Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அதிர்ஷ்டத்திற்காக உலகின் மற்ற நாடுகளில் புத்தாண்டின் முதல் நாளில் என்னென்ன செய்றாங்க-ன்னு தெரியுமா? இத படிங்க
New Year 2024: புதிய ஆண்டில் நுழைய இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. வருகிற 2024 ஆம் ஆண்டை சிறப்பாக வரவேற்க அனைவரும் தயாராகிக் கொண்டிருப்போம். பலரும் வருகிற புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று பல காரியங்களை புத்தாண்டின் முதல் நாளில் மேற்கொள்வார்கள்.
உலகின் பெரும்பாலான பகுதியில் டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடினாலும், அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் வேறுபாடுகள் உள்ளன. புத்தாண்டை உலகின் ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதத்தில் கொண்டாடுவார்கள்.

ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரமும் அதன் தனித்துவமான மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளது. இப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில சுவாரஸ்யமான புத்தாண்டு பாரம்பரியங்களைக் காண்போம்.
1. ஸ்பெயின்
ஸ்பெயினில், புத்தாண்டின் நள்ளிரவில் 12 திராட்சைகளை சாப்பிடும் ஒரு பாரம்பரிய வழக்கம் உள்ளது. இதில் ஒவ்வொரு திராட்சையும், புதிய ஆண்டின் ஒவ்வொரு மாதத்தின் அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது.
2. ஜப்பான்
ஜப்பானிய மக்கள் புத்தாண்டின் முதல் நாளில் கோவில் மணிகளை 108 முறை அடிப்பார்கள். இதில் 108 என்பது மனிதர்களுக்கு துன்பங்களை ஏற்படுத்தும் பூமிக்குரிய ஆசைகளைக் குறிக்கிறது.
3. ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து மக்கள் புத்தாண்டு நள்ளிரவுக்கு பின், ஜனவரி 1 ஆம் தேதி வீட்டிற்கு நுழையும் முதல் நபரை அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவராக கருதுவதோ, அந்நபரை "பர்ஸ்ட் பூட்டர்" என்று அழைப்பார்கள்.
4. பிரேசில்
பிரேசில் மக்கள் புத்தாண்டின் முதன் நாள் இரவு வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, கடலின் தெய்வமான யெமன்ஜாவுக்குப் பூக்களை படைக்கும் வகையில் பூக்களை கடலில் தூக்கி எறியும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
5. டென்மார்க்
டென்மார்க்கில் உள்ள ஒரு வினோதமான புத்தாண்டு பாரம்பரியம் என்றால், நட்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் கதவுகளில் தட்டுகளை தூக்கி எறிவார்களாம். எப்படியெல்லாம் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள் என்று பாருங்கள்.
6. கிரீஸ்
கிரேக்க மக்களின் புத்தாண்டு பாரம்பரிய வழக்கம் வாசிலோபிதா எனப்படும் கேக்கில் ஒரு நாணயத்தை வைத்து பேக்கிங் செய்வார்கள். அந்த கேக்கில் உள்ள நாணயத்தை யார் முதலில் கண்டு பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
7. தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் புத்தாண்டு நாளில் மக்கள் பழையதை அகற்றி புதியதை வரவேற்பதைக் குறிக்கும் வகையில், வீட்டில் உள்ள பழைய ஃபர்னிச்சர்களை வீட்டின் ஜன்னல் வழியாக தூக்கி வீசுவார்களாம்.
8. பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் மக்களின் நம்பிக்கைகளின் படி, வட்ட வடிவம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நினைக்கின்றனர். அதனால் புத்தாண்டு நாளில் போல்கா புள்ளி கொண்ட ஆடைகளை அணிவது, வட்ட வடிவ பழங்களை உட்கொள்வது என்பன போன்ற பழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
9. ரஷ்யா
ரஷ்ய மக்கள் புத்தாண்டு நாளில் தங்களின் விருப்பங்களை ஒரு துண்டு பேப்பரில் எழுதி, அதை எரித்து, அந்த சாம்பலை ஷாம்பெயினில் கலந்து குடிப்பார்களாம். என்ன ஒரு வித்தியாசமான பழக்கம்.
10. அமெரிக்கா
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான புத்தாண்டு பாரம்பரியம் என்றால் அது நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் பந்தை வீழ்த்துவது தான். இப்படியான செயல் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications