Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க பிறந்த தேதி என்ன-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
Tarot Card Personality Test: ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் வேறுபடும். மேலும் ஒருவரது குணாதிசயங்களை பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். அதில் ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசி, நட்சத்திரம், பிறந்த தேதியைக் கொண்டு குணாதிசயங்களை அறியலாம். இது தவிர சமீப காலமாக டாரட் கார்டு கணிப்புகள் பிரபலமாகி வருகின்றன. டாரட் கார்டு என்பது வேறொன்றும் அல்ல கிளி ஜோசியம் போன்றது தான்.
இந்த டாரட் கார்டு வாசிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு விரைவான அல்லது ஆழமான ஆலோசனைகளைப் பெற உதவுகிறது. இது தவிர ஒருவரது பிறந்த தேதிப்படி அந்நபரின் உண்மையான குணம் எப்படி இருக்கும் என்பதையும் அறியலாம். அந்த வகையில் கீழே ஆஸ்ட்ரோலஜிமேட்ரிக்ஸ் என்னும் இன்ஸ்டா பக்கத்தில் டாடர் கார்டு படி, பிறந்த தேதிப்படி ஒருவரது குணம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் பிறந்த தேதி உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பைல் 1
நீங்கள் 5, 9, 20, 23, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால், நீங்கள் உங்கள் பாதையைப் பற்றியும் நோக்கத்தைப் பற்றியும் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள். நீங்கள் போலியான நம்பிக்கையை வெளிப்படுத்தமாட்டீர்கள். நீங்கள் ஒரு விஷயத்தை அமைதியான வலிமையுடன் வழிநடத்துகிறீர்கள், ஒருபோதும் குழப்பத்துடன் அல்ல. கண்ணியத்துடன் எப்படி வெற்றி பெறுவது என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் கடின உழைப்பையும் மகிழ்ச்சியையும் எளிதாக சமநிலைப்படுத்துகிறீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பாதுகாப்பாகவும், மதிக்கப்படுவதாகவும், ஊக்கமளிக்கப்பட்டவர்களாகவும் உணர்வார்கள். நீங்கள் எப்போதும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு, வளர்ச்சி அடைவீர்கள்.
பைல் 2
நீங்கள் 3, 6, 19, 24, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால், நீங்கள் உலகை ஒரு துணிச்சலான மற்றும் தனித்துவமான பார்வையுடன் பார்க்கிறீர்கள். உங்களின் ஆற்றல் மறக்க முடியாததாகவும், பேரார்வம் நிறைந்ததாகவும் இருக்கும். நீங்கள் விதிகளைப் பின்பற்றுவதில்லை. மாறாக நீங்களே அவற்றை மாற்றி எழுதுகிறீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஆழ்ந்த விசுவாசத்துடன் இருப்பீர்கள். குழப்பமும் புத்திசாலித்தனமும் உங்கள் ஆன்மாவில் ஒன்றாக இருக்கும். நீங்கள் மக்களை சிரிக்க வைக்கிறீர்கள், சிந்திக்க வைக்கிறீர்கள். அதே சமயம் ஆழமாக உணரவும் வைக்கிறீர்கள்.
பைல் 3
1, 10, 17, 21, 22, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால், நீங்கள் தெளிவுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுகிறீர்கள். தயக்கமின்றி உண்மையை பேசுவீர்கள். உங்கள் இலக்குகளை தைரியத்துடனும் கவனத்துடனும் பின்தொடர்வீர்கள். தேவையற்ற குழப்பங்களாலும் கவனச்சிதறல்களாலும் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். மனதளவில் கூர்மையாகவும், தீவிரமான சுதந்திர உணர்வுடனும் இருப்பீர்கள். நீங்கள் ட்ரெண்டுகளைப் பின்பற்றுவதில்லை. நீங்களே ஒரு தரநிலைகளை உருவாக்கி வாழ்வீர்கள்.
பைல் 4
2, 12, 13, 14, 16, 18 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால், நீங்கள் பெரிய கனவுகளைக் கண்டு, அமைதியாக முன்னேறுவீர்கள். இரக்க குணம் கொண்டவர், ஆனால் ஒருபோதும் பலவீனமானவர் அல்ல. எதையும் ஆழமாக உற்றுநோக்கி, புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பாமலேயே பிரகாசிப்பீர்கள். உங்கள் மனமே உங்களின் சூப்பர் பவர். மற்றவர்களால் கவனிக்கக்கூட முடியாத சிக்கல்களை நீங்கள் கவனித்து எளிதில் தீர்ப்பீர்கள்.
பைல் 5
4, 7, 8, 11, 15, 25, 26, 29, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவரானால், நீங்கள் பொறுமைசாலி, நிதானமானவர் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை பெற்றவர். வாழ்க்கை உங்களைச் சோதிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இன்னும் வலிமையாக எழுந்து வருவீர்கள். எப்போதும் எதிலும் அவசரப்படாமல், தெய்வீக நேரத்தை நம்பி விஷயங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் திட்டங்கள் அமைதியானவை, சக்திவாய்ந்தவை மற்றும் நேர்த்தியாக அமைந்தவை. நீங்கள் ஆரவாரத்தை விட உள்ளுணர்வை அதிகம் நம்புவீர்கள். நீங்கள் உண்மையானவர், ஈர்க்கும் சக்தி கொண்டவர் மற்றும் உங்களுக்கு மாற்று வேறு யாரும் இருக்க முடியாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications