For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட! சின்ன வீடு பபிதாவா இது... எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க... சரி இப்ப என்ன பண்றாங்க

By Mahibala
|

80 களில் வந்த பாக்யராஜ் படங்கள் என்றாலே அதில் காமெடிக்கும் கிளுகிளுப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு படத்திலும் தினுசு தினுசாக நடிரககளை இறக்கிக் காட்டுவார். இப்படி அந்த படம் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சத்தைக் கிறங்கடிக்கச் செய்த படம் என்றால் சின்ன வீடு படம் தான். அந்த படத்தில் பாக்யராஜைப் போல எல்லோரையும் கவர்ந்து இழுத்தது பபிபா தான். யார் இந்த பபிதா. இந்த படத்துக்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார். அதன் பின் என்ன ஆனார்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்

Actress Chinna Veedu Babitha

யார் இந்த பபிதா. இந்த படத்துக்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார். அதன் பின் என்ன ஆனார்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி சிரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இவர்

யார் இவர்

நம்ம வாத்தியார் படங்களில் எம்ஜிஆருடன் சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பார். ரகசியப் போலீஸ் 115 படத்தில் எம்ஜிஆருடன் நேருக்கு நேர் சண்டை போடும் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆம். அவர் எம்ஜிஆருக்கு நெருங்கிய நண்பரும் கூட. அவர் பெயர் தான் ஜஸ்டின். அந்த ஜஸ்டினுடைய மகள் தான் நம்ம பாக்யராஜின் சின்னவீ படத்தில் நடித்த கவர்ச்சி நடிகை பபிதா. இவருடைய சொந்த ஊர் நாகர்கோவில்.

MOST READ: தினமும் நைட் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா?

சினிமாவில் பிரபலம்

சினிமாவில் பிரபலம்

1980 களில் நடிகை பபிதா கவர்ச்சி வேடங்களில் ஒரு ரவுண்டு வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதில் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த படம் என்றால் அது சின்ன வீடு என்று தான் சொல்ல வேண்டும்.

நாயகன்

நாயகன்

கமல்ஹாசனின் மாஸ்டர் பீஸான நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி என்னும் பாடலுக்கு நடனம் ஆடுகிற பெண் யார் என்று நினைத்தீர்கள். அது இந்த சின்ன வீடு பபிதா தான்.

பாக்யராஜ் படங்கள்

பாக்யராஜ் படங்கள்

பாக்யராஜ் படங்களில் பெரும்பாலானவற்றில் கவர்ச்சி நடிகைகளுக்கென தனி இடமுண்டு.

பாக்யராஜின் பவுனு பவுனு தான் படத்தில் ஐஸ் ஃபுரூட் மாமியாக வருவார்.

அதையடுத்து தான் சின்ன வீடு படத்தில் பாக்யராஜின் சின்ன வீடாக வருவார். அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமே இந்த பபிதா தான். சும்மா சொல்லக்கூடாது. ஆளு சும்மா ஸ்லிம்மா... செம ஃபிகரா தான் இருப்பாங்க.

MOST READ: நீங்க எந்த மாதம் பிறந்தீங்கனு சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ஒரு ரகசியத்த சொல்றோம்...

ஷகிலா

ஷகிலா

கவர்ச்சி பாம், கவர்ச்சிக் கன்னி என்று அழைக்கப்படுகிற நம்ம ஷகீலாவுக்கு இன்னொரு கவர்ச்சி நடிகையான பபிதா காமெடி கன்னி என்னும் பட்டத்தையும் கொடுத்துள்ளாது. இது விளையாட்டுக்காக அல்ல. சீரியஸாகவே காமெடி கதாபாத்திரங்களில் ஷகீலா சிறப்பாக நடிப்பதாகவும் பாராட்டியிருக்கிறார்.

படத் தயாரிப்பு

படத் தயாரிப்பு

காதலை மறந்தேன் என்னும் பெயரில் பபிதா தன்னுடைய மகளான லஷாவை வைத்து ஒரு திரைப்படம் தயாரித்தார். அந்த படத்திலும் ஷகீலாவுக்கு ஒரு முக்கியமான ரோல் கொடுத்திருக்கிறார்.

அரசியல் பிரவேசம்

அரசியல் பிரவேசம்

தன்னுடைய தந்தை எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் என்பதால் இயல்பாகவே அதிமுக காரராக பபிதா வலம் வந்தார். ஜெயலலிதா மீது அதீத அன்பு கொண்டிருந்தார். அதனா்ல கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.

நடுத்தெருவில் தேய்காய் உடைப்பது

நடுத்தெருவில் தேய்காய் உடைப்பது

ஜெயலலிதா சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தவுடன் சந்தோஷத்தில் கூடை கூஐடயாக தேங்காய்களை வாங்கி, நடுத் தெருவில் தேய்காய் உடைத்து கொண்டாடினார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது கண்ணீர் விட்டு அழுததை பார்த்திருப்போம்.

MOST READ: இந்த மூனு ராசிக்கு வர்ற அதிர்ஷ்டத்த பார்த்து மத்தவங்களுக்கு வயிறு எரியப் போகுது...

பிரச்சாரம்

பிரச்சாரம்

இதன் பின் சிறிது காலம் அவரைப் பற்றி செய்திகள் எதுவும் வராத நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறாராம். சமீபத்தில் கரூர் தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து வாக்கு சேகரித்திருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Glamour Actress Chinna Veedu Babitha

Chinna Veedu release in year 1985. Directed by K Bhagyaraj. babitha is a second heroine of this movie. after her journey her daughter also entered the cinema.
Story first published: Monday, April 8, 2019, 12:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more