For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தல அஜித் பற்றி பலரும் அறியாத பர்சனல் லைப் உண்மைகள் மற்றும் பழக்க வழக்கங்கள்!

By Staff
|

அஜித் என்றாலே அனைவருக்கும் மனதில் எழும் முதல் விஷயம் தன்னம்பிக்கை. இதை, இவரது போட்டி நடிகராக கருதப்படும் விஜய்யும் கூட ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அஜித் ஒரு பன்முக திறமை கொண்ட நபர். நடிப்பு, ரேஸிங், ஏரோ-மாடலிங், சமையல், புகைப்படம், இன்டீரியர் டிசைனிங் என பல வேலைகளை நன்கு கற்று தேர்ந்துள்ளார்.

Unknown Facts And Personal Behavior about ‘Thala’ Ajith Kumar!

மேலும், மற்ற தொழில்களை போல நடிப்பும் ஒரு தொழில் தான் ஷூட்டிங் ஸ்பாட் வரை மட்டிலுமே நான் ஒரு நடிகன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பிய பிறகு தானும் மற்றவர்களை போல ஒரு சாமானிய மனிதன் தான் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார். இதையே அனைவரிடமும் கூறுகிறார்.

அதனால் தான் அஜித் எந்தவொரு திரைப்பட நிகழ்சிகளுக்கும் வருவதில்லை. மேலும், ஒரு நல்ல நடிகனாக இருப்பதை காட்டிலும், நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறார் அஜித்.

அஜித் மற்றும் அவரது சினிமா வாழ்க்கை பற்றிய உண்மைகள் பலவன நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அவரது பர்சனல் வாழ்க்கை பற்றி வெகு சிலர் மட்டுமே நன்கு அறிந்திருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயோ-டீகிரேடபில்

பயோ-டீகிரேடபில்

எப்போதுமே அஜித் பயோ-டீகிரேடபில் பேப்பர் பிளேட்களில் தான் உணவு உண்ண விரும்புகிறார். தன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் கூட அதே முறையை தான் பின்பற்ற கூடுகிறார்கள். இதை ஆரோக்கியத்திற்காக பின்பற்றுகிறார் அஜித். இதன் மூலம் பிளேட்களை அதிகமுறை கழுவ வேண்டியதும் இல்லை, பாக்டீரியா தொற்றுவதையும் தவிர்க்க முடியும் என கருதுகிறார் அஜித்.

MOST READ: சனிபகவானின் அனுகூலத்தை பெற இந்த இடங்களில் விளக்கேற்றினால் போதும்

இன்டீரியர் டிசைன்

இன்டீரியர் டிசைன்

அஜித் பன்முக திறன் கொண்டவர் என அனைவருக்கும் தெரியும். அதே சமயத்தில் அவர் வீடு மற்றும் அலுவலகங்களை இன்டீரியர் டிசைன் செய்யவும் விரும்புவார் என்பது பலரும் அறியாத ஒன்று. ஆம்! அஜித்திற்கு பிடித்தமான விஷயங்களில் இதுவும் ஒன்று. தனக்கு மட்டுமின்றி தனது நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டத்தினருக்கும் இந்த வகையில் உதவுகிறார் அஜித்.

இயக்குனர் மரணம்

இயக்குனர் மரணம்

அஜித் நடித்த முதல் படமான பிரேம புஸ்தகம் என்ற படத்தை இயக்கி வந்த இயக்குனர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் திரைப்படம் எடுத்து முடிக்கும் முன்னரே நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

இன்றும் இவரது பெயரில் ஒவ்வொரு வருடமும் இந்திய சினிமாவில் அறிமுகமாகும் சிறந்த இயக்குனருக்கு கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அளவில் சிறந்த விருதாக கருதப்படுகிறது.

ஆசீர்வாதம்

ஆசீர்வாதம்

வீட்டில் இருந்து ஷூட்டிங் கிளம்பும் எல்லா நாட்களிலும் தனது அப்பா, அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்காமல் செல்ல மாட்டார் அஜித். ரெடியாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்ததும் அஜித் செய்யும் முதல் வேலை இதுதானாம்.

அதே போல, ஷூட்டிங் முடிந்து ஜிம் சென்று வந்ததும் நேராக வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க தான் விரும்புகிறார். அவர்களுடன் விளையாடி மகிழ்வார். மற்றபடி வெளியே எங்கேயும் போக மாட்டார்.

ஆறு மணிக்கு மேல்...

ஆறு மணிக்கு மேல்...

பகல் வேளையில் கால் செய்யும் போது ஹலோ என்றும் பேசி ஆரம்பிக்கும் அஜித். மாலை ஆறு மணிக்கு மேலாக யாருக்கு கால் செய்தாலும், இது உங்களிடம் பேச சரியான நேரமா? என்று கேட்டுதான் பேச்சை துவங்குகிறார். யாருடைய நேரத்தையும் வீணடிக்க கூடாது என்பதில் அஜித் கவனமாக இருக்கிறார்.

வார இறுதி நாட்களில், ஷூட்டிங் இல்லாத நாட்களில் அஜித் எப்போதும் உறவினர்களுடன் தான் நேரம் செலவழிக்கிறார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் அனைவருடம் கணிசமான நேரம் செலவழிப்பது அஜித்திற்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று.

ஹெல்மட்!

ஹெல்மட்!

இவர் காரில் அல்லது பைக்கில் செல்லும் போது, அஜித்தை அறிந்து யாரேனும் ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்தால், வாழ்த்தினால்... ஒருவேளை அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தார்கள் எனில், ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்ட அறிவுரைக்கிறார்.

இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் விபத்தில் ஹெல்மட் அணியாத காரணத்தால் மரணம் அடைந்ததால் இதை அஜித் பின்பற்றுவதாக கூறுகிறார்கள்.

MOST READ: விளக்கெண்ணெய் முடிக்கு தடவலாம்... ஆனா முகத்துக்கு தடவலாமா? தடவினா என்னவாகும் நீங்களே பாருங்க...

நகங்கள்

நகங்கள்

ஒருவேளை உங்களுக்கு அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது எனில், அவருக்கு கிப்ட் என்ன வாங்கலாம், அவரிடம் எப்படி புகைப்படம் எடுக்கலாம் என்பதை யோசிக்கும் முன்னர், உங்கள் விரல் நகங்களை நீட்டாக வெட்டிக் கொள்ளுங்கள். சுகாதார விஷயத்தில் அஜித் மிகவும் ஸ்ட்ரிக்ட். வெட்டாத நகங்கள், நகங்களில் அழுக்கு இருப்பதை கண்டால் கோபித்துக் கொள்வாராம்.

மேலும், தன்னிடம் வேலை செய்யும் அனைவரையும் நீட்டாக இருக்கும் படி மாற்றி வைத்துள்ளார் அஜித். அழகை காட்டிலும், சுத்தமாக இருக்க வேண்டியது தான் அவசியம் என்று கருதுகிறார் அஜித்.

ஓய்வு நேரங்களில்

ஓய்வு நேரங்களில்

ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஓய்வெடுப்பதை காட்டிலும், அஜித் ஓவியம், சமையல் மற்றும் புகைப்படம் எடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். மேலும், வீட்டில் தன்னுள் இருக்கும் மெக்கானிக்கிற்கு தீனிப் போட தனக்கென ஒரு தனி இடமும் வைத்திருக்கிறார். தனது ஓய்வு நேரங்களில் இப்படியான வேலைகள் செய்து தான் அஜித் நேரம் செலவு செய்கிறார்.

அன்பு கட்டளை

அன்பு கட்டளை

தன்னை யார் கிண்டல், கேலி செய்தாலும், அதற்கு பதிலாகவோ அல்லது தனது போட்டி நடிகர்களையோ கேலி, கிண்டல் செய்யக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை போட்டிருக்கிறார் அஜித் குமார். மேலும், தனது அலுவலகம் மற்றும் சுற்றத்தில் இப்படியான மக்களை அவர் அண்டவிடுவதும் இல்லை.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

தான் ஒரு பிராஜக்டில் இருந்து வெளிவரும் வரை அடுத்த கதை விவாதங்களில் ஈடுபடுவதில்லை அஜித். அதே போல தயாரிப்பாளர்கள் யாரேனும் சந்திக்க வேண்டும் என்று கேட்டால், அஜித்தாகவே அவர்களது அலுவலகங்களுக்கு சென்று நேரில் பார்த்து வருகிறார். என்ன இருந்தாலும், அவர்கள் தான் ஓனர் அவர்களுக்கான மதிப்பை அளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் அஜித்.

15 நிமிடம்

15 நிமிடம்

ஒரு இயக்குனர் தன்னிடம் கதை கூற வந்தால், முதலில் அவருடன் சிறிது நேரம் இயல்பாக பேசுவாராம் அஜித். அந்த உரையாடலில் அவர்களுக்கு இடையே வேவ்லென்த் ஒத்துப்போகும் என்பதை அறிந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார். இதை வெறும் 15 நிமிட உரையாடலில் கண்டுபிடித்துவிடுகிறார் அஜித்.

MOST READ: தெற்கு பார்த்த வீடு நல்லதா? கெட்டதா?

மொபைல் எண்

மொபைல் எண்

தான் ஒரு படத்தில் புக் ஆகிவிட்டால், நாள் ஒன்றில் இருந்து அந்த படத்தின் டப்பிங் முடியும் வரை ஒரே எண்ணை தான் பயன்படுத்துவார் அஜித்.

ஆனால், அந்த படத்திற்கும், தனக்குமான எல்லா வேலைகளும் முடிந்த மறுநாளே எண்ணை மாற்றிவிடுவார். சைக்கலாஜிக்கலாக இது அந்த பிராஜக்ட்டில் இருந்து முழுவதுமாக வெளிவர உதவும் என அஜித் கருதுகிறார்.

இடது கை...

இடது கை...

வலது கை பழக்கம் கொண்டவர் தான் என்ற போதிலும், அஜித் வெளியிடங்களுக்கு செல்லும் போது, காபி கப்களை பயன்படுத்தும் போது இடது கையை தான் பயன்படுத்துவார்.

பெரும்பாலானவர்கள் வலது கை பழக்கம் கொண்டிருப்பதால் பாக்டீரியா இன்பெக்ஷன் தவிர்க்க இதை அவர் பல காலமாக பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Facts And Personal Behavior about ‘Thala’ Ajith Kumar!

Unknown Facts And Personal Behavior about ‘Thala’ Ajith Kumar!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more