என்னைக்காவது நீங்க பண்ற இந்த தப்பு, எவ்வளோ கொடியதுன்னு யோசிச்சு பாத்திருக்கீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

நம்ம வீட்டுல அம்மா, மனைவி, ஏன் நாமளும் கூட இந்த தப்ப நிறைய தடவ செஞ்சிருப்போம். சிலர் வாரம் ஒருமுறை செய்வாங்க.. சிலர் தினசரி தவறாம செய்வாங்க. நாம் நமக்கே தெரியாம செஞ்சுட்டு இருக்க தவறுகள்ல... இதுல மத்தவங்க வலியும் கலந்திருக்கன்னு தெரியாம நாம் பண்ணிட்டு இருக்கோம்.

நிச்சயமா இவன் என்னடா பேசுறான்னு பலருக்கு புரியாம இருக்கும். அஞ்சு நிமிஷம் டைம் இருந்தா... இந்த கதைய முழுசா படிங்க... படிச்சு முடிக்கும் போது தான்... நாம இவ்வளவு நாளா எதுவோ பெரிசா சாதிச்சுட்டுதா நெனைச்சுக்கிட்டு இருக்க ஒரு விஷயம், மத்தவங்க வாழ்க்கையில எவ்வளவு பெரிய வலியா இருக்குன்னு புரிஞ்சுக்க முடியும்...

Cover Image Credit: wordpress

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு கதை சொல்லட்டா சார் / மேடம்?

ஒரு கதை சொல்லட்டா சார் / மேடம்?

அவள் ஒரு சாதாரண குடும்ப தலைவி. சமூகத்தில் தனக்கான, தன் குடும்பத்தின் மீதான கௌரவம் மீது பெரும் கவனம் கொண்டிருக்கும் சராசரி இந்திய பெண் அவள்.

எப்போதும் முந்தைய நாள் இரவே மறுநாள் காலையில் என்ன சமைக்க வேண்டும் என்ற பட்டியல் தயாராக வைத்திருந்தா.

காலை எழுந்ததும் முந்தைய நாள் இரவு சமைக்க திட்டமிட்ட உணவுகளுக்கு என்னென்ன பொருள் வேண்டும் என்று ஒரு காகிதத்தில் எழுதினாள். கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு சுப்பர் மார்கெட்டுக்கு கிளம்பினாள்.

முட்டை மட்டும் மிஸ்ஸிங்!

முட்டை மட்டும் மிஸ்ஸிங்!

மார்கெட்டில் பட்டியலில் எழுதப்பட்டிருந்த அனைத்து பொருட்களையும் வாங்கிவிட்டார். வெங்காயம், தக்காளியில் இருந்து, கோதுமை, ரவை வர அனைத்து பொருட்களையும் நாலைந்து கடைகள் ஏறி இறங்காமல் அந்த சுப்பர் மார்கெட்டிலேயே வாங்கிக் கொண்டால். அவளுக்கு தேவையான முட்டை மட்டும் அந்த சூப்பர் மார்கெட்டில் கிடைக்கவில்லை.

மொத்த பில்லையில் தனது டெபிட் கார்ட் மூலமாக தேய்த்து கடையைவிட்டு வெளியே கிளம்பினாள் அந்த இல்லத்தரசி.

மூதாட்டி

மூதாட்டி

சூப்பர் மார்கெட்டில் இருந்து கொஞ்சம் தூர தொலைவில் ஒரு வயதான மூதாட்டி முட்டைகளை ஒரு கூடையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார். அப்பாடா... எங்கயும் அலையாம, இந்த கிழவி கிட்டே முட்டைய வாங்கிடலாம் என்று பெருமூச்சு விட்டாள்.

அந்த மொதாட்டியை நெருங்கினாள்...

முட்டை என்ன விலை பாட்டி?

ஒரு முட்டை அஞ்சு ரூபா தாயி....

ஆறு முட்டை 25 ரூபாக்கு தருவீங்களா...?

சரி தாயி எடுத்துக்க....

"என்ன பாட்டி கேட்டதும் கொடுத்துட்டா... ஆறு முட்டை 20 ரூபாக்கே கேட்டிருக்கலாமோ..." என்ற எண்ணம் அவளது மனதுக்குள்.

முதல் போனி...!

முதல் போனி...!

மனதில் நினைத்ததை வெளியேவும் கேட்டாள்... கொஞ்சம் மாற்றி...

என்ன பாட்டி கேட்டதும் கொடுத்துட்டீங்க... முட்டை என்ன பழசா....?

இல்ல தாயி... காலைல இருந்து யாரும் வாங்கல... நீ தான் முதல் போனி... அதான்... என்று மூச்சை இழுத்து கூறினாள் பாட்டி.

சரி பாட்டி...! என்று கூறி...,

அஞ்சு ரூபா பேரம் பேசி வென்ற நிம்மதியுடன் வீடு திரும்பினாள் அந்த பெண்மணி.

வீட்டு வேலைகள்!

வீட்டு வேலைகள்!

ஒருவழியாக 7 மணிக்கு துவங்கி... 8.30 மணிக்குள் காலை உணவும், மதிய சாப்பாட்டுக்கான உணவுகளையும் சமைத்து கணவன் மற்றும் குழந்தைகளுக்கு டிப்பன் பாக்ஸிலும் அடைத்து வைத்துவிட்டாள்.

9 மணிக்கெல்லாம் கணவன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார்.

11 மணியளவில் நீண்ட நாள் தோழி ஒருத்தி வீட்டுக்கு வந்தாள். தோழிகள் இருவரும் டிவியை ஒருபக்கம் அலறவிட்டு... இவர்கள் ஒரு பக்கம் புரளி பேசிக் கொண்டிருந்தனர்....

பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மணி 2-ஐ நெருங்கிவிட்டது.

நூறு ருபாய் டிப்ஸ்!

நூறு ருபாய் டிப்ஸ்!

நீண்ட நாள் கழித்து நிறைய பேசி களைத்த தோழிகளுக்கு... அப்படியே வெளியே சென்று ஹோட்டலில் உணவருந்திவிட்டு... ஷாப்பிங் செல்லலாம் என்ற திட்டம்...

இருவரும் ஷாப்பிங் மால் அருகே இருந்த ஒரு உயர்ரக ஹோட்டலில் உணவருந்தினார்கள்.

அங்கும் நிறைய கதைகள் கதைத்து ஒரு நேரம் நீட்டியெடுத்து பேசி சாப்பிட்டு முடித்தனர். பில் வந்ததும்.. நான் தான் தருவேன்.. என்று இரண்டு பேருக்குள் சண்டை. ஒருவழியாக அந்த இல்லத்தரசியே பில்லை கட்டினாள். பில்லுடன் சேர்த்து உணவு பரிமாறிய அந்த நபருக்கு நூறு ரூபாய் டிப்ஸ் கெத்தாக வைத்து ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தனர் இருவரும்...

சுபம்! (கதை ஓவர்!)

நீங்களும் ஒருவராக இருக்கலாம்...

நீங்களும் ஒருவராக இருக்கலாம்...

இந்த கதையில் நடந்த சம்பவம்... ஏன் அந்த இல்லத்தரசி... என இந்த கதை உங்கள் வாழ்வில் பல சமயங்களில்... சில வீடுகளில் வாரம் ஒருமுறையாவது நடக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் மட்டுமல்ல, இப்படியான தருணங்களை ஆண்களும் கூட கடந்து வந்திருப்பார்கள்.

கீரை விற்க வரும் பாட்டி, முட்டை விருக்கும் தாத்தா.., வேகாத வெயிலில் தக்காளி, வெங்காயம் விற்று வரம் பையன் என பலரிடம் அஞ்சு ரூபாய், பத்து ரூபைக்கெல்லாம் பேரம் பேசி சண்டை போட்டிருப்போம்.

இப்போது உங்கள் வாழ்வில் நீங்கள் இப்படி கடந்து வந்த சம்பவங்கள் சிலவன மனதில் இருந்து வெளியே எட்டிப்பார்கின்றனவா?

மூச்சை நுரையீரல் முழுக்க இழுத்து விடுவது போல... அப்படியான தருணங்களை ஒரு நிமிடம் மட்டும் யோசித்து பாருங்கள்.

நெக்ஸ்ட்!

நெக்ஸ்ட்!

கண்டிப்பாக அடிக்கடி ஹோட்டல் சென்று வரும் நபராக நீங்கள் இல்லை என்றாலும், நண்பர்கள் பார்ட்டி, விருந்தினர், உறவினர் வந்தால் மாதம் ஒருமுறையாவது ஹோட்டல் சென்று சாப்பிட்டு வரும் நபராக நீங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது அல்லாவா? இதற்கு இல்லை என்று மறுப்பு சொல்லும் நபர்களின் சதவிதம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனெனில், அவர்கள் ஆன்லைனில் உட்கார்ந்து கதை படிக்க வசதி இல்லாதவர்களாக இருப்பார்கள்.

சரி! அப்படியாக ஒரு ஹோட்டலுக்கு நபர்கள், உறவினர்களுடன் சென்று உணவருந்து, 20, 50, 100 என டிப்ஸ் வைத்திருப்பீர்கள் அல்லவா?

எதுக்கு இந்த டிப்ஸ்?

எதுக்கு இந்த டிப்ஸ்?

ஹோட்டலுக்கு வரும் நபர்களுக்கு உணவு பரிமாறுவது தான் அந்த நபருக்கான வேலை. அதற்கு அந்த ஹோட்டல் நிர்வாகம் அவர்களுக்கு தினமும் பேட்டா, சம்பளம் கொடுக்கிறது. அதிலும் உயர்ரக உணவகங்கள் என்றால்... கௌரவம் கருதியே 50, 100 டிப்ஸ் வைப்பவர்கள் அதிகம்.

அவர்களுக்கு டிப்ஸ் எதற்கு? அவர்களது சம்பளமே அவர்களுக்கு போதுமானது.

ஆனால், அந்த மூதாட்டி, தக்காளி வெங்காயம் விற்கும் நபர்ககள்... அவர்கள் லாபமாக கிடைப்பதே அந்த அஞ்சு ரூபாயோ, பத்து ரூபாயோ தான். அந்நாளில் தான் வங்கி விற்கும் பொருட்கள் மீதமாகிவிட்டால் நஷ்டம். அதற்காகவே பேரம் பேசினாலும் பரவாயில்லை. லாபம் வராமல் போனாலும், நஷ்டம் அடையாமல் இருக்க. மறுநாள் மார்கெட்டில் இருந்து பொருள் வாங்கி விற்க அவனுக்கு போதுமான அளவு பணம் வேண்டும்.

ஏழ்மை!

ஏழ்மை!

இது என்ன பெரிய தவறா? என்று நீங்கள் கேட்கலாம். இதில் தவறில்லை. ஆனால், வலி இருக்கிறது. அன்றைய நாளை வாழ அவன் படும் கஷ்டம் அதிகம். மறுநாள் தொழில் தடையில்லாமல் நடக்க அவன் எதிர்கொள்ளும் துயரம் அதிகம்.

சுப்பர் மார்கெட் சென்று நாம் பேரம் பேசுவதில்லை. அதுவே தள்ளுவண்டி காரன், சாலையோர வியாபாரி என்றால் முடிந்த வரை அடித்து பேசுவோம். நான் அடித்து பேசும் பேரம், அவனது வயிற்றில் அடிக்கிறது என்பதை நாம் பெரிதாக உணர்வதே இல்லை.

தினமும் ஃபிரஷான உணவு தரவங்ககிட்ட தான் நாம பேரம் பேசுறம். வாரம் முழுக்க ஃப்ரீசர்ல வெச்சு விக்கிறவன் கேட்குற விலைய கொடுத்துட்டு வரோம்.

கொஞ்சம் யோசித்து பாருங்க...! அடுத்த முறை பேரம் பேசும் போது, அந்த அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ல அவங்க ஒன்னும் கோடீஸ்வரன் ஆயிட போறதுல்லங்கிறத கொஞ்சம் மனசுல யோசிச்சு பாருங்க...

நன்றி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What is Your Logic Dear Indians? Bargaining For Rs.10 at Street Shops and Giving Rs.100 Tips at Restaurant. What is Your Logic Dear Indians?

What is Your Logic Dear Indians? Bargaining For Rs.10 at Street Shops and Giving Rs.100 Tips at Restaurant. What is Your Logic Dear Indians?
Story first published: Monday, February 5, 2018, 14:00 [IST]
Subscribe Newsletter