For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகளை 2லட்ச ரூபாய்கு விற்றுவிட்டு நாடகமாடிய தந்தை !

|

வறுமை காரணமாக தவறாக இருந்தாலுமே ஊரே சேர்ந்து ஓர் தவறை செய்ய முன் வருவது இன்று மிக சகஜமாக இருக்கிறது. இன்று என்று சொல்லி இதனை நவீன காலத்தின் பிரச்சனையாக மட்டும் அணுக முடியாது. சில இடங்களில் காலங்காலமாகவும் நடந்து வருகிறது

பல ஆண்டுகளாக இப்படித்தானே நடக்கிறது என்று சொல்லி அதனை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்காமல் இது தான் வழக்கமாக நடைபெறும் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு நகர்ந்து விடுகிறோம். ஜார்கண்ட் மற்றும் அதனை சுற்றியிருக்கும் மாநிலங்களில் பெண்கள் கடத்தப்படுவது மிகவும் இயல்பாக நடக்கிறது. கடத்தப்படுவது என்றால் யாரென்றே தெரியாத நபர்களால் எல்லாம் கடத்தப்படுவது இல்லை மிகவும் பரிச்சையமான நபர்களால் கடத்தப்படுகிறார்கள். அதோடு, வறுமையினால் தங்கள் மகளையே விற்று வருவதும் உண்டு. இப்படி விற்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைக்கு, பாலியல் தொழிலுக்கு தான் அனுப்பப்படுகிறார்கள்.

சில நேரங்களில் வயதான நபருக்கு இளம்பெண்களை திருமணம் என்ற பெயரில விற்பதும் நடக்கிறது. இவற்றில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் தான் மீட்கப்படுகிறார்கள். அப்படி மீட்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பது தான் இங்கே கதைக்களம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூலி வேலை :

கூலி வேலை :

Image Courtesy

மீனலின் அம்மாவும் அப்பாவும் கோதுமை விளைந்திருக்கும் வயலில் கூலி வேலை பார்த்து வந்தார்கள். வயலில் வேலை இல்லாத போது கட்டிட வேலை அல்லது சந்தைகளுக்கு கூலியாக செல்வார்கள்.

நீண்ட காலமாக ஆஸ்துமாவிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் மீனலின் அம்மாவிற்கு நோயின் தீவிரம் அதிகரித்து படுத்த படுக்கையாகிவிட்டார். அவ்வப்போது ஊரிலிருக்கும் வைத்தியரை அழைத்து மருத்துவம் பார்த்தார்கள். ஆனால் தொடர்ந்து மருந்து வாங்கி கொடுக்கும் அளவிற்கு பண வசதி இடம் கொடுக்கவில்லை.

மீனல் :

மீனல் :

Image Courtesy

மீனல் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். உறவுக்கார அத்தை தன் ஒன்றரை வயது மகனுடன் அடிக்கடி மீனலின் வீட்டிற்கு வருவாள் வரும்போது எல்லாம் திண்பண்டங்கள் வாங்கி வருவள், அவ்வப்போது அப்பாவிடம் காசைத் திணித்து அம்மாவிற்கு மருத்து வாங்கி கொடுக்கச் சொல்வாள்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக இது நடந்தது. பின் ஒரு நாள் அந்த உறவுக்கார அத்தை, மீனலை என்னிடம் அனுப்புங்கள் நான் அவளுக்கு வேலை வாங்கித் தருகிறேன். அந்த வருமானம் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றாள்.

போய் வா :

போய் வா :

Image Courtesy

என்ன வேலை எங்கே அனுப்புவாள்? அந்த வேலை மகளால் செய்ய முடியுமா என்று எதுவும் யோசிக்கவில்லை. அதைவிட அவர்கள் யோசிப்பதற்கான சந்தர்ப்பங்களும் அங்கே இல்லை. தந்தை ஒருவரால் மட்டும் குடும்பத்தை ஓட்ட முடியவில்லை, வேலைக்கு ஓடுவாரா? மனைவியை பார்ப்பாரா? அல்லது பிள்ளையைத் தான் பார்ப்பாரா? அதனால் அந்த உறவுக்கார பெண் சொல்வது தான் சரியென்று பட்டது.

மீனலிடம் வந்தார். மீனல் அத்தையுடன் இன்று நீ ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று மட்டும் தான் மீனலிடம் சொல்லப்பட்டது.

புது உலகம் :

புது உலகம் :

Image Courtesy

கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு பாழடைந்த ஓர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கே அவளுக்கு உணவு வழங்கப்பட்டது. வீட்டு வேலை என்று தான் அழைத்துச் சென்றாள், ஆனால் அவளை அடித்து உதைத்து சித்திரவதை செய்ய ஆரம்பித்தார்கள். சரியாக உணவு வழங்கவில்லை,அதோடு இவளை பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுக்க மீனல் தன்னுடைய ஊரிலிருக்கும் ஆசிரியருக்கும் கடிதம் அனுப்புகிறாள்.

புகார் :

புகார் :

Image Courtesy

மீனலின் வீட்டில் தகவல் சொல்ல, அவர்களோ வீட்டு வேலைக்காகத் தான் அனுப்பியிருக்கிறோம், அங்கே வேலை செய்யப் பிடிக்காமல் இப்படி பொய் சொல்கிறாள் மாதமானாள் எங்களுக்கும் சரியாக பணம் கொடுத்து விடுகிறார்கள். அவர்களிடம் போய் நாங்கள் எப்படி கேட்பது. வேலை செய்தால் தானே பணம் கொடுக்க முடியும் என்று நியாயம் பேச ஆரம்பித்தார்கள்.

ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார். புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை தொடர்ந்து கோர்ட்டில் பொது நல வழக்கு தொடுத்தார்.

மீண்டும் கடத்தல் :

மீண்டும் கடத்தல் :

Image Courtesy

சிறுமியை நேரில் கொண்டு வந்து ஆஜர் படுத்த வேண்டும் என்ற உத்தரவிட்டது நீதிமன்றம்.மீனலை அழைத்து வந்தார்கள். கோர்ட்டில் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறியதால் பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டாள் . மாத வருமானம் குறைந்ததால் மீனலின் மீது பெரும் கோபத்தில் இருந்தார் அப்பா.

அம்மாவிற்கு மகளை பார்த்ததும் அங்கு நடந்த கொடுமைகளை மகளின் வாக்குமூலமாகவே கேட்டதும் மகளை அனுப்ப விருப்பமில்லை. இப்படி இரண்டாண்டுகள் ஓடியது. அம்மாவிற்கு மருந்து வாங்குவதற்காக கடைக்குச் சென்ற மீனலை பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்றார்கள்.

பாலியல் வன்கொடுமை :

பாலியல் வன்கொடுமை :

Image Courtesy

அதே வீடு ஆனால் இம்முறை வீட்டுவேலை அல்ல, இவளிடம் இரண்டு கஸ்டமர்களை அனுப்பி பாலியல் தொழில் செய்ய வர்புறுத்தினாள் அத்தை. கத்தி அலறுகிறாள் மீனல்.. கத்தாதே.. கத்தினாள் கூடுதலாக நான்கு பேரை அனுப்பி வைப்பேன் என்று மிரட்டப்படுகிறாள்.

அங்கிருந்து பல ஊர்களுக்கு மாற்றி மாற்றி கொண்டு செல்லப்படுகிறாள்.

தந்தை :

தந்தை :

Image Courtesy

தந்தையின் உதவியுடன் தான் இந்த கடத்தல் நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மீனலுக்கு இனி யார் உதவுவார் என்று தெரியவில்லை. இந்த விஷயம் மீனலின் தாய்க்கும் தெரியவர, இம்முறை மீனலின் தாய் மகளை அழைத்துக் கொண்டு வர முயற்சிகளை முன்னெடுக்கிறார்.

இந்த விவகாரத்தில் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை உருவானது.

தாய்ப்பாசம் :

தாய்ப்பாசம் :

Image Courtesy

உறவுக்கார பெண்ணை அணுகி மகளை தன்னிடம் அனுப்பி விடுமாறு கேட்கிறார். அவரோ கணவனிடம் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து மீனலை வாங்கிவிட்டதாகவும் அவளை அனுப்ப முடியாது என்கிறாள்.

மகளை இனி எங்கே சென்று தேடுவது என்று தெரியவில்லை இனி அவ்வளவு தான் மகள் கிடைக்கமாட்டாள் என்று அழுது கொண்டே ஊருக்குத் திரும்புகிறார். மீனலை நான் விற்றுவிட்டேன், உனக்கு மருத்துவம் பார்க்கத்தான் அவளை விற்றேன் என்று சொல்கிறார் கணவர், ஆனால் இம்முறை தாய் விடாப்பிடியாக எனக்கு எந்த மருந்துகளும் வேண்டாம் மீனலை அழைத்து வாருங்கள் என்று கூறுகிறார்.

வட்டி :

வட்டி :

Image Courtesy

மீனலை அழைத்து வரவில்லை என்றால் இந்த கிணற்றில் குதித்து நான் இறந்து விடுவேன் என்று மனைவி மிரட்ட கணவருக்கு வேறு வழி தெரியவில்லை. அதோடு மகளை வீட்டு வேலைக்கு அனுப்பவில்லை அவளை பாலியல் அடிமையாக விற்றிருக்கும் உண்மையை புரிந்து கொண்டவர் மகளை தங்களிடம் அனுப்புமாறு அந்த உறவுக்கார பெண்ணை அணுகுகிறார் தந்தை.

முடியாது என்று எவ்வளவோ முறை சொல்லியும் கேட்காததால், வாங்கிய பணத்தை வட்டியுடன் சேர்த்து ஆறு லட்சமாக திருப்பிக் கொடுத்தால் தான் மகளை அனுப்புவேன் என்கிறார். ஒரு வேளை உணவுக்கே வழியில்லாதவரிடத்தில் ஆறு லட்ச ரூபாய்க்கு எங்கே செல்வார்.

உதவ முடியுமா? :

உதவ முடியுமா? :

Image Courtesy

மீனலுக்கு அங்கே ஒவ்வொரு நாளும் நரகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இந்த எந்த ஊர் என்று கூட மீனலுக்குத் தெரியவில்லை. வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்தாள். ஆயிரம் ரூபாய் வரை சேர்ந்ததும் இங்கிருந்து தப்பித்துச் செல்ல முடிவெடுத்தாள்.

ஏற்கனவே ஒரு முறை தப்பித்துச் செல்ல முயன்று பிடிப்பட்டதாள், மீனலின் மீது எப்போதுமே அந்த உறவுக்கார பெண்ணின் ஒரு கண் இருந்து கொண்டேயிருக்கும். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள்.

எனக்காக பயப்படவில்லை :

எனக்காக பயப்படவில்லை :

Image Courtesy

பல நாட்கள் கழித்து கஸ்டமர் ஒருவர் அழைத்ததாக இங்கிருந்து மூன்று பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களில் மீனலும் ஒருவர். ஓரே வண்டியில் சென்றாள் வழியில் மாட்டிக் கொள்வோம் என்று சொல்லி இரண்டு வண்டிகள் மாற்றி அழைத்துச் செல்லப்பட்டார்கள். வண்டி மாற்றும் கண நேர சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடமிருந்து தப்பித்தால் மீனல் .

இரண்டு நாட்களுக்குப் பின் வீடு வந்து சேர்ந்தாள். பெற்றோரால் நம்பவே முடியவில்லை. அடுத்த நாளே அந்த உறவுக்கார பெண்ணும் இன்னும் சில ஆண்களும் வீட்டிற்கு வந்து மீனலை தங்களிடம் அனுப்புமாறு கேட்டார்கள்.

வாழ்க்கை :

வாழ்க்கை :

Image Courtesy

அவள் அங்கே திருடிக் கொண்டு வந்து விட்டாள் என்று ஊர் முழுக்க கதை கட்டினார்கள். போலீசில் புகார் அளிப்போம், உங்கள் இருவரையும் கொன்று விடுவோம். மீனலின் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவோம் என்று என்னென்னவோ சொல்லி மிரட்டினார்கள்.

ஊர்க்காரர்களும் மீனலை பழித்துப் பேச ஆரம்பித்தார்கள்.மிரட்டலுக்கு பயந்து நானே கொண்டு வந்து விடுகிறேன் என்று ஒப்புக் கொண்டார் தந்தை

இங்கிருந்து சென்று விடலாம் :

இங்கிருந்து சென்று விடலாம் :

Image Courtesy

அன்றைய இரவு மூவரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார்கள். உடனடியாக இங்கிருந்து செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். இரவோடு இரவாக குடும்பம் ஊரை விட்டு வெளியேறுகிறது.

பக்கத்து ஊருக்குச் சென்று பிழைப்பு நடத்த ஆயுத்தமானாலும் எப்போது எந்த ரூபத்தில் ஆபத்து வரும் என்று தெரியாது ஒவ்வொரு நாளும் பயத்துடனே நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life women
English summary

Story About a women who rescued from trafficking

Story About a women who rescued from trafficking
Story first published: Thursday, May 31, 2018, 12:54 [IST]
Desktop Bottom Promotion