For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோடியின் ஐந்து ஆண்டுகளில் ரூ.61,000 கோடி ஸ்வாகா?! என்னென்ன பண்ணியிருக்கலாம்!

மோடியின் ஐந்து ஆண்டுகளில் ரூ.61,000 கோடி ஸ்வாகா?! என்னென்ன பண்ணியிருக்கலாம்!

|

வங்கி கணக்கு ஊழல், கடன் திரும்ப பெறாமல் ஏமாற்றப்பட்ட காரணத்தால் மட்டுமே, இந்தியா இதுவரை பல நூற்றுக்கணக்கான கோடிகளை இழந்துள்ளது. இது அனைத்தும் சாமானிய மக்கள் செய்திட வில்லை.

What India Can Do, If We Recover Rs 61,000 Crore Lost In Loan Frauds In Modi's Govt.

விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலான ஒருசில தொழிலதிபர்கள் வங்கி கடன் பெற்று ஏமாற்றியதன் காரணமாக மட்டுமே இந்திய பெருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒருவேளை இந்த பணம் முற்றிலுமாக திரும்ப பெற்றுவிட்டால் அல்லது சரியாக திரும்பி செலுத்தப்பட்டிருந்தால் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் எந்தெந்த வகையில் எல்லாம் நன்மைகள் ஏற்பட்டிருக்கும் என்பதை தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம். இது சிலருக்கு வியப்பையும், சிலருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரூ.471 /-

ரூ.471 /-

நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பல பணக்கார முதலைகள் இந்திய வங்கிகளை ஏமாற்றி, செலுத்தாமல் வைத்திருக்கும் மீத தொகையான 61,000 கோடி பணத்தை மீட்டெடுத்தால், இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ. 471/- கொடுக்க முடியும்.

புல்லட் ரயில்!

புல்லட் ரயில்!

இந்தியாவில் புல்லட் ரயில் பிராஜக்ட்டிற்காக ஜப்பான் நிறுவனத்திற்கு இந்திய அரசு 1.08 இலட்சம் கோடி ரூபாயை தரவிருக்கிறது. ஒருவேளை, இவர்கள் ஏமாற்றி சென்ற அந்த 61 ஆயிரம் கோடி இந்திய அரசி கைப்பற்றி இருந்தால் 610 கிலோமீட்டர் தொலைவிற்கு புல்லட் ரயில் பாதை அமைத்திருக்கலாம்.

மெட்ரோ!

மெட்ரோ!

விஜயவாடாவில் மெட்ரோ கட்டமைப்பின் போது டி.எம்.ஆர்.சி ஒரு கிலோ மீட்டர் மெட்ரோ பாதை உள்கட்டமைப்பு வசதிக்கு மட்டுமே 288 கோடி ரூபாய் ஆகிறது என்று தெரிவித்திருந்தது. இதன் படி பார்த்தால் 61 ஆயிரம் கோடிகளை வைத்து, ஏறத்தாழ 212 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ உள் கட்டமைப்பு செய்திருக்கலாம்.

ரேபல் ஜெட்!

ரேபல் ஜெட்!

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரேபல் ஜெட் போர் விமானம் வாங்குவதற்கு சுமார் 56 ஆயிரம் கோடி செலவு செய்கிறது இந்திய அரசு. நிரவ் மற்றும் விஜய் மல்லையா போன்றவர்கள் சுருட்டிக் கொண்டு ஓடிய பணத்தை பத்திரமாக திருப்பி வாங்கி இருந்தா., 36க்கும் மேலான எண்ணிக்கையில் ரேபல் ஜெட் விமானங்கள் வாங்கி இருக்கலாம்.

சுகாதாரம்!

சுகாதாரம்!

நடப்பாண்டு 2018-19 சுகாதாரம், ஆரோக்கியம் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் 1.38 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிராடு தனத்தால் நாம் இழந்த 61 ஆயிரம் கோடி கைப்பற்றப்பட்டிருந்தால், இந்த செலவில் 40% மிக எளிதாக ஒதுக்கி இருக்கலாம்.

சியாச்சின் வீரர்கள்!

சியாச்சின் வீரர்கள்!

உலக பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கை படி, சியாச்சின் மலை உச்சியில் இருக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஒரு நாளுக்கு பாதுகாப்பு மற்றும் உணவு கொடுத்து அனுப்புவதற்கு என ஆகும் செலவு மட்டுமே ஐந்து கோடி. ஒரு நாளுக்கு ஐந்து கோடி என்றால், ஏறத்தாழ 30க்கும் மேலான ஆண்டுகள் நாம் அவர்களுக்கு இந்த தொகையின் மூலம் தாராளமாக செலவு செய்திருக்கலாம்.

135 மார்ஸ் மிஷன்கள்!

135 மார்ஸ் மிஷன்கள்!

மார்ஸ் மிஷன் ஐ.எஸ்.ஆர்.ஒ-வின் ஒரு சிறந்த பிராஜக்ட் மற்றும் வெற்றிகரமானதும், உலகளவில் பெரும் பாராட்டுகள் பெற்றதும் ஆகும். ஐ.எஸ்.ஆர்.ஒ-விடம் இந்த 61,000 கோடி ரூபாயை கொடுத்திருந்தால், அவர்கள் 135 மார்ஸ் மிஷன் ராக்கெட்டுகள் ஏவி இருப்பார்கள்.

ரயில்வே!

ரயில்வே!

இந்த 61,000 கோடியை ரயில்வே துறையிடம் கொடுத்திருந்தால். அவர்கள் இரண்டு வருடத்திற்கு தங்கள் எலக்ட்ரிக் பில்களை கட்டியிருப்பார்கள். சுமாராக வருடத்திற்கு 30,000 கோடி ரூபாய் ரயில்வே துறை எனர்ஜி பில்கள் கட்டுகிறது. இதில், எலக்ட்ரிக், எரிபொருள் அனைத்தும் அடங்கும். சரியாக குறிப்பிட வேண்டும் என்றால், டீசலுக்கு 18,000 கோடியும், மின்சாரத்திற்கு 12,000 கோடியும் செலவு செய்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What India Can Do, If We Recover Rs 61,000 Crore Lost In Loan Frauds In Modi's Govt.

What India Can Do, If We Recover Rs 61,000 Crore Lost In Loan Frauds In Modi's Govt.
Desktop Bottom Promotion