Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story
கணவனின் மரணத்திற்கு பிறகான ஒரு விதவை பெண்ணின் வாழ்க்கை... # Her Story
இந்தியா போன்ற நாட்டில்... கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது. சொந்த குடும்பத்தில் துவங்கி, சமூகம், உலகம் என அனைத்தையும் எதிர்த்து அவள் போராடியே ஒவ்வொரு நாளையும் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.
குழந்தைகளை வளர்ப்பதில் இருந்து, ஒரு வேலைக்கு சென்று வருவதில் வரை யாருடைய துணையும் இன்றி அவர் சுயமாக நின்று வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல.
இந்தியாவின் பல மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் தனது சொந்த குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் காப்பகங்களில் சேர்க்கப்படும் அவலம் நடந்து வருகிறது. கணவனை இழந்த பிறகு அந்த பெண்மணி வீட்டின் ஒரு பாரமாக தான் பார்க்கப்படுகிறாள்.
படிப்பதற்கு எளிதாக இருக்கலாம்... நேரே காணும் போது அவர்கள் மீது சோகம், வருத்தம் ஏற்படலாம்... ஆனால், அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான்.. அதில் புதையுண்டு இருக்கும் ரணம் உணர முடியும்.
அவர்களது வலி, புறக்கணிப்பு, தனிமை, வேதனை போன்றவற்றை புகைப்படங்களாக பதிவு செய்துள்ளது நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம்

வ்ரிந்தாவன்!
உத்திரபிரதேசம் மாநிலத்தின் ஒரு ஆன்மீக ஸ்தலம் வ்ரிந்தாவன். இங்கே இந்து கடவுளான கிருஷ்ணனை அதிகமானோர் வழிப்பட்டு வருகிறார்கள். கோவில்களின் இல்லம் என கருதப்படுகிறது வ்ரிந்தாவன். இங்கே கிருஷ்ணனுடன்... ராதையையும் சேர்த்து வழிபடும் வழக்கமும் காண முடிகிறது.
ஆன்மீகத்திற்கு பெயர்போன இந்த ஸ்தலம் விதவைகளின் இல்லம் என்று அழைக்கப்படுகிறது. கணவனை இழந்த புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்கான அடைக்கலமாக காணப்படுகிறது வ்ரிந்தாவன்.
Image Source: nationalgeographic

வெள்ளை ஆடை!
இந்து மத சம்பிரதாயம் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை ஆடை தான் அணிய வேண்டும் என்று கூறுகிறது. இன்றுமா இப்படியான வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பகின்றன... என்று சிலர் கருதலாம். இந்தியாவின் முக்கிய நகரங்களை தவிர இன்னும் எண்ணற்ற பெரும்பாலான இந்திய பகுதிகளில் இப்படியான வழக்கங்கள் இன்னும் நூறு சதவிதம் பின்பற்றப்பட்டு தான் வருகிறது.
ஆயினும், சில இடங்களில் மட்டும் கணவனை இழந்த இளம் பெண்கள் வண்ண உடை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.
Image Source: nationalgeographic

உதவியற்ற நிலை...
விதவை பெண்கள் பெரும்பாலும் அவர்களுக்கான வேலைகளை அவர்களே தான் செய்துக் கொள்ள வேண்டும். இந்துமத சம்பிரதாயத்தின் படி கணவனை இழந்த பெண்கள் சில நல்ல விஷேச நிகழ்சிகளில் பங்கெடுத்துக் கொள்ள தடை விதுக்கப்படுகிறது. மேலும், வீட்டிலும் கூட அவர்கள் தனிமைப்படுத்த படுகிறார்கள். அவர்களுக்கான அனைத்து வேலைகளும் அவர்களே செய்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.
இந்த புகைப்படம் இந்தியாவின் மற்றுமொரு ஆன்மீக ஸ்தலமான வாரணாசியில் எடுக்கப்பட்டது.
Image Source: nationalgeographic

சமூக ஆர்வலர்கள்!
இந்தியாவில் கணவனை இழந்த விதவை பெண்களுக்கு உதவவும், அவர்களுக்கான இருப்பிடங்களை அமைக்கவும் பல சமூக ஆர்வல அமைப்புகள் முயன்று வருகின்றன. விதவை பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, கடனுதவி என பல சேவைகள் செய்து வரப்படுகிறது.
சில சமயங்களில் விதவை பெண்களை தவறான செயலுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு அரக்க கூட்டம் சமூகத்தில் உலவி வருகிறது.
Image Source: nationalgeographic

கொண்டாட்டங்கள்!
கணவனை இழந்த விதவை பெண்கள் எந்தவொரு கொண்டாட்டத்திலும் பங்கெடுத்துக் கொள்ள கூடாது. அவர்கள் சோகமாகவே இருக்க வேண்டும்., திருமண நிகழ்வுகளில் இருந்து வீட்டு விசேஷங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள்... ஏன் வட இந்தியாவில் ஹோலி போன்ற கொண்டாட்டங்களில் கூட விதவை பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இப்படியான எதிர்ப்பு, தடைகளில் இருந்து விதவை பெண்களுக்கு விடுதலை வாங்கி தர வேண்டும்.இந்த சமூகத்தில் அவர்களுக்கான ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என பல தொண்டு நிறுவனங்கள் போராடி வருகின்றன.
Image Source: nationalgeographic

விபச்சாரம்!
இந்தியாவின் சில பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் கணவனை இழந்த விதவை பெண்களை கீழ்த்தரமான செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களது பொருளாதார சிக்கலை, தேவையை அறிந்துக் கொண்டு... உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களை விபாசார தொழில் ஈடுபடுத்துகிறார்கள்.
இதனால், அவர்களது குடும்பத்திற்கு பண உதவி கிடைக்கிறது என்பதால்.. அவர்களும் வேறு வழியின்றி இதற்கு சம்மதிக்கிறார்கள்.
Image Source: nationalgeographic

ஒதுக்குதல்!
சொந்த பந்தங்களில் இருந்து, சமூகம் வரை விதவை என்றால் ஒரு அபசகுனமாக பார்க்கும் கலாச்சாரத்தை முதலில் மாற்ற வேண்டும். இதுவே, மனைவியை இழந்த ஒரு கணவன் இப்படி புறக்கணிக்கப்படுவது இல்லையே ஏன்?
பிறப்பில் இருந்து இறப்பு வரை அனைத்திலும் ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் என்றே காணப்படுகிறது. திருமணத்திற்கு முன் ஒரு பெண் உறவு வைத்துக் கொள்வதையும், ஆண் உறவு வைத்துக் கொள்வதையும் கூட இந்த சமூகம் வெவ்வேறு பார்வையில் தான் காண்கிறது.
மனைவி இறந்த பிறகு குடும்பமே சேர்ந்து அந்த ஆணுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கும். ஆனால், அதுவே கணவனை இழந்த பெண் என்றால்... அந்த குடும்பமே அவளை ஒதுக்கி வைத்துவிடுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி கண்டாலுமே கூட... அடிப்படை அறிவில் இந்தியா இன்னும் பின்தங்கி தான் இருக்கிறது என்பதற்கு.. இந்தியாவில் வாழ்ந்து வரும் விதவை பெண்களே சாட்சி!



Click it and Unblock the Notifications











