இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் எது-ன்னு சொல்லுங்க.. உங்களோட குணத்தை சொல்றோம்..

Personality Test: நம் ஒவ்வொருவருக்குமே குணாதிசயங்கள் வேறுபடும். அதில் ஒருவரது குணாதிசயங்கள் பல வழிகளில் கணித்து கூறப்படுகிறது. அதில் ஜோதிடத்தின் அடிப்படையில், ஒருவரது ராசிகள், பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு குணாதிசயங்கள் கணிக்கப்படுகின்றன. மறுபுறம் சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, முகம், மூக்கு, உதடு, காதுகள், நெற்றி, புருவங்கள், கை விரல் மற்றும் கால் விரல்கள் ஆகியவற்றின் வடிவம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு கணித்து கூறப்படுகிறது. ஆனால் ஒருவரது விருப்பமானவற்றைக் கொண்டும் அந்நபரின் குணாதிசயங்களை கூறலாம் என்பது தெரியுமா?

Personality Test What Does Your Favourite Fruit Say About Your Personality

ஆம், உதாரணமாக பழங்களில் எத்தனையோ உள்ளன. அதில் சிலருக்கு வெளிநாட்டு பழங்களை பிடிக்கும், இன்னும் சிலருக்கு உள்ளுர் பழங்களே பிடிக்கும். இதற்கு அவர்களின் குணாதியங்கள் மற்றும் எண்ணங்கள் தான் காரணம். உங்களுக்கு உங்களின் குணாதியங்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பழங்களில் உங்களுக்கு எந்த பழம் மிகவும் பிடிக்கும் என்று கூறுங்கள். உங்களின் உண்மையான குணாதிசயம் என்னவென்பதைக் கூறுகிறோம்.

1. ஆப்பிள்

உலகில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் இதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழம் தான் உங்களின் விருப்பமான பழம் என்றால், நீங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவர். விளையாட்டுத் திறமை கொண்டவர்கள் மற்றும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள். வாழ்க்கையில் ஒழுக்கமானவராகவும், உங்கள் மனதையும் உடலையும் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்பவராகவும் இருப்பீர்கள். வெளிப்படையாகப் பேசக்கூடியவராகவும், பிறருடன் எளிதில் பழகக்கூடியவராகவும் இருப்பீர்கள். நீங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்வீர்கள்.

2. ஆரஞ்சு

புளிப்புச் சுவையைக் கொண்ட ஆரஞ்சு உங்களின் விருப்பமான பழம் என்றால், நீங்கள் பொறுமையும், உறுதியும் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் தீவிரமாக இருப்பீர்கள். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்கமாட்டீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மிகவும் நம்பிக்கையானவராகவும், சிந்தனைமிக்கவராகவும் இருப்பீர்கள்.

3. மாம்பழம்

பழங்களின் ராஜா என்று அழைப்பழம் மாம்பழம் உங்களின் விருப்பமான பழம் என்றால், இயல்பிலேயே பிடிவாத குணம் கொண்டவராக இருக்கலாம். ஒவ்வொரு விஷயங்களிலும் உங்களுக்கு வலுவான கருத்துக்கள் இருக்கும். நீங்கள் மிகவும் தர்க்கரீதியானவர். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கமாட்டீர்கள். பகுத்தறிவு சிந்தனையையே விரும்புவீர்கள். மற்றவர்கள் உங்களை சிடுமூஞ்சியாக நினைக்கலாம். ஆனுல் உண்மையில் நீங்கள் மிகவும் அக்கறையுள்ளவர்கள்.

4. தர்பூசணி

உங்களுக்கு தர்பூசணி மிகவும் பிடித்த பழம் என்றால், நீங்கள் கடினமாக உழைக்கக்கூடியவர் மற்றும் மிகவும் புத்திசாலி. படைப்பாற்றல் அதிகம் கொண்டவர்கள் மற்றும் அறிவாளி. எந்த ஒரு பிரச்சனைக்கும் திறம்பட யோசித்து, எளிதில் தீர்வு காண்பவர்.

5. பேரிக்காய்

உங்களுக்கு பேரிக்காய் தான் ரொம்ப பிடிக்குமானால், உங்களால் ஒரு இடத்தில் இருக்க முடியாது. எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பீர்கள். அமைதியற்றவராகவும், எளிதில் எரிச்சலடைபவராகவும் இருப்பீர்கள். பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்வீர்கள். ஆனால் அந்த வேலைகளை இறுதி வரை செய்து முடிக்க அரிதாகவே முயற்சிப்பீர்கள். பொதுவாக உங்களிடம் ஆற்றல் அதிகமாக இருந்தாலும், சில நேரங்களில் சட்டென்று குறைந்து சோம்பேறியாகிவிடுவீர்கள்.

6. எலுமிச்சை

உங்களுக்கு எலுமிச்சை மிகவும் பிடித்த பழம் என்றால், நீங்கள் எதையும் அழகாகவும், சரியாகவும் செய்து முடிக்க நினைப்பீர்கள் மற்றும் மிகவும் சுத்தமாக இருப்பீர்கள். உங்களைச் சுற்றியுள்ள இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் மற்றும் மற்றவர்களையும் அப்படியே இருக்க ஊக்குவிப்பீர்கள். எதையும் ஒழுங்காக செய்ய நினைப்பவர் மற்றும் மிகுந்த படைப்பாற்றலும் கொண்டவர்.

7. செர்ரி

உங்களுக்கு அழகான செர்ரி பழம் தான் பிடிக்குமானால், நீங்கள் கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்கள். கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட நபர். உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தமாட்டீர்கள். இருப்பினும் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டும் மனம் விட்டு பேசுவீர்கள். மிகவும் விசுவாசமானவர்கள். எளிதில் பழகக்கூடிய இயல்புடையவர், மேலும் விஷயங்கள் உங்கள் விருப்பப்படி நடக்கவில்லை என்றாலும் அதிகம் கவலைப்படமாட்டீர்கள்.

8. வாழைப்பழம்

உங்களுக்கு வாழைப்பழம் அதிகம் பிடிக்குமானால், நீங்கள் அன்பானவர் மற்றும் இரக்கமுள்ள நபர். மேலும் நட்பானவர், பண்பானவர் மற்றும் மரியாதைக்குரியவர். உங்களின் இந்த குணத்தால் மற்றவர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்தாலும், நீங்கள் எளிதில் வளைந்து கொடுப்பவரும் அல்ல. மிகவும் விசுவாசமான நண்பராகவும், துணையாகவும் இருப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, May 21, 2026, 19:59 [IST]
Desktop Bottom Promotion