Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
Numerology: இந்த 5 தேதில பிறந்தவங்களுக்கு மன்னிக்கும் குணம் துளியும் இருக்காதாம்..பழிவாங்கியே தீருவாங்களாம்!
Numerology: நியூமராலஜி என்பது ஒரு நபரின் பிறந்தநாளைப் பயன்படுத்தி சில குணாதிசயங்களையும்,ஆளுமையையும் கணிக்கும் ஒரு பழமையான அறிவியல் ஆகும். ஜோதிடம் போலவே இந்த அறிவியலும் பல நூற்றாண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் மனதில் எப்போதும் மனக்கசப்பை சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் முந்தைய பிரச்சினைகளில் இருந்து எளிதில் வெளிவர மாட்டார்கள் மற்றும் தங்களுக்கு தீங்கிழைத்தவர்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும் பகையை சுமந்து கொண்டிருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 1 (அனைத்து மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
அவர்களின் உறுதிப்பாடு மற்றும் பிடிவாதம் காரணமாக, இந்த எண்ணில் பிறந்தவர்கள் மனக்கசப்பை சுமக்கும் போக்குகளை கொண்டிருக்கலாம். அவர்கள் எப்போதும் கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டைகளில் இருந்து பின்வாங்க மறுக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் வலுவான சுய மரியாதையைக் கொண்டுள்ளனர்.
வாழ்க்கைப் பாதை எண் 1 உள்ளவர்கள், முந்தைய பிரச்சினைகளை விட்டுவிடுவது கடினமாக இருக்கலாம், ஏனெனில் மனக்கசப்பைக் கடைப்பிடிப்பது, மேலும் பாதிப்படைவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
எண் 9 (அனைத்து மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் உணர்திறன் வாய்ந்தவர்கள் மற்றும் கனிவானவர்கள், ஆனால் அவர்களின் வலுவான உணர்ச்சிகளின் காரணமாக, அவர்கள் சில நேரங்களில் மனக்கசப்பைக் கொண்டிப்பார்கள். சாதகமற்ற உணர்வுகளை விட்டுவிடவும், கடந்தகால காயங்களிலிருந்து வெளிவரவும் அவர்கள் போராடலாம்.
வாழ்க்கைப் பாதை எண் 9 உள்ளவர்கள், எதிர்காலத்தில் காயமடைவதைத் தவிர்ப்பதற்கு ஒரு பாதுகாப்பு செயல்முறையாக மனதில் வெறுப்பைக் கொண்டிருக்கலாம்.
எண் 4 (அனைத்து மாதத்திலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்கள் மற்றும் யதார்த்தமானவர்கள் என்றாலும், இந்த மக்கள் தங்கள் பிடிவாதத்தால் மனக்கசப்பைக் கொண்டிருக்கலாம். சரி மற்றும் தவறு பற்றிய வலுவான உணர்வைக் கொண்டிருப்பதால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதற்கு காரணமானவர்களை மன்னிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். வாழ்க்கைப் பாதை எண் 4 உள்ளவர்கள் தங்கள் ஒழுக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிலைநிறுத்துவதற்காக மனக்கசப்பைக் கொண்டிருக்கலாம்.
எண் 5 (அனைத்து மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சாகச மற்றும் சுதந்திரமான மனப்பான்மையைக் கொண்டிருந்தாலும், இந்த மக்கள் ஆக்ரோஷமானவர்களாக இருக்கலாம் மற்றும் வெறுப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் போக்கைக் கொண்டிருக்கலாம்.
தகராறு அல்லது வாக்குவாதம் ஏற்படும் போது, அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக பதிலளித்து, அந்த நேரத்தில் மனக்கசப்பைக் கொண்டிருக்கலாம். வாழ்க்கைப் பாதை எண் 5 உள்ளவர்கள் எதிர்காலத்தில் தங்களின் திடீர் முடிவுகளுக்காக வருத்தப்பட நேரிடலாம், ஆனால் அவர்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டவுடன், அதிலிருந்து வெளிவருவது மிகவும் கடினமாக இருக்கலாம்.
எண் 8 (அனைத்து மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சுய உந்துதல் மற்றும் லட்சியம் கொண்டவர்கள் என்றாலும், அவர்களின் சாதனைக்கான தாகம் அவர்களை அடிக்கடி வெறுப்படையச் செய்கிறது. அவர்களின் தொடர்புகள் மற்றும் உறவுகளில் கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாக அவர்கள் மனக்கசப்பைக் காணலாம்.
வாழ்க்கைப் பாதை எண் 8 உள்ளவர்கள் மற்றவர்களை மன்னிப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம், ஏனென்றால் அது பலவீனத்தின் வெளிப்பாடாகக் கருதப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
