For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஹோட்டல் அறையில் பெண் துணை இயக்குனருக்கு நேர்ந்த கொடுமை... - #Voyeurism

  |

  ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான இந்திய பெண்களின் அந்தரங்க விஷயங்கள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. வேறு ஒரு நபரின் நிர்வாணத்தை ரசிக்கும் வோயரிஸம் எனும் பழக்கம் எப்படி அதிகரித்தது?

  ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் பேணிக் காக்கும் தேசம் என புகழ்ந்துக் கூறிக் கொள்ளப்படும் நமது நாட்டில் தான் இது அதிகமாக நடக்கிறது. பல ஆபாச தளங்களில் தங்கள் வீடியோக்கள் ஒலிபரப்பு ஆகிவருவதை, பதிவேற்றம் ஆகிவருவதை அறியாமலேயே பல பெண்கள் இருக்கிறார்கள். இப்படியான விஷயங்கள் அறிந்து தவறான முடிவுகள் எடுத்த பெண்களும் சிலர் இருக்கிறார்கள்.

  வோயரிஸம் என்பது இச்சையின் வெளிப்பாடு. இதனால் பாதிப்படைந்த ஒரு இந்திய துணை இயக்குனர் பெண்மணி தனது வாழ்வில் தான் கடந்து வந்த உண்மை நிகழ்வை பகிர்ந்திருக்கிறார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  டாக்குமென்டரி!

  டாக்குமென்டரி!

  அது ஒரு டாக்குமென்ட்ரி ஷூட்டிங்...

  நானும் எங்கள் குழுவும் பலவிதமான திகைப்பூட்டும் இடங்களை தேடி, தேடி ஷூட்டிங் செய்து வந்தோம். எங்கள் பயணம், நாங்கள் கண்ட காட்சிகள், யாரும் கேட்டிராத கதைகளை கூற வேண்டும் என்ற ஆர்வம் ஒரு ரம்மியமான பயணமாக இருந்தது. அதுதான் எங்கள் ஷூட்டிங்கின் கடைசி நாள். எதிர்பார்த்தை காட்டிலும் சீக்கிரமாக எங்கள் கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டோம். ஏதோ ஒன்றை பெரியதாக சாதித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி எங்களுக்குள். அனைவரும் ஹோட்டலுக்கு திரும்பினோம்.

  வியர்த்து மோசமான வாடை எங்கள் அனைவரின் மேலும். ஹோட்டலுக்கு சென்றவரும் ரிசப்ஷனில் எங்கள் அனைவரின் அறைகளுக்கும் ஒரு பக்கெட் சுடுதண்ணி கொண்டு வந்து தரும்படி கூறியிருந்தோம்.

  Image Source:

  காத்திருந்தேன்...

  காத்திருந்தேன்...

  நாங்கள் ஹோட்டலை அடைத்த போது இரவு எட்டு மணி இருக்கும்....

  ஷூட்டிங்கில் இருந்தவரை அந்த நாற்றம் எங்கே இருந்தது என்றே தெரியவில்லை. ஹோட்டல் திரும்பிய நொடியில் இருந்து என் மீது வீசும் அந்த நாற்றத்தை என்னாலேயே தாங்கிக் கொள்ள இயலவில்லை. எப்போது சுடுதண்ணி வரும். வந்ததும் நன்கு குளித்து புத்துணர்ச்சி அடையலாம் என்று காத்திருந்தேன்.

  MOST READ: உங்கள் பிறந்த மாதத்தின் மலர் உங்களை பற்றி கூறுவதென்ன தெரியுமா?

  வந்தது...

  வந்தது...

  ரூம் பாய் வந்து ஒரு பக்கெட் சுடுதண்ணி கொடுத்துவிட்டு நகர்ந்தான். அவன் வந்து சென்றதும், அந்த உப்பு வாசம் நிறைந்த ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு. குளியலறைக்குள் சீறிப்பாய்ந்தேன். சுடுதண்ணியுடன் குளிர்ந்த நீரை கலந்து வெதுவெதுப்பான நீரை கொண்டு முதலில் என் மீது ஒட்டியிருந்த அந்த வியர்வை உப்புகளை சுத்தமாக நீக்கினேன்.

  நான் குளித்துக் கொண்டிருக்கும் போது, கால்களை கழுவி முகத்தை தூக்கும் போது, திடீரென யாரோ என்னை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற எண்ணம்... இரவு நேரம் என்பதால் இப்படியான பயம் இருக்க தான் செய்யும் என்று கருதி வேகமாக குளித்து முடித்து டவலை கொண்டு உடலை துடைத்துக் கொண்டிருக்கும் போது... சீலிங் கீழே இருந்த ஒரு சிறிய ஜன்னல் போன்ற துவாரத்தின் வழியே யாரோ நான் குளிப்பதை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தேன்.

  Image Source:

  அந்த கண்கள்...

  அந்த கண்கள்...

  நான் பார்த்தது இரண்டு கண்களை மட்டும் தான். ஒரு கையால் அந்த ஜன்னல் துவார பகுதியை இறுக்க பிடித்துக் கொண்டு அந்த நபர் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனே டவலை கட்டிக் கொண்டு படுக்கையறைக்கு விரைந்தேன்.

  என்னுள் அதிர்ச்சி நீங்கவே இல்லை. என் கண்கள் மற்றும் உடலில் நடுக்கும் நிற்கவே இல்லை. அந்த நபர் எத்தனை நேரம் நான் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்? அவன் நான் குளிப்பதை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்திருப்பானா? (இந்த டிஜிட்டல் யுகத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது) என அச்சம் தொற்றி கொண்டது.

  ஆண் தான்...

  ஆண் தான்...

  அவன் நிச்சயம் ஒரு ஆணாக தான் இருக்க வேண்டும். அந்த கண்களை வைத்தே அதை நிச்சயமாக கூற முடியும். என்னுடன் அறையில் தங்கியிருந்த பெண்ணை அழைத்து நடந்ததை கூறினேன். என் உடல் முழுவதும் வியர்வை ஊற்றாக பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஒருமாதிரியான அருவருப்பான அசௌகரியத்திற்கு ஆளானேன்.

  அவன் கேமராவில் படம் பிடித்திருப்பானா? மொபைலில் படம் பிடித்திருப்பான என பல சந்தேகங்கள். என் உடல் எப்படி பதிவாகியிருக்கும், ஏதேனும் இணையங்களில் அதை பதிவிட்டுருப்பார்களா? என்ற அச்சம் என்னைவிட்டு அகலவே இல்லை. என் உடல் மீதான எனது உரிமை, தைரியம், நம்பிக்கை என்னிடம் இருந்து பறிபோய் கொண்டிருந்தது. என்னை யாரோ சுக்குநூறாக உடைத்து களவாடி சென்றது போன்ற உணர்வு.

  ஏன்?

  ஏன்?

  பாலியல் வன்கொடுமை என்பது தொடுவதால், தொடும் முறையால் மட்டுமே நிகழ்வது அல்ல. பார்வை, பேச்சு, இப்படியான வீடியோ பதிவுகள் என பல வகைகளில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். முக்கியமாக இந்திய பெண்கள் நிறையவே இது போன்ற வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வை கூட மிக பாதுகாப்பாக, பயந்து, பயந்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள். பெண் உடல் மீது இப்படியான மோகம் அதிகரிக்க காரணம் என்ன?

  Image Source:

  MOST READ: பழுத்த மிளகாயை கொண்டு காய்ச்சலை விரட்டும் பழங்காலத்து அகோர முறைகள்..!

  செக்ஷன் 354C

  செக்ஷன் 354C

  என்னிடம் இருந்து எந்தவொரு பொருளும் திருடப்பட வில்லை. ஆனாலும், நான் எதையோ தொலைத்து போல வருந்தி வருகிறேன். வோயரிஸம் எனப்படும் மற்றவர் நிர்வாணமாக இருப்பதை பார்ப்பது, படம், வீடியோ எடுப்பது அதை பகிர்வது இந்திய சட்டம் செக்ஷன் 354C படி குற்றம். இவர்களுக்கு அபராதத்துடன் ஒரு வருடத்தில் இருந்து மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.

  ஒரு மணிநேரத்தில்...

  ஒரு மணிநேரத்தில்...

  வெறும் ஒருமணி நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால்... நான் எனது உடமைகளுடன் ஹோட்டல் ரிஷப்ஷனில் நின்று கொண்டிருந்தேன். போலீஸில் இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முனைந்தேன். நான் குளிப்பதை எட்டிப் பார்த்த அந்த நபர் நிச்சயம் அந்த ஹோட்டலில் வேலை செய்துக் கொண்டிருக்கும் ஒருவராக தான் இருக்க வேண்டும். நான் எப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம் எனக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்காது என்று நம்பினேன். குறைந்தபட்சம் அந்த ஹோட்டலில் ஆவது.

  காவல் நிலையத்தில் கொடுமை...

  காவல் நிலையத்தில் கொடுமை...

  முதல் முறையாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் போன எனக்கு, அது அவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என தெரியவில்லை. நீ எப்படி குளித்தாய், என்ன உடுத்தி இருந்தாய், முழு நிர்வாணமாக இருந்தாயா? என என்னை மேலும் புண்படுத்தினார்கள்.

  இது ஒருமுறை அல்ல. முதலில் நிகழ்வை ஒருவர் கேட்டறிந்தார். பிறகு ஒருவர் அதை எழுத்து படிவமாக பதிவு செய்ய கேட்டார். கடைசியில் மிகுந்த மன வேதனை மற்றும் கண்ணீருடன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறினேன்.

  தேசிய குற்ற பத்திரிக்கை ஆணையம்!

  தேசிய குற்ற பத்திரிக்கை ஆணையம்!

  கடந்த 2015ம் ஆண்டு மட்டுமே இந்தியாவின் வோயரிஸம் சார்ந்த 838 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தேசிய குற்ற பத்திரிக்கை ஆணையம் (National Crime Records Bureau -NCRB)மூலம் அறியப்படுகிறது. இதுப்போக இதை வெளியே சொல்லாமல் விட்டவர்கள் எத்தனை பேர் என தெரியவில்லை.

  2016ம் ஆண்டு இதன் கணக்கு 932ஆக உயர்ந்துள்ளது. மகாராஸ்டிராவில் மட்டுமே 127 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்காளத்தில் 101, தெலுங்கானாவில் 98, மத்திய பிரதேசத்தில் 92, ஆந்திர பிரதேசத்தில் 83 மற்றும் டெல்லியில் 43.

  டெல்லி, மும்பை மற்றும் கொல்கட்டா போன்ற மெட்ரோ நகரங்களில் 131 வழக்குகள் பதிவாகியுள்ளன. உடை மாற்றும் அறை, கழிவறை, பொது இடங்கள், பள்ளிகள், வீடுகள் என பல இடங்களில் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் அந்தரங்க பாகங்களையும், நிர்வாணமாகவும் படம் பிடித்துள்ளனர்.

  MOST READ: சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

  ஐரோப்பியாவில்

  ஐரோப்பியாவில்

  இந்தியாவில் இப்படியான நிகழ்வுகள் நடக்கிறது எனில், ஐரோப்பியா போன்ற இடங்களில் இதற்கு ஒருபடி மேல் போய், ஸ்கர்ட்களை கீழே இழுத்துவிட்டு அதை தொலைவில் இருந்து படம், வீடியோ எடுத்து பதிவு செய்யும் கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது.

  உலகெங்கிலும் இருக்கும் பெண்கள் வோயரிஸம் போன்ற கொடுமைகள் வெவ்வேறு வடிவங்களில் எதிர்கொண்டு வருகிறார்கள். பெண்களின் உடலை, அந்தரங்க பாகங்களை நிர்வாணமாக காண்பதில் அப்படி என்ன தான் மகிழ்ச்சி இவர்களுக்கு ஏற்படுகிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் ஆண்கள், இதுவே அவர்கள் வீட்டு பெண்களுக்கு நேர்ந்தால் என்ன செய்வார்கள்...?

  கற்பழிப்பு மட்டுமே பெண்களுக்கு எதிரான பெரும் குற்றம் என்று கருதி வருவோர் இதுக்குறித்தும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Voyeurism: A Stranger Watched Me Shower, A Shocking Experience of Girl Assistant Director!

  Voyeurism: A Stranger Watched Me Shower, A Shocking Experience of Girl Assistant Director!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more