மீண்டும் அசிங்கப்பட்டது டெல்லி: ஹோலியின் பெயரில் பெண்கள் மீது விந்து நிறைத்த பலூன் வீச்சு!

Posted By:
Subscribe to Boldsky
ஹோலியின் பெயரில் பெண்கள் மீது விந்து பலூன் வீச்சு!- வீடியோ

இன்னும் எத்தனை முறை, எத்தனை வகையில் இகழ்ச்சிகளை தன் மீது வாரி இறைத்துக் கொள்ள போகிறதோ இந்திய தலைநகரம் புது தில்லி. ஏற்கனவே, இந்தியாவின் தலைநகரமா? கற்பழிப்பு நகரமா? என்று விவாதம் நடத்தும் அளவிற்கு புது தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு பெரிய கேள்வுக்குறியாக மாறியிருக்கிறது.

மேலும், வருடம் முழுவதும் மாசுப்பட்ட காற்றின் காரணமாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் தத்தளித்து வருகிறார்கள். இதற்கு ஒரு நல்ல மாற்றம் கொண்டு வர முடியாமல் புது தில்லி அரசு திண்டாடி வருகிறது.

இதற்கு எல்லாம் நடுவே, சமீபத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது, சில ஆண்கள் கூட்டம் பெண்கள் மீது வர்ண நீர் நிறைத்த பலூனை வீசி அடிப்பது போல, பலூனில் விந்து நிறைத்து வீசியடித்து மிக அசிங்கமாக நடந்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாலையில்...

சாலையில்...

ஒரு பெண் புது தில்லி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருக்கிறார். திடீரென அவரது பின் புறத்தில் சில ஆண்கள் கூட்டம் நீர் நிறைத்த பலூன்களை வீசி செல்கின்றனர். அவர் திரும்பி பார்க்கும் போது அந்த கூட்டம் அவரை நோக்கி நகைத்தப்படி ஹேப்பி ஹோலி என்று கத்தியப்படியே ஓடி செல்கிறது.

ஹோலி என்பது வர்ணங்களின் பண்டிகை என்று நாம் அறிவோம். ஆனால், அதிலும் வக்கிரம் கலக்கப்படும் என்பதை புது தில்லி மாணவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

அதில் என்ன இருந்தது?

அதில் என்ன இருந்தது?

அந்த பெண் ஹாஸ்டல் திரும்பி உடை மற்றும் போது தான், அவர்கள் வீசிய நீர் நிறைத்த பலூனில் இருந்து வெளிப்பட்டது வெறும் நீர் மட்டும் அல்ல என்பதை உணர்ந்தார் அந்த பெண். உற்று தனது உடையை நோக்கிய போதுதான். அந்த பலூனில் நீருக்கு பதிலாக விந்து நிறைத்து வீசி எறியப்பட்ட பலூன் என்பது அந்த பெண்ணுக்கு அறிய வந்தது.

இந்த ஹோலி கொண்டாட்டத்தில், பல பெண்கள் தங்கள் மீது இப்படியான பலூன்கள் வீசப்பட்டன என்று புகார்கள் அளித்துள்ளனர்.

பெண்கள் ஸ்ரீராம் கல்லூரி, புது தில்லி!

பெண்கள் ஸ்ரீராம் கல்லூரி, புது தில்லி!

24.02.2018 அன்று முதல் முறையாக இப்படியான சம்பவம் குறித்து இளம்பெண் பதிவொன்றை வெளியிட்டார். அதில்,

எனக்கு விந்து குறித்து பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், முதல் முறையாக இன்று அறிந்துக் கொண்டேன். எனது குர்தாவில் சிலர் நீர் நிறைத்த ஹோலி பலூன் என்ற பெயரில், விந்து நிறைத்த பலூனை வீசி சென்றனர். என்று கூறியிருந்தார்.

வெள்ளையான படிவம்!

வெள்ளையான படிவம்!

அப்பெண் கூறியதாவது..,

"நேற்று அமர் காலனி மார்கெட் அருகே ஒரு காபி ஷாப்புக்கு சாப்பிட தோழியுடன் சென்றேன். நாங்கள் மீண்டும் திரும்பும் போது 5 மணி இருக்கும். ஆட்டோ ரிக்ஷாவில் வந்த சிலர் எங்கள் மீது நீர் நிறைத்த பலூன்களை வீசி சென்றனர். அது எங்கள் மீது பட்டு உடைந்து சிதறியது. அதில் இருந்து சிதறிய திரவமானது குர்தா மற்றும் லேக்கின்ஸ் முழுக்க பரவியது.

நான் ஹாஸ்டல் திரும்பி உடை மாற்றும் போது, கருப்பு லேக்கின்ஸ்ல் ஆங்காகே வெள்ளை படிவங்கள் இருந்தது. அது மிகவும் துர்நாற்றம் வீசியது. பிறகு தான் நான் அறிந்தேன், அந்த கும்பல் எங்கள் மீது வீசி சென்றது விந்து நிறைத்த பலூன் என்று.

குமட்டலும் கோபமும்!

குமட்டலும் கோபமும்!

இது அறிந்த நொடியில் இருந்து எனக்கு குமட்டலும், கோபமும் தான் வந்தது. ஆனால், அதை எப்படி எந்த வகையில் காண்பிப்பது என்று தெரியவில்லை.

அந்த மார்கெட்டில் இருந்த யார் ஒருவரும் பெண்கள் மீது இப்படி பலூன் வீசுவது குறித்து தட்டிக் கேட்கவில்லை. ஏன் நானும் ஏதோ ஹோலி கொண்டாட்டம் என்று தான் நினைத்தேன். ஆனால், இப்படியொரு அருவருக்கத்தக்க செயலில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று நான் கருதவில்லை.

என்ன தவறு?

என்ன தவறு?

இரண்டாம் நிகழ்வு..,

வெள்ளை குர்தா அணிந்திருந்தால், உடனே அவர் மீது ஹோலி பொடி தூவ வேண்டும், நீர் நிறைத்த ஹோலி பலூன் வீசி அடிக்க வேண்டும் என்பது சட்டமா என்ன?

மேலும், இந்த ஹோலி சீசன் வந்துவிட்டால் போதும், ஹேப்பி ஹோலி என்று கத்திக் கொண்டு பெண்களை கண்ட இடத்தில் தீண்டி மகிழ ஒரு கூட்டம் காக்கா மாதிரி சுற்றிவரும்.

ஆனால், எனக்கு நடந்த சம்பவமானது அதை விட கொடுமையானது...

மாலை 04:00

மாலை 04:00

அப்போது மணி சரியாக மாலை நான்கு மணி இருக்கும் சிலர் எங்களை சுற்றிக் கொண்டு ஹேப்பி ஹோலி என்று ஓடினார்கள். அப்போது சிலர் எனது வெள்ளை உடை மீது ஹேப்பி ஹோலி என்று கூறி நீர் நிறைத்த பலூன் சிலவற்றை வீசினார்கள். என்னால் ஒரு அடி கூட அவர்களை கடந்து எடுத்து வைக்க முடியவில்லை.

ஆனால், அவர்கள் அந்த பலூன் வீசி சென்ற சில நிமிடங்கள் கழித்த தான் தெரிய வந்தது, அவர்கள் வீசியது நீர் நிறைத்த பலூன் அல்ல, ஆண்களில்ன் விந்து நிறைத்த பலூன் என்று.

ஏன்?

ஏன்?

ஒரு கொண்டாட்டத்தை, விழாவை ஏன் இப்படி உங்கள் வக்கிரமான புத்தியால் மோசமாக மாற்றுகிறீர்கள். இது போன்ற செயல்களால் தான், இப்படியான கொண்டாட்டங்களை தடை செய்ய கூற வேண்ட மனம் முனைகிறது.

ஹோலி என்பது அனைவரும் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய விழா. உங்கள் வக்கிர புத்தியை, பசியை தீர்த்துக் கொள்ளும் இடம் அல்ல ஹோலி.

போலீஸ் புகார்!

போலீஸ் புகார்!

லேடி ஸ்ரீராம் கல்லூரியை சேர்ந்த பெண்கள் தான் இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி போலீஸில் புகாரும் அளித்தனர். இவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவுகள் வைரலாக பரவின.

மேலே, பெண்கள் குறிப்பிட்ட மாதிரியாக, அனைவரின் மகிழ்ச்சிக்காக தான் ஹோலி போன்ற கொண்டாட்டங்கள் வருடா வருடம் கடைப்பிடிக்கப்படுகின்றன. இப்படி சிலர் செய்யும் வக்கிரமான காரியங்களால். இதுப் போன்ற கொண்டாட்டங்கள் வருங்காலங்களில் மறைந்தே போகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: india இந்தியா
English summary

Delhi Ashamed Again: Students Thrown Semen Filled Balloons on Girls in Holi Celebration!

Delhi Ahamed Again: Students Thrown Semen Filled Balloons on Girls in Holi Celebration!