For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் கொண்டாடும் தமிழச்சி டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் பற்றி தெரியாத உண்மைகள்...!

இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் 133 வது பிறந்த நாள். இன்று கூகுளின் முகப்பில் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் ஓவியத்தை வைத்துள்ளது.

|

இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் 133 வது பிறந்த நாள். இன்று கூகுளின் முகப்பில் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் ஓவியத்தை வைத்துள்ளது. தமிழநாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண் இவ்வளவு பெரிய உயரத்திற்கு உயந்தது எப்படி? அப்படி என்ன அவர் சாதித்து விட்டார்? என்று நினைத்தால் அது நமது அறியாமை ஆகும்.

Google Doodle Celebrates Muthulakshmi Reddis Birthday

அவரின் சாதனைகளுக்கும், அவர் ஆற்றிய சேவைகளுக்கும் அவருக்கு எவ்வளவு உயரிய கௌரவம் வேண்டுமென்றாலும் வழங்கலாம். இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக மட்டுமின்றி முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் முத்துலட்சுமி அம்மையார்தான். முத்துலட்சுமி அம்மையாரின் வரலாறு பற்றி தெரியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முத்துலட்சுமி அம்மையாரின் பிறப்பு

முத்துலட்சுமி அம்மையாரின் பிறப்பு

முத்துலட்சுமி அம்மையார் 1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நாராயணசாமி மற்றும் சந்திரம்மா என்ற தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். அம்மையார் பிறந்து, வளர்ந்து நாட்களில் பெண்ணடிமைத்தனம் தலைவிரித்தாடியது. பெண்களுக்கு கற்கும் உரிமை அறவே மறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராய் உயர அவர்கள் எவ்வளவு தடைகளை தாண்டி வந்திருப்பார்கள்.

தடைகளை உடைத்து கல்லூரி படிப்பு

தடைகளை உடைத்து கல்லூரி படிப்பு

தனது முயற்சியாலும், தந்தையின் உதவியாலும் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் பள்ளி படிப்பை முடித்தார். பருவ வயதை அடைந்தவுடன் திருமணம் செய்துவைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தன் தாயின் விருப்பத்திற்கு எதிராக கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். கல்வி ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை உரிமை என்று அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர், மகாராஜாவின் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அந்த கல்லூரியில் முதல் பெண்ணாக புதுக்கோட்டை மகாராஜா அவர்களாலேயே முத்துலட்சுமி அம்மையாருக்கு சேர்க்கை வழங்கப்பட்டது. அந்த கல்லூரியின் முதல்வரே இதனை எதிர்த்தார்.

மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்பு

தனது சொந்த ஊரிலேயே இளநிலை படிப்பை முடித்த முத்துலட்சுமி அம்மையாருக்கு மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் அவருக்கு சரோஜினி நாயுடு, அன்னி பெசன்ட் போன்றோருடனான நட்பு கிடைத்தது. படிப்பின் மீதான அவரின் ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் தங்க மெடலுடன் 1912 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக முத்துலட்சுமி அம்மையார் மாறினார். மேலும் மெட்ராஸில் இருந்த அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் முதல் பெண் ஹவுஸ் சர்ஜன் ஆனார்.

MOST READ:உங்ககிட்ட பழகுறவங்களோட உண்மையான குணத்த அவங்க கைகுலுக்குற முறையை வைச்சே ஈஸியா தெரிஞ்சிக்கலாம்...!

சட்டமன்ற குழு

சட்டமன்ற குழு

முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் தனது மேற்படிப்பை லண்டனில் தொடர்ந்தார். ஆனால் இந்திய மகளிர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அதனை பாதியில் விட்டுவிட்டு மதராஸ் சட்டமன்ற குழுவில் சேர்ந்தார். 1927 ஆம் ஆண்டு மெட்ராஸ் சட்டமன்ற குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடத் தொடங்கினார். பாலின சமத்துவத்தை உருவாக்குவதே அவரின் இலட்சியமாக இருந்தது. அதேசமயம் அவர் சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

 சமூக சீர்திருத்தங்கள்

சமூக சீர்திருத்தங்கள்

பெண்களுக்கு எதிரான அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் போராடினார்கள். குறிப்பாக தேவதாசி முறையை ஒழித்ததில் இவரின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும் அந்த காலகட்டத்தில் ஆணின் திருமண வயதை 21 ஆகவும், பெண்ணின் திருமண வயதை 16 ஆகவும் மாற்ற மசோதா தாக்கல் செய்தார். முஸ்லீம் பெண் குழந்தைகளுக்காக விடுதிகளை திறந்தார். தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு உதவித்தொகை கிடைக்க செய்தார். இன்னும் பல சமூக சீத்திருத்தங்களை கொண்டுவந்தார்.

புற்றுநோய் மருத்துவமனை

புற்றுநோய் மருத்துவமனை

தனது சகோதரி புற்றுநோயால் இறந்ததை கண்டு அவர் மனம் வருந்தினர். எனவே புற்றுநோயை குணப்படுத்த ஒரு விஷேச மருத்துவமனையை தொடங்க எண்ணினார். அதற்காக அவர் 1954 ல் தொடங்கியதுதான் அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஆகும். ஆண்டுக்கு 80,000 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையால் உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

MOST READ:உங்கள் உணவில் முட்டைக்குப் பதில் இந்த சைவ பொருட்களை கொண்டே அதற்கு சமமான ஊட்டச்சத்தைப் பெறலாம்...!

விருதுகள்

விருதுகள்

இந்தியாவின் பல உயரிய விருதுகள் முத்துலட்சுமி அம்மையாருக்கு வழங்கப்பட்டது. இவரின் மகத்தான சேவைகளை பாராட்டி 1956 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரின் பிறந்த நாளை மருத்துவத்தின் நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.பெண் விடுதலைக்காக இறுதி வரை போராடிய முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் 1968 ஆம் ஆண்டு தன்னுடைய 81 வது வயதில் இயற்கை எய்தினார். இவரின் இலட்சியங்களும், பெண் விடுதலை உணர்வும் இன்றும் பல பெண்களுக்கு ஊக்கமளிப்பதாய் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Google Doodle Celebrates Muthulakshmi Reddi's Birthday

Read to know why google doodle celebrates muthulakshmi reddi's birthday.
Desktop Bottom Promotion