பௌர்ணமி, சந்திர கிரகணம், ப்ளூ மூன் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!

Written By:
Subscribe to Boldsky

பௌர்ணமி என்பது நமக்கு எப்போதும் ஒரு முக்கிய நாளாகவே உள்ளது. அதே சமயத்தில் இந்த முழுநிலவு நாளானது அதன் ஒளியால் நமது மனதில் மகிழ்ச்சியையும் தருகிறது. இதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் ஒரு உண்மை என்னவென்றால் இந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் உள்ளன. அதில் ஒரு பவுர்ணமியானது ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்றும், மற்றொரு பவுர்ணமியானது ஜனவரி 31-ஆம் தேதியன்றும் வரவிருக்கிறது.

இந்த நாளை ஆங்கிலத்தில் ப்ளூ மூன் தினம் என்று கூறுகிறார்கள். இதன் சிறப்பம்சம் என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் தொடந்து காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழு நிலவு

முழு நிலவு

முழு நிலவு அதாவது பௌர்ணமி நாள் ஆனது பெரும்பாலான மாதங்களில் மாதத்திற்கு ஒரு முறை தான் தோன்றும். இது இயல்பான ஒன்று தான். ஆனால் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பவுர்ணமி வரப்போகிறது. இந்த நிகழ்வானது 2 அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும்.

நீல நிறத்தில் தெரியுமா?

நீல நிறத்தில் தெரியுமா?

நீல நிலவு என்றால் நிலவு நீல நிறமாக தெரியும் என்பதில்லை.. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமிகள் தான் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகின்றது. ப்ளூ மூன் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் அரியதாக நிகழும் ஒரு நிகழ்வினை குறிக்க பயன்படுகிறது. இதனை ஒன்ஸ் இன் ஏ ப்ளூ மூன் என்றழைக்கப்படுகிறது. இதனை தமிழில் அத்தி பூத்தாற் போல சொல்லும் சொல்லுக்கு இணை பொருளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

மூன்று நிகழ்வுகள்

மூன்று நிகழ்வுகள்

இந்த ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இந்த நாளில் மூன்று நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. அவையாவன, சூரிய உதயம், சந்திர கிரகணம், இரண்டு பவுர்ணமிகள் ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கின்றன. இது மிகவும் அதிசயமான நிகழ்வாகும்.

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பசிபிக் பெருங்கடலிலும் மேற்கு வட அமெரிக்காவிலும் சந்திர கிரகணம் தோன்றும்.

எப்படி நிகழ்கிறது

எப்படி நிகழ்கிறது

சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.

எப்போது காணலாம்?

எப்போது காணலாம்?

இந்த சந்திர கிரகணம், அதிகாலை 3. 51-க்கு தோன்றுகிறது. சிகப்பு வளையம் சூழ்ந்திருக்கும் இந்த நிகழ்வை பார்வையாளர்கள் அதிகாலை 4.48-க்கு கிடைக்கும். இது சிவப்பு நிறத்தை உண்டாக்குவதால் இது சிவப்பு சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது.

பெரிய நிலவு

பெரிய நிலவு

அதிகபட்ச கிரகணத்தில், நிலவு பூமியின் நிழலின் மையத்தில் இருக்கும். சந்திரன் மேற்கு-வடமேற்கு வானத்தில் காணப்படும். நிலவானது பூமிக்கு மிக மிக அருகில் இருக்கும் காரணத்தினால் இது வழக்கத்தை விட பெரியதாகவும், அதிக ஒளியை தரக் கூடியதாகவும் இருக்கும்.

இந்த மாதத்தில் வராது

இந்த மாதத்தில் வராது

நிலவின் சுழற்சியானது 29.53 நாட்களாகும். இது ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரும் நிகழ்வு உண்டாகிறது. இந்த செயலானது 30 அல்லது 31 நாட்கள் கொண்ட மாதங்களில் மட்டுமே நிகழும். பிப்ரவரி மாதத்தில் இந்த நிகழ்வு நடைபெற வாய்ப்பு கிடையாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync
English summary

Supermoon, blue moon, total lunar eclipse to appear together

Supermoon, blue moon, total lunar eclipse to appear together
Story first published: Monday, January 8, 2018, 9:30 [IST]