ஒவ்வொரு ஆணிடமும் இந்த கேள்வியை கட்டாயம் கேளுங்கள்! my story #172

Posted By:
Subscribe to Boldsky

பெருசா ஒண்ணும் கெட்டப் பழக்கம் எல்லாம் அவருக்கு கிடையாது என்ன மாசத்துக்கு ஒருதடவ அவங்க ஆஃபிஸ் பார்ட்டில குடிப்பாரு.... அதுவும் லைட்டா தான். இன்னும் உங்களுக்கு எல்லாம் புரியுற மாதிரி சொல்லணும்னா சோசியல் டிரிங்கர்ன்னு வச்சுக்கலாம்.

அம்மா அப்பா தேடி, பத்து பொருத்தமும் பொருந்தியிருக்கான்னு பாத்து அலசி ஆராய்ஞ்சு கண்டெடுத்தவரத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணமாகி அஞ்சே அஞ்சு வருஷம் தான் இரண்டு குழந்தைகள கொடுத்துட்டு கண்ண மூடினார் என் கணவர்.

அலுவலக விஷயமா வெளியூர் போயிருந்த சமயம் திடீர்னு மயங்கி விழுந்துட்டார்னு சொன்னாங்க போய் பாத்தா அவரோட பொணத்த தான் பாக்க முடிஞ்சது. ஒரு சிலர் திடீர் மாரடைப்புன்னும் டாக்டருங்க அளவு அதிகமான போதைன்னும் சொல்றாங்க எது எப்டியோ இப்போ என் கணவர் உயிரோட இல்லன்றது தான் நிஜம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகள் :

குழந்தைகள் :

முதல் மூன்று மாதங்கள் பயித்தம் பிடிச்சவ மாதிரி அலைஞ்சேன், யாரப் பாத்தாலும் அவர பாத்தீங்களா, போய்ட்டு வரேன்னு சொன்னாரு.... இன்னும் வர்ல உங்களுக்கு எதாவது சொன்னாரான்னு கேட்டுட்டேயிருப்பேன் நைட்டான எந்திருச்சு உக்காந்து அழ ஆரம்பிச்சுடுவேன். என்னைய பாத்து என் ரெண்டு குழந்தைகளும் ரொம்பவே பயந்து அழுவாங்க.

பொண்ணுக்கு நாலு வயசு, பையன் கைகுழந்த ஒரு வயசு ஆகியிருந்தது. ரெண்டு பேருக்குமே அப்பா இறந்துட்டாருன்னற விவரம் தெரியல. பொண்ணு மட்டும் அம்மா அழுகுதுன்னு அதுவும் உக்காந்து அழுகும்.

மீண்டு வா :

மீண்டு வா :

நிறைய டாக்டருங்க கிட்ட எல்லாம் கூட்டிட்டுப் போனாங்க, நிறைய வைத்தியம். ஆறு மாசம் எல்லாம் பழகிப் போச்சு இந்த மனுஷன் இனி வராது இனி நம்ம தான் நம்ம புள்ளைங்கள பாத்துக்கணும் நம்மள விட்ட வேற கதி இதுகளுக்கு இல்லன்னு முடிவு பண்ணேன்.

வேலை தேடிக்கிட்டேன். சொந்தக்காரங்க எல்லாம் என்ன பேச்சு பேசினாலும் அதையெல்லாம் காதுல போட்டுக்காம எனக்கு சப்போர்ட்டா இருந்தது என்னோட அம்மா அப்பா. நான் ஆபிஸ்க்கு போக என் ரெண்டு குழந்தைகளையும் அம்மாவும் அப்பாவும் தான் பாத்துகிட்டாங்க.

அலுவலகம் :

அலுவலகம் :

ஆரம்பத்துல கல்யாணமானவங்க, 30+னு தெரிஞ்சதுமே வேலையில்ல எக்ஸ்பீரியன்ஸ் பத்தலன்னு எதேதோ சாக்கு போக்கு சொல்லி வெளிய அனுப்பினாங்க, அதுக்கப்பறம் கணவர் இறந்துட்டாரு, இரண்டு குழந்தைங்க இருக்குன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கரிசனம் காட்டினாங்க

அவங்களோட பார்வை, பேசுற தொனி எல்லாமே மாறிச்சு. அத அப்போ பெருசா கண்டுக்கணும்னு தோணல. அடுத்த மாசம் ஒண்ணாந்தேதியான வரிசகட்டி நிக்கிற செலவுகள் தான் என் கண்ணு முன்னாடி வந்துச்சு. அதுவும் ரெண்டு குழந்தைங்களோட தவிச்சிட்டு இருக்கிறப்போ எனக்கு வேலக்கொடுத்தா போதுஞ்சாமின்னு தான் என் மனசு அப்போ சொல்லிச்சு.

என்ன உதவி வேணும் :

என்ன உதவி வேணும் :

பேருக்கு டிகிரி படிச்சிருந்தாலும் அந்த துறை சார்ந்த அனுபவம் எதுவும் இல்லாததால டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் வேலை மாசம் எட்டாயிரம் ரூபா சம்பளத்துல வேல கிடச்சது.

இங்கப்பாரும்மா உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு, இவ்ளோ சின்ன வயசுல உன் லைஃப் இப்டி ஆகியிருக்க கூடாது. உன்னைய பாத்தாலே பாவமா இருக்கு அப்டின்னு சொல்லி அந்த பிரான்ச் மேனேஜர்ல இருந்து பக்கத்து சீட்ல உட்கார்ந்திருக்கவன் வரைக்கும் இதே டயலாக் தான்.

வாழ்க்கை ஓடம் :

வாழ்க்கை ஓடம் :

வீட்ல அம்மா அப்பா குழந்தைகள பாத்துக்க இருந்தனால எனக்கு அலுப்பு தெரியல, குழந்தைகள ஸ்கூலுக்கு கொண்டு போய் விடறது, கூட்டிட்டு வர்றது அப்பா வேலை, சமையல் , வீட்டுவேலைகள் எல்லாம் அம்மா வேலை.

தூரத்து சொந்தக்காரங்க, யார் யார் மூலமாவோ என் கதைய தெரிஞ்சுட்டு உனக்கப்பறம் உன் பொண்ண யார் பாத்துப்பா ரெண்டாம் தாரமா கட்டிவைன்னும்பொண்ணுக்கும் சின்ன வயசு அதுக்கு துணை வேணாமான்னு அப்பாட்ட வந்து கேக்க ஆரம்பிச்சாங்க.

சில என்கிட்டையே நேரடியா வந்து பேசினாங்க நம்ம குழந்தை பெத்துக்க வேண்டாம் உன் குழந்தையவே என் குழந்தையா நினச்சு ஏத்துக்குறேன் நீ சம்மதம்னு மட்டும் சொல்லு.

என்ன செய்ய :

என்ன செய்ய :

என்ன இது என்னைத் தேடி ஏன் இத்தனை வாய்ப்புகள் வருகிறது, இதையெல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அம்மா சொன்னார்,

அவன் ஒண்ணும் உனக்கு வாழ்க்கத்தரணும்னு வர்ல இந்த வீடு, உன் புருஷன் செத்ததுக்கு கிடச்சிருக்க இன்சூரன்ஸ் பணம், அவர் ஆபிஸ்லயிருந்து கிடச்சிருக்க பிஎஃப் பணம், அப்பறம் மாமியர் வீட்லயிருந்து பிள்ளைங்க பேர்ல வந்த இடம்னு அதப் பாத்து தான் வந்திருக்காங்க உங்கப்பாட்ட பேசினானே அந்தாளு அவங்க அம்மா என்கிட்ட பேசுறப்போ நாசூக்கா அந்த பணமெல்லாம் வந்துருச்சா, அபீஸ்ல வாங்கிட்டீங்களா மாமியார் வீட்டுல பேசியாச்சான்னு கேட்டுட்டேயிருந்தாங்க.

விஷயம் புரிந்தது.

எவ்ளோ பணம் :

எவ்ளோ பணம் :

ஆரம்பத்தில் யாரேனும் எங்களுக்கு உதவி செய்திட மாட்டார்களா என்று தவிப்பாய் இருக்கும். ஆனால் இப்போது ஐயையோ முன்னால் உதவியை நீட்டி பின்னால் என்ன எதிர்ப்பார்க்கப் போகிறானோ அவன் எந்த நோக்கத்தில் என்னிடம் இப்படி பேசுகிறான் என்றே எதிர்நோக்க வேண்டியது கட்டாயமானது.

வாழ்க்கை மீதான புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.

 மேனேஜர் :

மேனேஜர் :

க்ளைண்ட் மீட்டிங் நீங்க கண்டிப்பா போகணும்னு வெளியூர் ட்ரிப் ப்ளான் போட்றது, லேட் நைட் வரைக்கும் வேல கொடுத்து உக்கார வைக்கிறது, ஒவ்வொரு மாசம் சம்பளம் போடுறப்பவும், ரொம்ப நேரம் கெஞ்ச வைக்கிறது.

என் மேல அதிக அக்கறையா இருக்குற மாதிரி பேசி தனியா பேசணும், டின்னர் போலாம், வெளிய மீட் பண்லாம்னு கூப்டுறதுன்னு கொஞ்ச நஞ்ச டார்ச்சர் இல்ல.

சக ஊழியர்கள்!

சக ஊழியர்கள்!

இவரு இந்தப் பக்கம் ஒரு டார்ச்சர்ன்னா கூட வேலப்பாக்குறவங்க அதவிட ஆபிஸ்ல இதெல்லாம் சகஜம்னு சொல்லி செல்ஃபி எடுப்பாங்க அப்பறம் மத்தவங்க எல்லாம் எடுத்துட்டு என்னையும் அந்த நபரையும் மட்டும் க்ராப் பண்ணி வச்சு ஓட்றது.

யார்டையாவது சிரிச்சு பேசினாலே என்ன மச்சி விழுந்துட்டா போல.... என்று கலாய்ப்பது கிண்டலடிக்கும் கமெண்ட்டுகள் என ஒவ்வொரு நொடியும் பல்வேறு விமர்சனங்களை கடந்து வர வேண்டும்.

எல்லா இடங்களிலும் :

எல்லா இடங்களிலும் :

அம்மா ரிப்போர்ட் கார்ட்ல எல்லாருக்கும் அப்பா தான் சைன் போட்டு தராங்க எனக்கு மட்டும் ஏன் நீ போட்ற எல்லாருக்கும் ஸ்கூலுக்கு கொண்டு போய் விடறது அவங்க அப்பா தான் எனக்கு மட்டும் தாத்தாவா?

இப்படி குழந்தைகளின் கேள்விகளில் ஆரம்பித்து, விஷேசத்திற்கு என்று அழைக்க வந்து சார் இல்லயா என்று கேட்டு நிற்பவர்கள் தொடர்ந்து இவளை விஷேசத்திற்கு வரச்சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து நிற்பது.

கண்டுக்காத! :

கண்டுக்காத! :

நாள்தோறும் நடப்பதில் சிலவற்றை மட்டும் அம்மாவிடம் சொல்வேன். என் ஆறுதலுக்காவது அவர்களை திட்டுவார் என்று பார்த்தால் நீ ஏன் அதையெல்லாம் கண்டுக்கற... கண்டுக்காம உன் வேலை என்னவோ அதமட்டும் பாரு என்று முடித்துக் கொள்வார்.

என்ன இது இவ்வளவு எளிமையான பதில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உனக்கென்ன? என்று ஏன் ஒரு எதிர் கேள்வி கேட்பதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why No One Asks This Question to boys

Why No One Asks This Question to boys
Story first published: Tuesday, February 13, 2018, 12:38 [IST]
Subscribe Newsletter