ததோடு, இதனைக் குடித்த அவரது தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் இதுக்குறித்து ட்ராப்பிக்கானா நிறுவனம் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.

கேஎஃப்சி எலி

கேஎஃப்சி எலி

கலிபோர்னியாவில் உள்ள கேஎஃப்சி உணவகமானது ப்ரைடு சிக்கனுக்கு பதிலாக ப்ரைடு எலியைக் கொடுத்ததுள்ளதாக டிக்சன் என்பவர் முகநூலில் படத்துடன் ஓர் போஸ்ட் செய்துள்ளார். இதுக்குறித்து கேஎஃப்சி நிறுவனத்திடம் கேட்ட போது, இதனைப் பற்றி அவரை விசாரிக்க அழைத்த போது வர மறுத்ததாகவும், இது வெறும் புரளி என்ற அறிக்கையை வெளியிட்டு சமாளித்துவிட்டது.

கேஎஃப்சி பர்கரில் புழு

கேஎஃப்சி பர்கரில் புழு

கேஎஃப்சி சிக்கனுக்கு புகழ் பெற்றதோ இல்லையோ, சர்ச்சைக்கு பெரும் புகழ்பெற்றது எனலாம். ஏற்கனவே சிக்கனுக்கு பதிலாக எலியை கொடுத்து மாட்டிய நிலையில், மங்களூரில் உள்ள கேஎஃப்சியில், ஓர் தம்பதி பர்கர் ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது அந்த பர்கரில் புழு இருந்ததைக் கண்டு, அங்குள்ள மேனேஜரிடம் புகாரளித்த போது, அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததோடு, அந்த பர்கரை போட்டோ எடுக்கவும் அனுமதிக்கவில்லையாம்.

மதர் டெய்ரி மில்க்

மதர் டெய்ரி மில்க்

மிகவும் பிரபல பால் மற்றும் பால் பொருள் தயாரிப்பு நிறுவனமான மதர் டெய்ரி மில்க் பொருட்களில் சோப்புத்தூள் கலந்திருப்பதோடு, உறைந்த நிலையிலான கொழுப்புக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் உணவு பாதுகாப்புத் துறை இந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு தடைசெய்துவிட்டது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. அதுவும் மகாராஷ்டிரா விலங்கு பத்திரப்படுத்துதல் சட்டத்தின் கீழ், காளை மற்றும் கன்றுக் குட்டிகளை வெட்டுவது குற்றம் என்றும், இவைகளை வெட்டினாலோ அல்லது விற்றாலோ 5 வருடம் சிறைத்தண்டனையோடு, 10,000 அபராதம் விதிக்கப்படுமாம்.

மேகி

மேகி

இந்தியாவில் பலரும் விரும்பி சாப்பிடும் மேகியில், லெட் மற்றும் MSG பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தரநிலை ஆணையம் கூறி தடைசெய்து, பல ஆயிரக்கணக்கான மேகி நூடுல்ஸ் பாக்கெட் தூக்க எறியப்பட்டது. இருப்பினும் மூன்று மாதங்களுக்குப் பின், மேகி நிறுவனம் தன் பொருளை தரமானது என்று நிரூபித்து மீண்டும் தன் பழைய இடத்தைப் பிடித்துவிட்டது.

நெஸ்லே பால் பவுடர்

நெஸ்லே பால் பவுடர்

கோவையில் நெஸ்லே பால் பவுடரில் புழுக்கள் இருப்பதாக ஓர் புதிய சர்ச்சை வெளிவந்தது. ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் இரட்டை குழந்தைகளுக்கு நெஸ்லே பால் படவுரை வாங்கிச் சென்று, வீட்டில் டப்பாவைத் திறந்த போது, பால் பவுடரில் நிறைய புழுக்கள் உயிருடன் நெளிவதைக் கண்டு அதிர்ந்துள்ளார். மேலும் அவரது குழந்தைகளுக்கு இரண்டு நாட்கள் கழித்து உடலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து அந்த ஆட்டோ டிரைவர் புகார் அளித்த போது, அதனை சோதித்த உணவுத் துறை அதிகாரிகள் இது பயன்படுத்துவதற்கு உகந்தல்ல எனவும், இந்த ஒரு டப்பாவிற்கு தான் பொருந்தும் என்றும், அனைத்து நெஸ்லே பால் பவுடருக்கும் பொருந்தாது என்றும் கூறியுள்ளனர்.

நம் அதிகாரிகளின் அலட்சியத்தினால் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ தெரியவில்லை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Food Controversies That Rocked In 2015

2015 was a year of controversies, most of them revolving around food. A few broke our hearts and a few just made us smirk! Here is a list of top food controversies that rocked in 2015.
Subscribe Newsletter