For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் மூக்கு இன்றி பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!!

|

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது அலபாமா (Alabama). இப்பகுதியில் வசித்து வந்த பிரண்டி மெக்கிளதேரி என்னும் 23 வயது நிரம்பிய இளம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு தான் மூக்கு இல்லாமல் பிறந்த அதிசயம் நடந்துள்ளது. மருத்துவ உலகில் இதை அதிசயமாக கண்டாலும், பெற்ற மனம் பதற்றமாக தான் இருந்தது.

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!

அனைவரையும் போல இளம் தாயான பிரண்டி மெக்கிளதேரியும், நல்ல ஆரோக்கியமான குழந்தையை தான் எதிர்பார்த்து இருந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளும் அப்படி தான் இருந்தது. ஆனால், குழந்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் மூக்கின்றி பிறந்தது, பெற்றோர் மட்டுமின்றி, மருத்துவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது....

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று தெரிந்து கொள்ள ஆசையா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திமோத்தி எலி தாம்சன்

திமோத்தி எலி தாம்சன்

பிரண்டி மெக்கிளதேரிக்கு மூக்கின்றி பிறந்த குழந்தையின் பெயர் திமோத்தி எலி தாம்சன். இந்த குழந்தைக்கு மனிதர்களுக்கு சாதாரணமாக சுவாசிக்க உதவும் சுவாச துளைகள் இல்லாமல் பிறந்தது.

37வது குழந்தை

37வது குழந்தை

மருத்துவ வரலாற்றில் உலகிலேயே, இதுப் போன்று மூக்கு இன்றி பிறந்த 37 குழந்தைகளில் திமோத்தி எலி தாம்சனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் கோடிகளில் ஒருவர்

ஆயிரம் கோடிகளில் ஒருவர்

ஆயிரத்தில் ஒருவன் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் குழந்தை திமோத்தி ஆயிரம் கோடியில் ஒருவர் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறன கோளாறு ஆயிரம் கோடிகளில் ஒருவருக்கு தான் ஏற்படுமாம்.

சுவாச பிரச்சனைக்கான தீர்வு (Tracheotomy)

சுவாச பிரச்சனைக்கான தீர்வு (Tracheotomy)

உடல்நலனில் எந்த கோளாறும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பினும், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். எனவே, மருத்துவர்கள் பிறந்து ஐந்து நாளே ஆன குழந்தைக்கு "Tracheotomy" எனப்படும் சுவாசப் பிரச்சனைக்கான சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

குழந்தை மாற்றம் பெண்கள் மருத்துவமனை

குழந்தை மாற்றம் பெண்கள் மருத்துவமனை

திமோத்தி எலிக்கு, அமெரிக்காவின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் மூன்று வாரங்கள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை முறை

சிகிச்சை முறை

குழந்தைக்கான சுவாச சிகிச்சை முறையான Tracheotomy குழாயை எப்படி பயன்படுத்துவது என பெற்றோருடன் சேர்ந்து தாத்தா, பாட்டிகளும் கற்றுக்கொண்டனர்.

முகப்புத்தக பக்கம்

முகப்புத்தக பக்கம்

திமோத்தி எலியின் பயணம் என்ற (Eli's Journey) என்ற முகப்புத்தக பக்கத்தை துவக்கி, குழந்தையின் நலன் குறித்து பதிவு செய்து வந்துள்ளார் தாய் பிரண்டி மெக்கிளதேரி. இந்த பக்கத்தை 4,000க்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்து பின் தொடர்ந்து வருகின்றனர்.

பிரண்டி மெக்கிளதேரி பதிவுகள்

பிரண்டி மெக்கிளதேரி பதிவுகள்

பிரண்டி மெக்கிளதேரி, கண் பரிசோதனை மற்றும் மண்டையோட்டுக்குரிய ஸ்கேன் செய்த பதிவுகள் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் மற்றும், உடல்நலம் தேறி வருவது போன்ற பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

பிரண்டி மெக்கிளதேரியின் சோகம்

பிரண்டி மெக்கிளதேரியின் சோகம்

நர்ஸ் நிறைய பேர் பிரண்டி மெக்கிளதேரிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். Tracheotomy குழாய் மூலம் குழந்தை நன்கு சுவாசிக்கலாம் எனிலும், இந்த உலகம் தன் குழந்தையை எவ்வாறு காணும் என்பதை பெரும் சோகமாக காண்கிறார் தாய் பிரண்டி மெக்கிளதேரி.

அழகான குழந்தை

அழகான குழந்தை

என்னை பொறுத்தவரை, திமோத்தி எலி அழகான குழந்தை மட்டுமல்ல, இவன், தைரியமானவனும் கூட. பிறக்கும் போதே போராடக்கூடிய குணத்துடன் பிறந்துள்ள இவனை,. நான் எப்போதும் உடன் இருந்து காப்பேன் என்று தாய்க்குரிய பாசத்துடன் கூறியுள்ளார் பிரண்டி மெக்கிளதேரி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Credits: AL.com / Landov / Barcroft Media

English summary

Baby Boy Born Without A Nose In Alabama

Baby boy born without a nose in Alabama. After a big struggle now, finally baby gets to go home safe.
Desktop Bottom Promotion