Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
இந்த 6 வடிவ முகங்களில் உங்க முகம் எப்படி இருக்குனு சொல்லுங்க... உங்களை பற்றி ரகசியத்தை நாங்க சொல்றோம்...!
Personality Test: ஒருவரின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதில் அவர்களின் ஆளுமை முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒருவரின் ஆளுமை என்பது ஒருவரின் நடத்தை, மனநிலை, உந்துதல், எண்ண ஓட்டம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவையாகும்.
மனித முகம் மற்றும் ஆளுமைப் பண்புகளுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டும் பல இயற்பியல் தரவுகள் கடந்த காலங்களில் உள்ளன. ஆண்களை விட பெண்களின் முகப் படங்கள் அவர்களின் ஆளுமை பற்றிய துல்லியமான உண்மைகளை கணிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. ஒருவரது முக வடிவத்தைப் பொறுத்து அவரது ஆளுமையைப் பற்றிய சில ஆச்சரியமான உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வக முக வடிவம்
செவ்வக வடிவிலான முகத்துடன் நீங்கள் சதுர வடிவ கன்னம் மற்றும் நெற்றி உள்ளவராக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் வாழ்க்கையில் புத்திசாலித்தனத்திற்கு மதிப்பளிக்கும் நல்ல சிந்தனையாளர்களாக இருப்பீர்கள். இருப்பினும், நீங்கள் அதிகமாக சிந்திக்கிறீர்கள், உங்கள் உணர்வுகளைப் பற்றி அடிக்கடி வெளிப்படையாக இருக்க மாட்டிர்கள். ஒரே நேரத்தில் உங்கள் தலைக்குள் பல விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
வட்ட வடிவ முகம்
ஒரு வட்ட முக வடிவம் பொதுவாக கன்னத்து எலும்புகளுக்குக் கீழே முழுமையுடன் கூடிய அகலமான ஹேர் லைனைக் கொண்டிருக்கும். இந்த வகையான முக வடிவம் இருந்தால் நீங்கள் மிகவும் கொடுக்கக்கூடிய மற்றும் அன்பான ஆளுமை கொண்ட ஒரு நபர் என்று அர்த்தம், நீங்கள் வாழ்க்கையில் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள்.
இருப்பினும், இதன் தீமை என்னவென்றால், நீங்கள் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், இறுதியில் நீங்கள் உறவில் விரும்பியதைப் பெற முடியாது. யாருக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டுமெறு புரிந்து செயல்படுவது நல்லது.
நீள்வட்ட வடிவ முகம்
நீள்வட்ட வடிவ முகம் பொதுவாக அகலத்தை விட நீளமானது மற்றும் கன்னத்து எலும்புகளை விட குறுகலான தாடையுடன் வருகிறது. இது மிகவும் அரிதான முக வடிவமாகும். இந்த வகை முகம் கொண்ட நபர்கள் எப்போதுமே சரியான முடிவெடுப்பவர்களாகவும், சரியான விஷயங்களை பேசுபவர்களாகவும் இருப்பார்கள், மேலும் எல்லாரையும் எல்லா நேரங்களிலும் வசதியாக உணரச் செய்வார்கள். அவர்கள் அனைத்து விஷயத்திலும் பர்பெக்ட்டானவர்களாக இருப்பார்கள்.
சதுர வடிவ முகம்
இந்த வகை முக வடிவம் பொதுவாக பரந்த முடி மற்றும் தாடையையும் கொண்டிருக்கும். அதிக சகிப்புத்தன்மை கொண்ட அவர்கள், கடினமாக உழைக்கக்கூடியவர்கள், அவர்களின் எல்லையற்ற ஆற்றலின் காரணமாக மிகப்பெரிய திட்டங்களை எளிதில் முடிக்கக் கூடியவர்கள். ஆனால் சில சமயங்களில் மிகவம் எரிச்சலூட்டுபவர்களாகவும் இருப்பார்கள்.
இதய வடிவ முகம்
இதய வடிவிலான முகங்களைக் கொண்டவர்கள் நம்பமுடியாத மனவலிமையைக் கொண்டுள்ளனர், ஆனால் பல சமயங்களில் மிகவும் பிடிவாதமாகவும் இருக்கலாம். அவர்கள் அளவில்லா ஆற்றல் மற்றும் வலுவான எண்ணம் கொண்டவர்கள். அவர்களின் பலம் அவர்களின் மனதில் உள்ளது, அவர்களின் சகிப்புத்தன்மையில் அல்ல. அவர்கள் அதிக படைப்பாற்றல் மற்றும் வலுவான செயல்திறன் கொண்டவர்கள்.
முக்கோண வடிவ முகம்
இந்த வகையான முக வடிவம் கொண்டவர்கள் எப்போதும் முதலாளித்துவ மனப்பான்மையைக் கொண்டவர்களாக இருப்பார்கள் மற்றும் எல்லா நேரங்களிலும் பொறுப்பாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் மிகவும் வெற்றிகரமானவர்கள் மற்றும் பெரும்பாலும் அவர்களின் வேலை மற்றும் ஆற்றலினால் உந்தப்பட்டவர்கள், அவர்கள் எப்போதும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், பெரும்பாலான நேரங்களில் வெற்றியை அடையவும் விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications

