TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இறந்த மகனின் விந்து பயன்படுத்தி இரட்டையர்கள் பெற்றெடுத்து இந்திய பெண்மணி!

ஒவ்வொரு தாயின் பெரும் சந்தோஷமே தன் பிள்ளைகள் ஆரோக்கியத்துடனும், அனைத்து நலனும் பெற்று வாழ்வது தான். தான் பெற்றெடுத்த குழந்தைகள் வளர்ந்து சொந்த காலில் நிற்கும் போது எந்த ஒரு தவறும் செய்திடாமல், நல்லப்படியாக இந்த உலகில் வாழ வேண்டும் என்பது தான அனைவரின் ஆசையாகவும் இருக்கும்.
ஆனால், அனைவருக்கும் இப்படியான வரம் கிடைத்திடுவதில்லை. சிலரது மகிழ்ச்சி இடையே களவாடப்பட்டுவிடுகிறது. அப்படியாக தான் இந்திய பெண்மணி ஒருவரின் மகிழ்ச்சியும் திடீரென களவாடப்பட்டது. அவரது மகிழ்ச்சி திடீரென ஒரு நாள் காணாமல் போனது.
யோசித்து பாருங்கள், கண்முன்னே ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த மகன் திடீரென புற்றுநோய் காரணமாக இறந்தால், எந்த தாயால் தான் தாங்கிக் கொள்ள முடியும். கிட்டத்தட்ட அந்த பெண்ணின் வாழ்க்கையே தலைக்கீழாக புரட்டிப்போட்ட மாதிரி ஆகிவிடும் அல்லவா?
ஆனால், தான் இழந்த மகனையும், மகிழ்ச்சியையும்... இறந்த மகனின் விந்து பயன்படுத்தி இரண்டு பேரப்பிள்ளைகள் பெற்றெடுத்து, உலகை வியக்க செய்துள்ளார் இந்தியாவை சேர்ந்த ராஜஸ்ரீ பாட்டில்.
குடும்பம்!
கடந்த 2010ம் ஆண்டு வரை ராஜஸ்ரீயின் குடும்பம் கட்சிதமான சூழலில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதில் திடீர் திருப்பமாக அவரது மகன் பிரதமேஷ் பாட்டில் ஜெர்மனியில் மாஸ்டர் டிகிரி படித்து வந்த போது திசை மாறியது. ஆம், அப்போது தான் பிரதமேஷ்க்கு மூளையில் புற்றுநோய் இருப்பது அறியவந்தது.
உடனடியாக!
அந்நிலையில் பிரதமேஷ்க்கு உடனடியாக சிகிச்சை தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரைத்தனர். மேலும், கீமோதெரபி மேற்கொள்ளும் முன்னர் பிரதமேஷின் விந்தணுக்களை பதப்படுத்தும் முறையில் சேமித்துக் கொள்ளலாம் என்று அறிவுரை கூறினார்கள்.
இதனால், எதிர்காலத்தில் இவரால் குழந்தை பெற்றுக் கொள் முடியும் என்பதை ஊர்ஜிதம் செய்தனர்.
இந்தியா!
சிகிச்சைக்காக பிரதமேஷ் ஜெர்மனியில் இந்தியா திரும்பிய போது அவரது புற்றுநோய் நான்காம் நிலையில் இருந்தது. வலிப்பு காரணமாக மிகவும் அவதிப்பட்டார். அவரது கண்பார்வையும் பறிபோனது. ஆனால், இந்தியாவில் பிரதமேஷ்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக அவரது நிலை முன்னேற்றம் காண துவங்கியது.
போராட்டம்!?
தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தனது புற்று நோயுடன் போராடி வந்தார் பிரதமேஷ். கடைசியில், கடந்த 2016 செப்டம்பர் மாதம் மீண்டும் ஒருமுறை வலிப்பு வந்தது. அப்போது தான் மீண்டும் புற்று நோய் வளர்ந்து வருவதை அறிந்தனர்.
அந்த புற்று மிகவும் வீரியம் வாய்ந்ததாக இருந்தது. போராடி மரணம் அடைந்தார் பிரதமேஷ்.
விந்து எடுத்துவர முடிவு!
பிரதமேஷ் ஜெர்மனியில் இருந்த போது, புற்றுநோய் கண்டறியப்பட்ட ஆரம்பத்திலேயே மருத்துவர் அறிவுரையின் படி விந்து சேமிக்கப்பட்டிருந்தது.
பிரதமேஷ் இறந்த பிறகு, அதை ஜெர்மனியில் இருந்து இந்தியா கொண்டுவர முடிவு செய்தார் பிரதமேஷின் தாயார் ராஜஸ்ரீ பாட்டில். ஜெர்மனின் விந்து வங்கியை தொடர்பு கொண்டு முறைப்படி செய்ய வேண்டியதை எல்லாம் செய்து, தன் மகனின் விந்தை எடுத்து வந்தார். மேலும், அந்த விந்து மூலம் வாடகை தாயாக மாறி, குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தார்.
உணர்ச்சி பூர்வமான பயணம்...
வெற்றிகரமாக தனது மகனின் சேமிக்கப்பட்ட விந்து கொண்டு இரட்டையர் குழந்தைகள் பெற்றெடுத்தார் ராஜஸ்ரீ பாட்டில். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மகனை இழந்த தாய்க்கு, தனது பேரக் குழந்தைகளை தானே பெற்றெடுக்கும் நிலை உண்டானது. இது எளிதான காரியம் அல்ல. ஆனால், அறிவியல் துணையால் இந்த அதிசயம் வெற்றிகரமாக நடந்தது.
இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் சாத்தியம் என்பதை நாளுக்கு, நாள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.