For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இருட்டு அறையில் முரட்டு குத்து... இத ஏன் நீங்க கவனிக்கல...

  |

  நாம் இங்கே சில காட்சிகளை பற்றி விவாதிக்க போகிறோம். நிச்சயம் இந்த காட்சிகளில் ஆபாசம், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள்... பலான செய்கை செய்யும் பேய்கள் இடம் பெற போவதில்லை.

  இந்த காட்சிகள் அனைத்திலும் உங்கள் மனசாட்சி இடம்பெறும். நாம் குற்றம் குறை கூறியே பழகி போய்விட்டோம். அதனால், சிலவற்றை சிந்திக்கவும், பேசவும் மறந்துவிட்டோம்.

  Why Self Control is More Important? Things to Know!

  எதிர்ப்புகள், போராட்டங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை, இச்சை, கலாச்சார சீர்கேடு போன்ற சம்பவங்கள் அனைத்திலும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன... இருத்தரப்பில் இருப்பவர்களும் தங்கள் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை மட்டுமே கூறி, எதிர்ப்புறம் இருப்பவர்களை குற்றவாளியாக்க முயற்சிப்பார்கள்.

  ஆனால், இங்கே இரண்டு தரப்பில் இருப்பவர்களும் இழந்த ஒரு விஷயம் இருக்கிறது... அதை பற்றி இங்கே நாம் சில காட்சிகளை எடுத்துக்காட்டாக கொண்டு அலசப் போகிறோம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காட்சி: 1

  காட்சி: 1

  கர்நாடகாவில் இருந்து நீர் கிடைக்கும் வரை, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கக் கூடாது என போராட்டங்கள் நடந்தன. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தும், சென்றவர்களை அடித்தும் கூட சில போராட்டக் காரர்கள் கடுமையாக நடந்துக் கொண்டனர். ஒருபுறம் ஸ்கோரா, சோறா என முழக்கங்கள்... மற்றொருபுறம் ஐபிஎல் போட்டிகளை தடுத்து நிறுத்திவிட்டால் காவிரி வந்துவிடுமா என கேள்விகள்.

  காட்சி: 2

  காட்சி: 2

  இருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் ஒரு படமா? இது கலாச்சார சீர்கேடு. இப்படியான படங்கள் தான் சினிமா துறையையும், ரசிகர்கள் ரசனையையும் சீர்குலைந்து போக செய்கிறது. இப்படியான படைப்புகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை.

  ஹரஹர மகாதேவகி போன்ற படங்கள் வெளியான போதே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். சினிமா என்ற கலையை இப்படியான படைப்புகள் கொலை செய்கின்றன என ட்விட்டரில் சிலர் கூவி வருகிறார்கள். எப்போதும் போல மற்றொருபுறம் இது வெறும் பொழுதுபோக்கு, இதை ஏன் கலாச்சாரத்துடன் ஒப்பிடுகிறீர்கள் என்று ஆதரவு குரல்.

  நிரந்தர காட்சி!

  நிரந்தர காட்சி!

  இந்த காட்சி பல காலமாக நாம் பார்த்து, கேட்டு வருவது தான்... அந்த பெண் சரியான உடை உடுத்தவில்லை. கற்பழிப்பிற்கு பெண்களின் உடை தான் காரணம். அவர்கள் செக்ஸியாக, உடல் பாகம் தெரியும் படியாக உடை உடுத்தாமல் இருந்தால், கற்பழிப்பு சம்பவங்கள் நடக்காது என மேடைப்போட்டு பேசும் மக்களும் இருக்கிறார்கள்.

  அதே சமயம், உடை என்பது என்னுரிமை அதில் யாரும் தலையிட முடியாது. பெண் என்ன உடுத்த வேண்டும் என்று கூறுவதற்கு முன், ஆண்களை பெண்களை கற்பழிக்க கூடாது என்று கூறி வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள் என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

  சுயக் கட்டுப்பாடு!

  சுயக் கட்டுப்பாடு!

  இப்படியான காட்சிகள் நமது சமூகத்தில் பலவன இருக்கின்றன. அவரவர் கருத்துக்கு உடன்பட்டு, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல, நான் கூறுவது தான் சரி என்ற எண்ணம் கொண்டு மற்றவர்கள் கருத்துகள் மீது பழிப்போடுவது, அவர்களை குற்றவாளியாக்குவது, இழிவுப்படுத்தி சமூக தளங்களில் பதிவுகள் இடுவது என நாம் அயராது செய்து செய்து வருகிறோம். ஆனால், நாம் இங்கே மறந்தது என்ன? பேச, சிந்திக்க, யோசிக்க மறுப்பது என்ன?

  இங்கே நாம் முற்றிலும் மறந்தது, முற்றிலும் பேச, சிந்திக்க மறுத்தது சுயக் கட்டுப்பாடு குறித்தது தான். நூறு பெண்களுடன் ஒரு அறையில் நிர்வாணமாக படுத்திருந்தாலும் சுயக் கட்டுப்பாடு இருந்தால் எந்த தவறும் நடக்காது என்பது தான் சுயக் கட்டுப்பாடு.

  பதில்: 1

  பதில்: 1

  நாம் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த தடை விதிக்க போராட்டங்கள் செய்ததற்கு பதிலாக... ஐபிஎல் போட்டிகளை புறக்கணித்து சுயக் கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் இன்னும் பெரிய கவனத்தை... பாசிட்டிவான கவனத்தை ஈர்த்திருக்கலாம். உலக அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சிறந்தவர்கள் என்று புகழப்படும் போது... இது மிக எளிதாக சாத்தியமாக்கி இருக்கலாம்.

  நாம் வெறும் 7 நாட்கள் சுயக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்திருந்தால்... நிஜமாகவே காவிரி நீர் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பெரிய கவன ஈர்ப்பு ஏற்படுத்தி இருக்கலாம்.

  காவிரி ஸ்டெர்லைட் மீதான கவனத்தை ஐபிஎல், நிர்மலா தேவி திசை திருப்பினர், நிர்மலா தேவி வழக்கின் மீதான கவனத்தை நீட் எக்ஸாம் செண்டர் திசை திருப்பியது... இப்படி நாமும் சில முறை திசை திரும்புகிறோம், சில சமயம் நம்மை வேறு சில சக்திகள் திசை திருப்புகின்றன.

  யாருக்கு தெரியும்... ஒருவேளை காலா இவை அனைத்தின் மீதுமான கவனங்களையும் திசை திருப்பலாம்... ?!

  பதில்: 2

  பதில்: 2

  இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தான் நமது சமூகத்தில் கலாச்சார சீர்கேடு வர முக்கிய காரணமா? தினமும் ஓரிரு ஜிபி டேட்டா வைத்துக் கொண்டு... அதை தீர்க்க, பல(லான) வீடியோக்கள் காண பல தளங்கள் இருக்கின்றன.

  அனைத்திற்கும் மேல் சின்னைத்திரையில் நாடகங்கள் என்ற பெயரில் ரொமான்ஸை ஏகபோகமாக தூவுகிறார்கள். சரி! இருட்டு அறையில் முரட்டு குத்து மோசமான படம் தான் அதை அந்த படக் குழுவினரே ஒப்புக் கொண்டுவிட்டனர்.

  ஹரஹர மகாதேவகி படம் வந்த போதே, அதை தோல்வி அடைய செய்திருந்தால், நட்டம் ஏற்படுத்தி இருந்தால்... அடுத்ததாக இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த படக் குழுவினருக்கு வந்திருக்காது. இந்த படத்தின் வெற்றி, இன்னும் அடுத்தடுத்த இப்படியான படங்களை எடுக்க ஒரு ஊக்கமாக தான் அமையும். இங்கே தவறு சுயக் கட்டுப்பாட்டை இழந்தது தான்.

  இரண்டு தட்டு...

  இரண்டு தட்டு...

  இரண்டு தட்டில் உணவு இருக்கிறது. ஒரு தட்டில் சரியான, ஆரோக்கியமான உணவு இருக்கிறது. இன்னொரு தட்டில் அழுகி போன, ஆரோக்கியமற்ற உணவு இருக்கிறது. நாம் எதை உட்கொள்வோம்? எனவே, காட்டினால் பார்ப்பேன். காட்டாமல் இருக்க சொல்லுங்கள் என்பதை காட்டிலும். எனக்கு எது வேண்டுமோ அதை தான் நான் ஏற்பேன் என்ற சுயக் கட்டுப்பாடு நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் நாம்.

  நிரந்தர பதில்...

  நிரந்தர பதில்...

  இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் பெண்களின் உடைகளையே கற்பழிப்புக்கு காரணம் காட்ட போகிறோம். ஒருசில வாரங்களுக்கு முன்னர் இந்தூரில் ஸ்கர்ட் அணிந்து வாகனம் ஓட்டி சென்ற பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து கீழே விழ செய்துள்ளனர் இரண்டு இளைஞர்கள். நான்கு மாத குழந்தை கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளது., பதின் வயதை எட்டாத சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எல்லாம் என்ன காரணம்...?

  நம்புங்கள்!

  நம்புங்கள்!

  இங்கு கற்பழிப்பிற்கு நிர்வாணமோ, கவர்ச்சியோ, உடையோ காரணம் அல்ல... சுயக் கட்டுப்பாடு இழந்த நிலை தான் காரணம். கொலை, கொள்ளை, திருட்டு, கோபத்தின் வெளிப்பாட்டில் தகாத வார்த்தைகள் பிரயோகப்படுத்தி திட்டுவது என பல விஷயங்களுக்கு காரணம் சுயக் கட்டுப்பாடு இழத்தல் தான்.

  இனியும், சமூகத்தில் நடக்கும் பலவேறு தவறுகளுக்கு, திசை மாற்றும் விஷயங்களுக்கு நாம் மற்றவர்களை குறை கூறி, காரணம் காட்டாமல்... அதில் நமது சுய கட்டுப்பாடு இழப்பும் ஒரு பங்கு கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Why Self Control is More Important? Things to Know!

  So, We Have Lost Self Control and Blames Everything and Everyone for Mistake. From Lust, Protest, Anti-Culture Activities, Rape, Women Harassment and etc.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more