முத்தம் பற்றிய சில ருசீகரமான உண்மைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

உலகில் பல தினங்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் முத்த தினம். அதிலும் இன்று சர்வதே முத்த தினம். பொதுவாக முத்தம் என்பது அதிகப்படியான அன்பு மற்றும் காதலின் ஒரு வெளிப்பாடு ஆகும். அந்த முத்தமானது மகள், மகன், தம்பி, அக்கா, அண்ணன், அம்மா, அப்பா, வாழ்க்கைத் துணை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பதாக இருக்கும். இது அன்பின் ஓர் வெளிப்பாடே.

முத்தம் கொடுக்கும் இடங்களும்... அதற்கான அர்த்தங்களும்...

அதிலும் வாழ்க்கைத் துணைக்கு அன்போடு லிப்-டூ-லிப் முத்தம் கொடுப்பதால், இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பு அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். இன்று சர்வதேச முத்த தினம் என்பதால், முத்தம் பற்றிய சில சுவாரஸ்ய மற்றும் கவர்ச்சிகரமான உண்மைகளை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது.

நச்சுன்னு கிஸ்ஸடிக்க சிக்குன்னு 7 காரணம் இருக்கு செல்லம்!

அதைப் படித்து தெரிந்து கொண்டு, இன்று இதைக் காரணமாகக் கொண்டு உங்கள் வாழ்க்கை துணையை முத்த மழையில் நனைய வையுங்கள்.

முத்தத்தின் மூலமாக பிரபலமடைந்த சில முக்கிய பிரபலங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகள்

கலோரிகள்

முத்தம் கொடுப்பதன் மூலம் கலோரிகளை எரிக்க முடியும். அதிலும் 1 நிமிடத்திற்கு மேல் உங்கள் துணைக்கு முத்தம் கொடுத்தால், 3-4 கலோரிகளைக் கரைக்கலாமாம்.

பாக்டீரியாக்கள்

பாக்டீரியாக்கள்

வாயில் ஏற்கனவே எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருக்கும். அதுவும் துணைக்கு வாயுடன் வாய் வைத்து முத்தம் கொடுக்கும் போது, சுமார் 1 பில்லியன் பாக்டீரியாக்கள் பரிமாற்றப்படுகிறதாம்.

கைக்குலுக்கலை விட சிறந்தது

கைக்குலுக்கலை விட சிறந்தது

முத்தம் கொடுப்பது, கைக்குலுக்குதலை விட மிகவும் சிறந்ததாம். இதற்கு காரணம், முத்தம் கொடுப்பதை விட, கைக்குலுக்குதலின் போது எண்ணற்ற நச்சுக்கிருமிகள் பரிமாறப்படுகிறதாம்.

பற்களுக்கு நல்லது

பற்களுக்கு நல்லது

தினமும் துணைக்கு முத்தம் கொடுத்து வந்தால், பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காதாம். ஏனெனில் துணைக்கு வாயுடன் வாய் வைத்து முத்தம் கொடுக்கும் போது, வாயில் எச்சில் அதிகமாக சுரக்கப்பட்டு, அதனால் எச்சிலில் உள்ள கனிமங்கள் வாயில் உள்ள உணவுத்துகள்களை வெளியேற்றி, பற்களின் எனாமலை பாதுகாத்து, பல் சொத்தையாவதைத் தடுக்குமாம்.

நீண்ட நேர முத்தம்

நீண்ட நேர முத்தம்

தாய்லாந்தைச் சேர்ந்த தம்பதிகள் நீண்ட நேர முத்தம் கொடுத்து சாதனை படைத்துள்ளனர். அதுவும் 58 மணிநேரம் 35 நிமிடம் மற்றும் 58 நொடிகள் தொடர்ந்து முத்தம் கொடுத்துள்ளனர் என்றால் பாருங்களேன்.

முத்தம் கொடுக்கும் திசை

முத்தம் கொடுக்கும் திசை

மற்றொரு சுவாரஸ்யமான முத்தம் பற்றிய உண்மை என்னவென்றால் முத்தம் கொடுக்கும் திசை. உலகில் பாதி மில்லியன் மக்கள் தங்களின் தலையை வலதுபுறமாக சாய்த்து தான் முத்த பரிமாற்றம் செய்து கொள்கிறார்களாம்.

மீசையுடன் ஆண்கள்

மீசையுடன் ஆண்கள்

நெவாடாவில், மீசையுடன் இருக்கும் ஆண்களுக்கு பெண்கள் முத்தம் கொடுப்பது சட்டவிரோதமானது. அதனால் தான் நெவாடா ஆண்கள் மீசை வைத்துக் கொள்வதில்லை.

முத்தத்திற்காக 2 வாரம்

முத்தத்திற்காக 2 வாரம்

சராசரி மனிதன் தனது வாழ்க்கையில் 2 வாரங்களை முத்தத்திற்காக செலவழிக்கிறான் என்றால் பாருங்களேன்.

இங்கிலாந்தில் முத்தம்

இங்கிலாந்தில் முத்தம்

இங்கிலாந்தில் முத்தம் கொடுப்பதற்கான சராசரி வயது 15 ஆகும். 15 வயது நிரம்பியிருந்தால் மட்டுமே, உங்களால் இங்கிலாந்தில் முத்தம் கொடுக்க முடியும்.

குட்-பை முத்தம்

குட்-பை முத்தம்

கணவன் வெளியே செல்லும் போது மனைவி முத்தம் கொடுத்தால், கணவனின் வாழ்நாள் 5 வருடங்கள் அதிகரிக்குமாம். இதற்கு முத்தம் கொடுப்பதன் மூலம் முத்தத்தைப் பெறுபவருக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து, உடல் மற்றும் மன அளவில் ஆரோக்கியமாக இருக்க வழி செய்கிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fascinating Facts About Kissing: International Kissing Day 2015

Here are some of the fascinating facts about kissing. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter