For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொங்கலுக்கு கடைப்பிடிக்கப்படும் சடங்குகள்!!!

By Ashok CR
|

பொங்கல் என்பது தென் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு புகழ் பெற்ற அறுவடை திருவிழாவாகும். வளர்ந்து வளரும் நவீன உலகத்தில் கலாச்சாரமும் சடங்குகளும் மாறி கொண்டிருந்தாலும் கூட இந்த திருவிழா மீது இருக்கும் ஆர்வம் அப்படியே தான் உள்ளது. இது அறுவடை திருவிழா என்பதால், புது பயிர்களை அறுவடை செய்து, சமைத்து கடவுளுக்கு முதலில் படைக்கப்படும்.

இத்திருவிழா தொடர்ந்து நாலு நாட்களுக்கு கொண்டாடப்படும். பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை கொண்டுள்ளது. பண்டிகையின் முதல் நாள் போகி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாக அறுவடை செய்ய, இந்நாளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்திர பகவானை வணங்குவார்கள்.

சுவாஸ்யமான வேறு சில: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது எதற்கு தெரியுமா?

பண்டிகையின் இரண்டாவது நாளை சூர்ய பொங்கல் என்று அழைப்பார்கள். அறுவடை சிறப்பாக நடந்திட உதவிடும் சூரியனை இந்நாளில் வணங்குவார்கள். பண்டிகையின் மூன்றாவது நாளை மாட்டுப் பொங்கல் என்று அழைப்பார்கள். இந்நாளில், மாடு மேய்ப்பவர்கள், தங்களின் மாடுகள் மற்றும் காளைகளுக்கு நன்றியை செலுத்துவார்கள். பண்டிகையின் நான்காம் நாளை காணும் பொங்கல் என்று அழைப்பார்கள்.

இதுப்போன்று வேறு சில: பொங்கலுக்கு கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்!!!

கடைசி நாளில் தான் சொந்த பந்தங்களை பார்க்க அவர்கள் வீட்டிற்கு செல்வார்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திருவிழக்களின் வலிமையை காத்திட பழங்காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் இன்றளவும் கூட கடைப்பிடிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதனால் பொங்கல் பண்டிகையில் பின்பற்றப்படும் சடங்குகளை இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rituals Associated With Pongal Festival

Each day of Pongal has some unique customs and traditions related to it. Let us take a look at the rituals associated with Pongal.
Desktop Bottom Promotion