For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் ஆம்பளைங்கள திட்ட கெட்ட வார்த்தையே இல்ல? பொண்ணுங்க என்ன சொல்றாங்க!

தவறு ஆண்கள் பக்கம் இருந்தாலுமே கூட, திட்டுவதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பெண்களை குறிப்பது ஏன்? ஆண்களை திட்டுவதற்கு வார்த்தைகளே இல்லையா? பெண்கள் கூறும் பதில்.

|

ஆண்கள் என்று மட்டுமில்லாது, குழாயடி சண்டைகளில் இருந்து... கார்ப்ரேட் நிறுவனங்களில் கேஃபிடேரியாவில் அமர்ந்து பெண்கள் கிசுகிசு பேசுவது வரை... பெண்களே பெண்களை திட்டுவதாக இருக்கட்டும், ஆண்களை திட்டுவதாக இருக்கட்டும்.. பெண்களே, பெண்களை குறிக்கும் கெட்ட வார்த்தைகளை தான் உபயோகப்படுத்துகிறார்கள். இது உலகளாவிய மொழிகளில் ஒரு ஒற்றுமையாக காணப்படுகிறது.

எந்த மொழியை உதாரணமாக எடுத்துக் கொண்டாலும், அதில் திட்டுவதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் பெண்களையும், பெண்களின் உடல் பாகங்களையும், பெண்களை உறவு சார்ந்து, நடத்தை சார்ந்து இழிவுப்படுத்தும் வகையில் தான் அமைந்திருக்கிறது.

இப்படியான சூழல் உலகளவில் எப்படி உருவானது? தவறு செய்தது ஆணாகவே இருப்பினும் அவனை திட்டுவதற்கு ஒரு வார்த்தை கூட இல்லையா? திட்டுவது கொச்சையான செயலாக இருப்பினும்.. கொச்சையிலும் பாரபட்சம் காணப்படுவது ஏன்?

சரி! ஆண்கள் மட்டும் தான் இப்படியா என்றால்... பெண்களுமே கூட கெட்ட வார்த்தை பேசும் போது பெண்களை குறிக்கும் வார்த்தைகளை தான் இயல்பாக பயன்படுத்துகிறார்கள். இந்த போக்கு பெண்கள் மத்தியில் எப்படியான தாக்கத்தை உண்டாக்குகிறது, இதன்பால் அவர்கள் மனதில் எழும் உணர்வுகள் என்னென்ன?

இதோ! பெண்களே கூறிய பதில்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆதிக்கம்!

ஆதிக்கம்!

கெட்ட வார்த்தை பயன்பாடும் ஆண்களின் ஆதிக்கமாக தான் காணப்படுகிறது. பெண் என்பவள் தனக்கு கீழானவள், அவளை நான் அடிமையாக நடத்துகிறேன். அதற்கு இதுவும் ஒரு வழி.

இங்கே பெண்களை ஆண்கள் எளிதாக திட்டிவிடுவார்கள். ஆனால், ஆண்களை பெண்கள் திட்டிவிட முடியாது. தவறு செய்தவன் ஆணாக இருந்தாலும் கூட... நீ எப்படி கெட்ட வார்த்தை பேசலாம் என்று பெண்களை அடக்குவார்கள். இதுவும் ஒருவகையான ஆணாதிக்கத்தின் வெளிபாடு தான்.

- சுமதி

போதை!

போதை!

பண்டையக் காலத்தில் இருந்து இன்றைய நவநாகரீக மாடர்ன் யுகம் வரையிலும் பெண் என்பவள் ஒரு கவர்ச்சி பொருளாகவும், ஆண்கள் தங்கள் போதையை தீர்த்துக் கொள்ள பயப்படும் கருவியாகவும் தான் காணப்படுகிறாள்.

ஆண்களை பொறுத்த வரை பெண் உடல் என்பது கவர்ச்சி மட்டுமே. ஆகையால் தான் பெரும்பாலான கெட்ட வார்த்தைகள் பெண்களின் உடல் அங்கங்களை குறிப்பதாகவும், பொருள் கொள்வதாகவும் இருக்கின்றன. இது ஆண்கள் பெண்களை கவர்ச்சி மற்றும் இச்சை எண்ணத்துடன் மட்டுமே காண்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

- மேகலா

கோபமூட்ட!

கோபமூட்ட!

ஒரு உதாரணம் எடுத்துக் கொள்வோம்... உங்களுக்கு வேண்டாத ஒருவருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவனை உணர்ச்சிவசப்படுத்த, கோபமடைய செய்ய வேண்டும் என்றால்... அவனை திட்டுவதை காட்டிலும்... அவனது வீட்டு பெண்களை திட்டினால்... அவன் எளிதாக கோபமடைந்துவிடுவான். பிரச்சனை ஆணுக்கும், ஆணுக்கும் இடையே இருந்தாலும்... அவனை தூண்டிவிட வேண்டும் என்றால் அவன் வீட்டு பெண்களை திட்ட வேண்டும் என்பது ஒரு சட்டமாக ஆண்களால் பின்பற்றுப்படுகிறது.

- ஃபரா

திட்டுவதே அவர்கள் தானே..

திட்டுவதே அவர்கள் தானே..

பெரும்பாலும் ஆண்கள் தான் பெண்களை திட்டுகிறார்கள். இது ஆண்கள் கண்டுபிடித்த வார்த்தைகள். ஆகையால்... அது பெண்களை சார்ந்து இருக்கின்றன.

மேலும், கெட்ட வார்த்தை என்றாலும், அது பெண்களின் உடல் அங்கங்களை சார்ந்து இருப்பதற்கு ஆண்களின் மோசமான புத்தி தான் காரணம். பெண் என்றாலே அவர்கள் எண்ணத்தில் இச்சை உணர்வு தான் மிகுதியாக வெளிப்படுகிறது.

மேலும், சில சமயம் பெண்களை மோசமாக ஆண்கள் திட்டுவதற்கு காரணம், அவர்களது எக்ஸ்-லைப் அனுபவங்களும் காரணமாக இருக்கிறது.

- சௌமியா

உருவாக்க வேண்டும்!

உருவாக்க வேண்டும்!

நிச்சயமாக இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல சமயம் நான் இதை கண்டு சோகமாக உணர்திருக்கிறேன். இது பெரும்பாலான பெண்களை சோகமாக உணர செய்யும்.

மேலும், பெண்களை பெண்களே பெண்களை குறிக்கும் சொல்லை கொண்டு திட்டுவதை காணும் போதுதான் மனம் மேலும் வேதனைக்கு ஆளாகிறது. ஒரு சமுதாயத்தில் பெண்களுக்கு தெரியாமலே பெண்களுக்கு எதிராக அவர்களை இயக்குவது என்பது எத்தகைய கொடூரம் என்று பாருங்கள்.

நிச்சயம், ஆண்களை திட்டு ஆண்களை நேரடியாக தாக்கும், பொருள் கொள்ளும் கெட்ட வார்த்தைகள் உருவாக்க வேண்டும்.

- தான்யா

தன்னம்பிக்கை!

தன்னம்பிக்கை!

இதற்கு ஒரு முக்கிய காரணம் பெண்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை குறைபாடு என்று கருதுகிறேன்.

பெரும்பாலான பெண்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. இதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்பது இல்லை. இதை பற்றி எல்லாம் பேச வேண்டுமா? இது அவசியமற்றது என்று கருதுகிறார்கள். ஆனால், இது காலம், காலமாக அவர்களை புண்படுத்தி வருகிறது என்பதை அவர்களே அறியாமல் இருக்கிறார்கள்.

இதற்கு மற்றுமொரு காரணம்... நமது சமூகத்தில் ஆண்களை சரியாக வளர்க்கவில்லை என்பதாகும். இதை பற்றி நினைக்கும் போது கோபமும், சோகமும் ஒருசேர வருகிறது. ஆனால், பெண்கள் உதவியற்று இருக்கிறார்கள் என்பதே நிசர்சனம்.

- அங்கிதா

முடியாது!

முடியாது!

பொதுவாகவே பெண்கள் வலிமையற்ற பாலினம் என்ற போக்கு இங்கே காணப்படுகிறது. ஆகையால், இதை பற்றி நினைத்தால் வெறும் விரக்தி தான் மிஞ்சும். மேலும், பெண்களை இதை நினைத்து பெரிதாக கவலை அடைவதில்லை.

இந்த போக்கை மாற்ற வேண்டும். இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தான். மாற்ற வேண்டும் என்று எண்ணினாலும், இதை மாற்ற முடியாது என்பதே சோகமான உண்மை.

- அம்ருதா

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Most of the Bad Words are Targets Women?

Why Most of the Bad Words are Targets Women? How This affects women life in society.
Desktop Bottom Promotion