Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களுக்கே தெரியாத உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
Zodiac Signs And Personality: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் தனித்துவமான குணங்கள் உள்ளன. அதுவும் இந்த குணங்களானது அந்த ராசியை ஆளும் அதிபதிகளைப் பொறுத்தது. இது தவிர ஒவ்வொரு ராசிகளுக்கும் மறைக்கப்பட்ட பண்புகளும் உள்ளன. ஆனால் இந்த பண்புகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகலாம். இப்படியான மறைமுகமான பண்புகள் ஒருவரது ஆளுமையின் மிகவும் சிக்கலான மற்றும் சுவாரஸ்யமான பக்கத்தை வெளிப்படுத்தலாம்.
இந்த மறைமுகமான பண்புகளை தெரிந்து கொள்வதன் மூலம், ஆழமான புரிதலைப் பெறலாம். மேலும் எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும், சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்ளலாம். உங்கள் ராசிப்படி உங்களிடம் மறைந்துள்ள அந்த சுவாரஸ்யமான குணங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அவர்களைப் பற்றி தெரியாத சில விஷயங்களும் உள்ளன. அது அவர்கள் தங்களின் உணர்ச்சிகளை யாரிடமும் வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருப்பார்கள். இதனால் சில நேரங்களில் இவர்கள் தனிமை விரும்பிகள் என்று அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நடைமுறைக்கு ஏற்றவர்களாகவும், எளிமையானவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் அவர்கள் அழகு, ஆடம்பரம், இன்பத்தை ஆழமாக போற்றுவார்கள். அதாவது ஆடம்பரமான வாழ்க்கையை வாழ அதிகம் விரும்புவார்கள். மிகவும் ரொமான்டிக்கானவர்கள். ஒரு உறவில் இருக்கும்போது, விசுவாசமான மற்றும் அர்ப்பணிப்புள்ள துணையை உருவாக்குவார்கள். மேலும் எப்போதும் ஆறுதல் மற்றும் அரவணைப்பு உணர்வை உருவாக்க முயல்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலித்தனம் மற்றும் தகவமைப்புத் திறனுக்கு பெற்றவர்கள். ஆனால் பெரும்பாலும் இவர்களிடம் கவனிக்கப்படாதது அவர்களின் உணர்ச்சி தான். உண்மையில் இவர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் பச்சாதாபம் கொண்டவர்கள். இவர்கள் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிரமப்படுவார்கள். அப்படியே அவர்கள் தங்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தினாலும், அவர்கள் வெளிப்படுத்துவதை விட அதிக உணர்ச்சிவசப்படுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அவர்கள் உள்வலிமை கொண்டவர்கள். அதுவும் நம்பமுடியாத அளவில் எவ்வளவு பெரிய கஷ்டங்களில் இருந்தும் மீண்டு வந்துவிடுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை கடுமையாக பாதுகாப்பார்கள். அவர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். இது இந்த ராசிக்காரர்களைப் பற்றி பெரும்பாலானோர் அறியாக ஒரு முக்கியமான பண்பாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் என்ன தான் தைரியசாலியாக காணப்பட்டாலும், இவர்களும் மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் எப்போதும் மற்றவர்கள் தங்களை பாராட்ட வேண்டும், அனைவரது கவனமும் தன்மீது இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் இயற்கையான காதல்வாதிகள். எப்போதும் தங்கள் உறவுகளில் நாடக உணர்வையும் உற்சாகத்தையும் உருவாக்க முயல்கிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நடைமுறைக்கு ஏற்றவர்களாகவும், பகுப்பாய்வு செய்வதில் வல்லவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் சிறந்த கற்பனை திறனை கொண்டவர்கள். அதுவும் இவர்கள் எழுத்து முதல் கலை, இசை வரை பல்வேறு படைப்புத் துறைகளில் இயல்பாகவே திறமையானவர்கள். இது நிறைய பேர் அறியாத ஒரு சுவாரஸ்யமான பண்பாகும்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் வசீகரத்திற்கும், ராஜதந்திரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். ஆனால் இவர்களிடம் மறைந்துள்ள ஒரு குணம், இயல்பாகவே முடிவெடுக்க முடியாதவர்கள், முடிவெடுப்பதற்கு முன் பலமுறை யோசிப்பார்கள். மேலும் இவர்கள் தங்கள் உள்ளுணர்வுடன் வலுவான தொடர்பைக் கொண்டு ஆழ்ந்த உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் தீவிரமானவர்களாகவும், சிந்தனையைத் தூண்டுபவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆனால் அவர்களும் மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் உள்ளுணர்வுகளுடன் வலுவான தொடர்பைக் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை உருவாக்க முயல்வார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகச விரும்பிகள். ஆனால் இவர்கள் ஆழ்ந்த உணர்வுள்ளவர்கள் மற்றும் பச்சாதாபம் கொண்டவர்கள். மேலும் உள்ளுணர்வுகளுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளனர். வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தையும் நோக்கத்தையும் எப்போதும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். இவர்களின் உணர்ச்சி சிக்கலான தன்மையைக் கொண்டதால் ஏற்றஇறக்க மனநிலையுடன் இருப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் நடைமுறைக்கு ஏற்றவர்களாகவும், லட்சியவாதிகளாகவும் திகழ்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த போராடுவார்கள். இவர்கள் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டுவதன் மூலம் மட்டுமே, மற்றவர்களுடன் வலுவான தொடர்பை உருவாக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வழக்கத்திற்கு மாறான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் இவர்களும் ஆழ்ந்த உணர்வு உள்ளவர்கள் மற்றும் பச்சாதாபம் கொண்டவர்கள். இயல்பாகவே வழக்கத்திற்கு மாறான உறவுகள் மற்றும் அனுபவங்களால் ஈர்க்கப்படுவார்கள். பெரும்பாலும் முரண்பாடான உணர்வுகளை வெளிப்படுத்துவதால், உணர்ச்சி கொந்தளிப்புக்கு ஆளாவார்கள். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே, இவர்களால் சிறந்த உறவை உருவாக்க முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் உணர்திறன் மிக்கவர்களாகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் நம்பமுடியாத அளவிற்கு மீள்தன்மை கொண்டவர்களாகவும், தகவமைப்புத் திறன் கொண்டவர்களாகவும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் அளவில் வலுவான திறனுடனும் உள்ளனர். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவோ அல்லது எல்லைகளை நிர்ணயிக்கவோ போராடலாம். ஆனால் அவர்கள் நம்பமுடியாத தடைகளை கடக்க வல்லவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











