உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் எத்தனையோ இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன, டைனோசர் என்ற பெரும் இனம் அழிந்ததும் அவ்வாறான ஒரு பேரழிவால் தான். அதுமட்டுமல்ல, நாகரீகத்தின் இலட்சினையான, முதன்முதல் தோன்றிய மனித இனத்தின் பிறப்பிடமான குமரி கண்டம் அழிந்ததும் அதனால் தமிழரின் மாபெரும் வரலாறு புதைந்ததும் கூட ஒரு பேரழிவால் தான்.

இந்து மதத்தில் மறுபிறவி பற்றிய 7 அருமையான தகவல்கள்!!!

இவ்வாறு, நமது உலகில் பல இயற்கை பேரழிவு ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அதன் மூலமாக உலகில் வாழ்ந்து வந்த ஏதோ ஒரு உயிரினம் அழிந்தனவே தவிர உலகம் மொத்தமாய் அழிந்துவிடவில்லை. ஆனால், இப்போது விஞ்ஞானிகளின் அச்சத்திற்கு காரணமாய் இருப்பது, நம் வாழ்வியலுக்கு மூலப்பொருளாய் விளங்கும் உயிரனங்களே இந்த பூமியில் இல்லாது போய்விடுமோ என்பது தான்.

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!!

ஆம்! இன்றளவில் நாசாவில் இருந்து ஐ.எஸ்.ஆர்.ஒ வரை அனைவரும் தேடிக்கொண்டிருப்பது மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு மாற்றிடம். மார்ஸிற்கு குடிபெயர்ந்து செல்ல பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதும் இதன் காரணத்தினால் தான். இதோ உலக அழிவை குறி வைத்து காத்திருக்கும் அந்த பேரழிவு நிகழ்வுகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு துளை (Black Hole)

கருப்பு துளை (Black Hole)

கருப்பு துளை என கூறப்படும் "பிளாக் ஹோல்" பேரழிவால் உலகம் அழிந்துவிடும் என்றும், இதன் பேரழிவின் முடிவில் உலகில் சக்தி குறைந்த ஃபோட்டான்கள், எலக்ட்ரான்கள், பாசிட்ரோன்கள் மற்றும் நியூட்ரினோக்கள் மட்டும் தான் மிஞ்சியிருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கிரே கூ (Grey Goo)

கிரே கூ (Grey Goo)

நானோ தொழில்நுட்பத்தின் பெரும் வளர்ச்சியின் காரணத்தால் எதிர்காலத்தில் ரோபோக்கள் மனித இனத்தை அழித்துவிடும் என அஞ்சப்படுகிறது. இதை "எண்டு ஆப் தி வேர்ல்ட்" (End of the world) என்று கூறுகின்றனர்.

உலகம் வெப்பமயமாதல்

உலகம் வெப்பமயமாதல்

கடந்த சில தசாப்தத்தில் விஞ்ஞானிகள் மிகவும் அச்சம் கொண்டிருப்பது இந்த உலக வெப்பமயமாதல் பற்றி தான். ஓசோன் மண்டலத்தில் உருவாகிய ஓட்டை தான் இதற்கு காரணம். இதன், காரணத்தால் மனிதர்களையும் சேர்த்து உலகில் உள்ள பல உயிரினங்களும் இயற்கை வளங்களும் அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மரபியல் அபாயம்

மரபியல் அபாயம்

மரபியல் பொறியியல் படிப்பின் மூலம், பல புதிய மரபியல் கூற்றுகளை கண்ணுற்று உருவாக்கிட இயலும். இதை கொண்டு இப்போது இருக்கும் மரபியல் கூற்றுகளில் கூட உருமாற்றம் செய்ய இயலும். பூனையை புலி ஆக்கலாம், புலியை எலி ஆக்கலாம். இது நடைமுறையில் கால் பதிக்கும் போது பல அழிவுகள் ஏற்படும் என கருதப்படுகிறது.

தொற்று நோய்

தொற்று நோய்

பன்றி காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற பல வினோத தொற்று கிருமிகளின் காரணத்தினால் பெருமளவில் உயிர் பலி ஏற்படும் என கருதப்படுகிறது.

மக்கள் தொகை அதிகரிப்பு

மக்கள் தொகை அதிகரிப்பு

2050 ஆம் ஆண்டின் போது உலக மக்கள் தொகை பெருமளவில் அதிகமாகியிருக்கும். இதனால், பல வகையான நோய்கள் மற்றும் மாசு, உலக போர் போன்றவை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் கூட பெருமளவில் உயிரிழப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

பேராசை

பேராசை

மனிதனின் பேராசையினால், மற்ற இனங்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்பட்டு, மனிதனுக்கு தேவையான உணவுப் பொருள் கிடைக்காமல், பெருமளவில் உயிரழப்பு ஏற்பட்டு உலக அழிவு ஏற்படலாம்.

மூன்றாம் உலகப் போர்

மூன்றாம் உலகப் போர்

மூன்றாம் உலகப் போரில் வாழ இடமின்றி மனிதனுக்கு மனிதனும், நாட்டிற்கு நாடும் அடித்துக் கொள்ளும் (கொல்லும்) நிலைமை ஏற்படும் என

கருதப்படுகிறது.

அணு ஆயுதப் பேரழிவு

அணு ஆயுதப் பேரழிவு

கிடங்கில் இருக்கும் அணு ஆயுதங்கள் ஒரு கட்டத்தில், எண்ணெய்க்காகவும், தண்ணீர்காகவும் உபயோகிக்கப்படும் நிலை உருவாகும். அப்போது இந்த உலகே ஹிரோஷிமாவாக காட்சியளிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) இதை தேடி தான் மனிதனின் ஆராய்ச்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. தனக்கு இணையான, தனக்கும் மேலான ஒன்றை மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். இது மனித இனத்தையே எதிர்த்து தாக்கும் வன்மை குணமாக மாறுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் இருக்கிறது.

செயற்கை கோள் தாக்குதல்

செயற்கை கோள் தாக்குதல்

நேருக்கு நேர் எதிர்த்து சண்டையிட்டது மருவி, தொலைதூரத்தில் நின்று மறைந்து குண்டு வீசி சண்டையிடும் காலம் வந்தது. இது வரும் காலத்தில் விண்வெளியில் இருந்து செயற்கைகோளின் உதவியோடு ஒரு சில வினாடிகளில் நாடுகளை வீழ்த்தும் முறை கையாளப்படும். இதனால் கூட உலகில் பேரழிவு ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Disasters Scientists Believe Could Affect Our World

Do you know about the disasters which affect the world? and scientists believe on that, read here.
Story first published: Monday, March 30, 2015, 14:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter