For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  70 ஆண்டுகள் கழித்து புத்துயிர் பெரும் காந்தி கொலை வழக்கு - அந்த 4வது தோட்டா யாருடையது?

  |

  சரியாக 70 வருடங்கள் முன், 1948 ஜனவரி 30ம் நாள் மாலை வேளையில் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத துயர சம்பவம் ஒன்று நடந்தது.

  உலகெங்கும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற ஆயுதம் ஏந்திய போர் மட்டுமே ஒரே வழி என்றிருந்த பாதையை மாற்றியமைத்து அகிம்சை வழியில் போராடியும் வெற்றி பெறலாம் என்று புதிய பாதை காட்டிய காந்தியை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுப் படுக்கொலை செய்யப்பட்ட தினம் தான் ஜனவரி 30, 1948.

  நாதுராம் விநாயக் கோட்சே என்ற ஹிந்து மகாசபா உறுப்பினராகவும், வழக்கறிஞராகவும் இருந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் காந்தி.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பிர்லா மாளிகை!

  பிர்லா மாளிகை!

  இப்போது காந்தி சமாதியாக இருந்து வரும் அன்றைய பிர்லா மாளிகை வளாகத்தில் தான் பெரும் கூட்டத்தின் நடுவே தேசப்பிதா என்று போற்றப்பட்ட காந்தியடிகள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

  அந்த மாலை, எப்போதும் போல காந்தி பிரார்த்தனை செய்யும் நேரமாகும். அவர் அப்போது தான் சில அடிகள் எடுத்து வைத்து பிரார்த்தனை செய்யும் இடத்திற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பாதையில் குறுக்கே வந்த நாதுராம் விநாயக் கோட்சே தனது கையில் இருந்த பிஸ்டல் மூலமாக மூன்று முறை சுட்டு காந்தியை அந்த இடத்திலேயே சுருண்டு விழு செய்தார்.

  சம்பவ இடத்திலேயே காந்திய அடிகள் மரணித்தார்.

  நான்காவது புல்லட்!

  நான்காவது புல்லட்!

  காந்தியை நாதுராம் விநாயக் கோட்சே மூன்று முறை தான் சுட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியாக தான் நீதிமன்றத்திலும் கூறப்பட்ட தண்டனையும் வழங்கப்பட்டது.

  ஆனால், காந்தி உடலை துளைத்தது நான்கு புல்லட்டுகள். நாதுராம் விநாயக் கோட்சே துப்பாக்கியில் இருந்து வந்தது வெறும் மூன்று புல்லட்டுகள் என்றால் காந்தியின் உடலை துளைத்த நான்காவது புல்லட் எங்கிருந்து யாரால்? சுடப்பட்டது?

  இரண்டு பேரா?

  இரண்டு பேரா?

  இதுநாள் வரை காந்தியை கொலை செய்தது ஒரு நபர் என்றும், அவர் நாதுராம் கோட்சே என்றுமே அறியப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு பங்கஜ் பத்னிஸ் என்ற ஆராய்ச்சியாளர்கள் தொடுத்த வழக்கின் மூலமாக தான் காந்தி உடலை துளைத்தது நான்கு புல்லட்டுகள் என்றும். அதில் மூன்று நாதுராம் விநாயக் கோட்சேவின் பிஸ்டலில் இருந்து சுடப்பட்டது என்றும், அந்த நான்காவது புல்லட் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியும் பிறந்துள்ளது.

  புத்துயிர்!

  புத்துயிர்!

  இந்த கேள்வியினால் ஏறத்தாழ 70 ஆண்டுகள் கழித்து காந்தியின் கொலை வழக்கு புத்துயிர் பெற்றுள்ளது. மீண்டும் விசாரணை துவக்க இது பெரும் காரணமாக இருந்துள்ளது.

  மேலும், இந்த கேள்விகளு மூலம் அந்த இரண்டாம் நபர் யார்? என்ற தேடுதலும் துவங்கியுள்ளது. கண்டிப்பாக அந்த நபர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், வரலாற்றில் புதைந்து போன ஒரு பெரும் உண்மை புலப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.

  திறனாய்வு!

  திறனாய்வு!

  பங்கஜ் என்பவர் ஒரு அபினவ் பாரத் என்ற அமைப்பின் துணை நிறுவனர் மற்றும் ஆய்வாளர். இவர் காந்தியின் உடலை நான்காவது புல்லட் துளைததற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால், நாதுராம் விநாயக் கோட்சே துப்பாக்கியில் இருந்து பாயவில்லை என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது என்று தெளிவாக கூறியுள்ளார். மேலும், காந்தியின் கொலையிலும், கொலை வழக்கிலும் சதி நடந்துள்ளது என்றும் இவர் தெரிவித்திருந்தார்.

  Image Source: Copy in possession of petitioner Pankaj Phadnis - Dawn's reportage of Gandhi's assassination

  ஆதாரம் என்ன?

  ஆதாரம் என்ன?

  காந்தி நான்கு புல்லட்டுகள் பாய்ந்து தான் இறந்தார் என்பதற்கு அப்போது வெளியான் நான்கு செய்தி தாள்களின் ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. அவற்றில் தெள்ளத்தெளிவாக நான்கு புல்லட் என்று குறிப்பிட்டு தலைப்பு வைத்துள்ளனர்.

  மேலும், காந்தி குண்டடி பட்டு இறந்ததை கண்ணால் கண்ட சாட்சி நான்கு புல்லட்டுகள் சுடப்பட்டதை பார்த்ததாக சாட்சியத்தில் கூறியிருப்பதும் இதற்கு மற்றுமொரு ஆதாரமாக இருக்கிறது. மேலும், காந்தியின் உடலில் நான்கு தோட்டாக்கள் துளைத்த புகைப்படங்களும் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.

  Image Source: Copy in possession of petitioner Pankaj Phadnis - Reuters' reportage of Gandhi's assassination.

  மக்கள்!

  மக்கள்!

  மேலும், காந்தியை சுற்றி இருந்த பலரும், சாட்சி கூறிய பலரும் நான்கு தோட்டாக்கள் பாய்ந்தன என்பதை சாட்சியமாக கூறியுள்ளனர். இதை எழுபது ஆண்டுகள் கழித்து சர்ச்சை என்று கூற முடியாது. இது உண்மை என்று பங்கஜ் சென்ற ஆண்டு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

  மேலும், காந்தியை கோட்சே மூன்று முறை சுட்டார் என்று மட்டும் தான் எல்லா தகவல்களிலும் இருக்கிறது. அப்போது காந்தி உடலில் பாய்ந்த அந்த நான்காவது புல்லட் யாரால் சுடப்பட்டது, அந்த இரண்டாவது கொலையாளி யார் என்பதற்கான கேள்வி யாராலும் அன்று எழுப்பபடாதது ஏன்?

  அன்றைய செய்திகளிலும் இது வராமல் போனது ஏன்?

  தற்கொலை!

  தற்கொலை!

  தி கார்டியன் செய்தியில் ஜனவரி 31, 1948ல் வெளியான செய்தியில் மூன்று முறை காந்தியை சுட்ட நாதுராம் விநாயக் கோட்சே நான்காவது முறையாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்தார் என கூறப்பட்டிருந்தது.

  ஆனால், இதைத்தவிர நாதுராம் விநாயக் கோட்சே தற்கொலைக்கு முயன்றதாக வேறு எந்த தகவலும் பெரிதாக கிடைக்கவில்லை.

  உடையில் இருந்த 4வது தோட்டா?

  உடையில் இருந்த 4வது தோட்டா?

  பங்கஜ் அளித்திருந்த பல ஆதாரங்களில் ஒன்று காந்தியின் நெருங்கிய மருமகள் உறவு வகை சார்ந்த மானுபென் காந்தி என்பவர் எழுதிய டைரி குறிப்பில் இருக்கும் தகவலில்,

  போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இரண்டு தோட்டாக்களும், ஒரு தோட்டா காந்தியின் உடலின் உள்ளே சிக்கி இருந்தது என்றும் அதை, அவரது சாம்பலில் இருந்து எடுத்தோம் என்றும் மூன்று தோட்டாக்களுக்கு கணக்கு காண்பித்தனர். இதை தவிர வேறு எங்கும், எந்த வகையிலும் தோட்டாக்கள் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.

  ஆனால், காந்தியை சுட்ட பிறகு, இறுதி சடங்குக்கு அவரை குளிப்பாட்ட உடல் கொடுக்கப்பட்ட போது அவரது மேலாடையில் ஒரு தோட்டா சிக்கி இருந்தது என்று தனது டைரி குறிப்பில் தெரிவித்திருக்கிறார் மானுபென் காந்தி.

  கேள்விகள்!

  கேள்விகள்!

  இந்த தோட்டா எங்கிருந்து வந்தது, இதை யார் சுட்டார்? இது போலீஸ் கூறிய கணக்கில் சேர்க்கப்பட்டதா இல்லையா? ஏன் நான்கு தோட்டாக்களை மூன்றாக குறைத்து கணக்கு வைத்தனர்? என பல கேள்விகள் காந்தியின் கொலை வழக்கில் எழுந்திருக்கிறது.

  மேலும், காந்தியை இதற்கு முன்னரே பலமுறை கொலை செய்ய திட்டமிட்டதும், இப்படியான சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதை அறிந்தும், தேசப்பிதாவாக திகழும் நபருக்கு அன்றைய நேரு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காததும் ஏன்?

  இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் விளையாட்டு என்ன? மறைந்திருக்கும் நபர்கள் யார், யார்? என் கேள்விகள் மட்டுமே நீண்டுக் கொண்டு போகின்றனவே தவிர பதில் என ஒரு புள்ளி கூட இல்லை.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Who Shot the Fourth Bullet? - Gandhi's Murder Case and Unknown Facts!

  Who Shot the Fourth Bullet? - Gandhi's Murder Case and Unknown Facts!
  Story first published: Tuesday, January 30, 2018, 13:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more