Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...
Optical Illusion Personality Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி சில புதிர்களைக் கொண்டிருந்தாலும், கண்களை ஈர்க்கும்படி அழகான படங்களாக இருக்கும். இந்த வகையான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
ஒருவரது கண்களுக்கு முதலில் தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எப்படி செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாதிரி இணையத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் பல உருவங்கள் உள்ளன. இதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அது அந்நபரின் ரகசியத்தை தெரியப்படுத்தும். நீங்கள் இந்த சோதனையை எடுக்க தயாராக உள்ளீர்களா? இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை அறிந்து, உங்களின் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
திறந்த புத்தகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு திறந்த புத்தகம் தெரிந்தால், நீங்கள் வலுவான உள்ளுணர்வைக் கொண்டிருப்பீர்கள். வெளிப்படையானவர் மற்றும் அதிக தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பீர்கள். உங்களிம் ஆலோசனை பெற பலரும் உங்களிடம் வருவார்கள். எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் சமாளிப்பீர்கள்.
ரோஜா
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ரோஜா தெரிந்தால், அன்பு தான் உங்களின் மிகப்பெரிய ஆயுதம். உங்களுக்கு அழகாக தோன்றுவதை விரைவில் பெறுவீர்கள். பிரச்சனைகளில் ஈடுபட விரும்பமாட்டீர்கள். எப்போதும் அமைதியையே விரும்புவீர்கள்.
சிலுவை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு சாய்ந்த சிலுவை தெரிந்தால், காதலில் நீங்கள் விழுவது மிகவும் கடினம். யாராலும் உங்களை அவ்வளவு எளிதில் காதலில் விழ வைக்க முடியாது. ஆனால் சில சமயங்களில் உங்கள் உணர்ச்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க வலுவான ஒருவருடன் எப்போதும் சேர்ந்திருப்பீர்கள். எந்த வேலையை செய்தாலும், அதை எப்போதும் சிறப்பாக செய்ய முயற்சிப்பீர்கள்.
பலூன்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு பலூன்கள் தெரிந்தால், நீங்கள அலைப்பாயும் மனதைக் கொண்டிருப்பீர்கள் மற்றும் அதிக பகல்கனவு காண்பீர்கள். நீங்கள் எதையாவது செய்ய முடிவெடுத்தால், அதை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். ஒருபோதும் நம்பிக்கையை கைவிடமாட்டீர்கள்.
ஆந்தை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஆந்தை தெரிந்தால், அன்பை கண்டறிவதே உங்களின் குறிக்கோளாக இருக்கும். அதிக கருணை உள்ளம் கொண்டிருப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். எளிதில் மன்னிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருப்பீர்கள்.
சிங்கம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு சிங்கம் தெரிந்தால், நீங்கள் தைரியமானவர்கள். மிகுந்த தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பீர்கள். நேர்மையானவர் மற்றும் யாரையும் கண்மூடித்தனமாக நம்பமாட்டீர்கள். கடின உழைப்பாளிகள்.
சிரித்த முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு சிரித்த முகம் தெரிந்தால், நீங்கள் வேடிக்கையானவர் மற்றும் கவலையற்ற நபர். உங்களின் நகைச்சுவை உணர்வு உங்களை சுற்றியிருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். உங்களுக்கு பிடித்தவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பீர்கள்.
டை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் டை தெரிந்தால், நீங்கள் கடின உழைப்பாளி மற்றும் ஒழுக்கமான நபர். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கமாட்டீர்கள். ஒரு வேலையை செய்யும் போது, அதில் முழு கவனத்தை செலுத்தி முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications