Just In
- 2 hrs ago
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- 2 hrs ago
பெண்களே! இந்த காலத்தின்போது உங்க உடல் எடை அதிகரிக்குமாம்... கவனமா இருங்க..!
- 3 hrs ago
கொரோனா வைரஸ் உங்க இதயத்தை மோசமா பாதிச்சிட்டிருக்கு என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!
- 3 hrs ago
பெண்கள் 'அந்த' விஷயத்துக்கு சரிப்பட்டு வரமால் போக காரணம் இந்த பிரச்சினைகள்தானாம்... பாத்துக்கோங்க...!
Don't Miss
- News
சீனாவில் கொரோனா எப்படி தோன்றியது.. கண்டுபிடிக்க முடியாமலே போகலாம்.. உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்
- Finance
வரி சலுகைக்காக டெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..?!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Sports
ஹைதராபாத்திலிருந்து சிட்னிக்கு பறந்த போன் கால்.. சிராஜை சிகரம் தொட வைத்த அந்த சம்பவம்.. பின்னணி!
- Movies
அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவிட்டல் ரசிகர்கள் ஷாக்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய கிரிக்கெட் வீரர்களோட மனைவிகள் திருமணத்துக்கு முன்பு என்ன வேலை செஞ்சாங்கனு தெரியுமா?
நம்முடைய இந்திய கிரிக்கெட் வீரர்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் விரும்புவதற்குக் காரணம் வெறுமனே அவர்கள் மைதானத்தில் விளையாடுவதால் மட்டுமல்ல. அவர்களுடைய வாழ்க்கை முறை, ஸ்டைல் என நிறைய விஷயங்களுக்காக ரசிக்கப்படுகிறார்கள். அதில் அவர்களுக்கு முற்றிலும் உறுதுணையாக இருக்கிற மனைவிகளை நேசிக்கும் விதமும் அடங்கும். அப்படி நம்ம வீரர்கள் காதலிக்கும் அவர்களுடைய பக்கபலமாக இருக்கும் மனைவிகள் திருமணத்துக்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
நம்முடைய கிரிக்கெட் வீரர்களின் மனைவியோ அல்லது காதலியோ வீரர்களை விட அதிக அளவு பொது மக்களால் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களின் கண்களை விட்டு தப்பித்துப் போகவே முடியாது.

ஹாசின் ஜகான் (hasin jahan)
ஹாசின் ஜகான் முகமது ஷமியைத் திருமணம் செய்யும் முன் பிரபல மாடலாக இருந்தார். நம்முடைய இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார்.
MOST READ: முந்திரியில் கொலஸ்ட்ரால் இருக்குதான்... ஆனா ஒரு நாளைக்கு எத்தனை வரை சாப்பிடலாம்?

பிரியங்கா சௌத்ரி (priyanka chaudhary)
பிரியங்கா சௌத்ரி திருமணத்துக்கு முன்பாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். முதலில் சாப்ட்வேர் இன்ஜினியராகவும் பின் சிறிது காலம் பேங்க்கில் பணியிலும் இருந்த இவர் சமூக செயற்பாட்டாளராகவும் மக்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர் யாரும் இல்லங்க. நம்ம சுரேஷ் ரெய்னாவோட மனைவி தான்.

கீதா பஸ்ரா (geeta basra)
நம்ம ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ரா பிரபல பாலிவுட் நடிகையாவார். இவர் திருமணத்துக்கு முன்பு மாடலாகவும் முன்னணி நடிகையாகவும் இருந்து வந்தார்.

ரித்திகா ரித்திகா சஜ்தே (ritika sajdeh)
ரித்திகா சஜ்தே திருமணத்துக்கு முன்பாக முக்கிய முன்னணி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். நிறைய பிரபல முன்னணி கிரிக்கெட்டர்கள் இவருடைய கிளைண்ட்டுகளாக இருந்திக்கிறார்கள். இவர் திருமணம் செய்து கொண்டது நம்ம ஹிட்மேன் ரோஹித் சர்மாவை தான்.

சாக்க்ஷி (sakshi dhoni)
நம்ம தல தோனி திருமணம் செய்து கொண்ட சாக்க்ஷி திருமணத்துக்கு முன்பாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் இருந்தவர். ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் இவர் தன்னுடைய பட்டப்படிப்பை ஒரௌங்காபாத்தில் முடித்தார்.
MOST READ: பெத்தவங்க பேரை நெஞ்சுல பச்சை குத்தின புள்ளைய பெற்றோரே அடிச்சு கொன்ன கொடூரம்...

ஹெசல் கீச் (hazel keech)
ஹெசல் கீச் பிரிட்டிஷ் - மௌரியன் மாடலாக இருந்தவர். திருமணத்துக்கு முன்பு நடிப்பும் மாடலிங்கும் தான் இவருடைய தொழிலாக இருந்தது. இவர் இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா ஷர்மா (anushka sharma)
பாலிவுட்டில் இன்றைக்கு இருக்கிற முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் தான் அனுஷ்கா ஷர்மா. இவர் பாலிவுட் படங்களில் கதாநாயகியாக மட்டுமில்லாமல், பாலிவுட் படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் திருமணம் செய்து கொண்டது புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியைத் தான்.

சீதல் கௌதம் (seetal gautam)
சீதல் கௌதம் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவின் மனைவி. திருமணத்துக்கு முன்பு இவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியுமா? இவரும் ஒரு விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் தான். இவர் ஒரு டென்னிஸ் பிளேயர். இவர் தன்னுடைய துறையில் நிறைய சாதனைகளைப் புரிந்திருக்கிறார்.

விஜீதா பெந்தர்கர் (vijetha pendharkar)
விஜீதா பெந்தர்கர் ஒரு மெடிக்கல் சர்ஜன் டாக்டர். இவர் யார்னு தெரியுமா? கிரிக்கெட்டில் இந்தியாவின் தடுப்புச் சுவர்னு செல்லமா அழைக்கப்படுகிற ராகுல் டிராவிட்டின் மனைவி தான் இவர். மருத்துவராக இருந்தாலும் தன்னுடைய கணவர் சாதனைகளுக்கு பக்கபலமாக இருப்பவர்.
MOST READ: ஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்... யார் அந்த சிறுமி?

ஆர்த்தி (aarthi)
இந்தியாவின் மிகப் பிரபல கிரிக்கெட் வீரரான விரேந்திர சேவாகின் மனைவி தான் ஆர்த்தி. இவர் திருமணத்துக்கு முன்பு, மக்களுக்கான பணியாற்றுகிற பொதுத் துறைகளில் ஒன்றான மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வந்தார். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக தன்னுடைய வேலையை விட்டுவிட்டு குடும்பத் தலைவியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.