நடிகைகள் முதல் ஏர் ஹோஸ்டஸ் வரை... ஹை-கிளாஸ் விபச்சாரம் நடத்தி வந்த கீதா # Her Story

By Staff
Subscribe to Boldsky

கீதா அரோரா என்கிற சோனு பஞ்சாபன்... காலேஜ் படிச்ச பொண்ணு. ஏறத்தாழ பத்து வருஷத்துக்கும் மேல வட இந்திய விபச்சார தொழில்ல மாஸ்டர் மைண்ட். மும்பை, ராஜஸ்தான், டெல்லி, கொல்கட்டான்னு பல ஊர்களுக்கு ஸ்கூல், காலேஜ் படிக்கிற பொண்ணுங்க, ஏர் ஹோஸ்டஸ், டிவி சீரியல் ஹீரோயின்ஸ்ன்னு பலர தன்னோட வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வியாபாரம் பண்ணிட்டு வந்திருக்கா.

ஒரு தவறான காதல், பியூட்டி பார்லர்ல வேலை பார்த்துட்டு வந்த பொண்ணு... விஜய் சிங்கிற ஒரு கேங்ஸ்டர் கூட கிடைச்ச நெருங்கிய தொடர்புனால... பியூட்டி பார்லர்ல இருந்து விபச்சார தொழில்ல இறங்குனா கீதா. ஆரம்பத்துல இவ பெயரு கீதா அரோரா தான். பின்ன, தன்னோட பல காதலர்கள்ல ஒருத்தனான ஹேமந்த் சோனுவ ரொம்ப புடிச்சு போக... சோனு பஞ்சாபன்னு பெயர மாத்திக்கிட்டா.

பெரும்பாலும் விபச்சார தொழில்னாலே ஆண்களோட கட்டாயம், வற்புறுத்தல்.. கடத்தல், கொடுமைன்னு கேள்விப்பட்ட நமக்கு... கீதா அரோராவோட கதை கொஞ்சம் விசித்திரமா தான் இருக்கும். முப்பதுகளின் ஆரம்பத்துல இருக்க கீதா ஏறத்தாழ 10 வருஷத்துக்கும் மேல இந்த தொழில்ல ஈடுபட்டு வந்திருக்கா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரளமான இங்கிலீஷ்!

சரளமான இங்கிலீஷ்!

கீதா காலேஜ் வர படிச்ச பொண்ணு. சரளமான்னு சொல்றத காட்டிலும்.. ஒருத்தர கவர்ந்து ஈர்க்குற அளவுக்கு நல்லாவே கீதாவுக்கு இங்கிலீஷ் பேச தெரியும். இது கீதாவோட பெரிய அட்வான்டேஜ்.

இதுப்போக இந்தி, ஹரியான்வி (ஹரியான மொழி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பேசப்பட்டு வரும் மொழி) மொழிகளும் நல்ல சரளமா, கவர்ச்சியா பேச தெரியும் கீதாவுக்கு. இதனாலேயே தனக்கான வாடிக்கையாளர்கள ரொம்ப ஈஸியா ஈர்த்து வந்தா கீதா என்கிற சோனு பஞ்சாபன்.

கெட்ட பொண்ணு சார்!

கெட்ட பொண்ணு சார்!

பியூட்டி பார்லர்ல வேலை பண்ணிட்டு வந்த கீதாவுக்கு விஜய் சிங்ன்னு சொல்லப்படுற ஒரு கேங்ஸ்டர் கூட தொடர்பு உண்டாச்சு. இதுல முக்கியமா நாம கவனிக்க வேண்டியது என்னன்னா... கீதாவ காதலிச்ச, கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒருத்தர் கூட உயிரோட இல்ல.

கீதா முதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்ட விஜய் சிங் 2003ம் வருஷம் உ.பி யின் கர்ஹ் முக்தேஷ்வர்'ங்கிற டவுன் பகுதியில போலீஸ் காரங்களால சுட்டுக் கொலை செய்யப்பட்டான். அப்பறம் கீதா தீபக்ன்னு ஒருத்தன காதலிச்சு வந்தா... அவனையும் அசாம்ல போலீஸ் சுட்டுக் கொன்னுடிச்சு.

அதுக்கு அப்பறமா தான் கீதா ஹேமந்த் சோனுங்கிற தீபக்கோட சகோதரான காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டா. தீபக் இறந்த பிறகு தான் இவங்க ரெண்டு பெரும் காதலிக்க ஆரம்பிச்சாங்க.

ஹேமந்த் சோனு!

ஹேமந்த் சோனு!

தன்னோட வாழ்க்கையில கீதா மிக முக்கியமான நபரா கருதினது ஹேமந்த் சோனுவதான். அதனால தான் அவன் இறந்த பிறகு அவனோட பெயரையே தன்னோட பெயரா மாத்திக்கிட்டா கீதா அரோரா.

ஹேமந்த் சோனுவ 2006ம் வருஷம் டெல்லி - கூர்கான் எல்லை பகுதியில அவனோட இரண்டு கூட்டாளிகளோட சேர்த்து போலீஸ் சுட்டு கொலை பண்ணாங்க. ஹேமந்த் சோனுவோட மரணத்துக்கு பிறகு, கீதா தன்னோட கும்பல்ல இருந்த அசோக் பண்டிங்கிற நபர் கூட நெருக்கமா இருந்ததா தெரிய வந்துச்சு.

2009!

2009!

இச்சாதாரி பாபா, நக்மா போன்றவர்கள போலீஸ் கைது செய்ய முக்கிய காரணமா இருந்தது கீதா என்கிற சோனு பஞ்சாபன் தான். ஏறத்தாழ டஜன் கணக்குல தனக்கு கீழ மாமா வேலை பார்க்குற ஆட்கள வெச்சுக்கிட்டு மும்பை, ராஜஸ்தான், கொல்கட்டா, பஞ்சாப்ன்னு பல ஊர்ல தொழில் பண்ணிட்டு வந்தா கீதா.

இதன் மூலமா மட்டும் நூறு கோடி வரைக்கும் சொத்து சேர்த்திருக்கா கீதா. சுமாரா கீதா அனுப்புற ஒரு பொண்ணோட விலை 5000 ரூபாயில இருந்து 20000 ரூபாய் வரைக்கும் இருக்கும்ன்னு சொல்லப்படுது. இதுல, ஸ்கூல், காலேஜ் படிக்கிற பொண்ணுகள்ல இருந்து, டிவி சீரியல் நடிகைகள், ஏர் ஹோஸ்டஸ் வரைக்கும் இருந்திருக்காங்கன்னு போலீஸ் கொடுத்த தகவல் மூலம் அறியப்படுத்து.

2011 உலக கோப்பை போட்டிக்கு சரியா ஒரு நாளுக்கு முன்ன கீதாவோட நெட்வர்க போலீஸ் முடக்குச்சு. அதுக்கு அப்பறம் ஆறு வருஷத்துக்கு பிறகு... கீதாவ கடந்த டிசம்பர் 2017ல போலீஸ் கையும், களவும பிடிச்சது. இதுக்கு முக்கிய காரணமா இருந்தது ஒரு பொண்ணு தான்.

கடத்தல்!

கடத்தல்!

அதாவது 2009ம் வருஷம் கீதா கடத்தி வெச்சிருந்த 12 வயசு பொண்ணு தான்... அவங்க கும்பல் கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்த இவங்கள பத்தி துப்புக் கொடுத்து கீதாவ கைது செய்ய முக்கிய காரணமா இருந்தாங்க. சோனு பஞ்சாபன் அந்த பொண்ணுக்கு போதை பழக்கம் ஏற்படுத்தி அடிமை செஞ்சு வெச்சிருந்ததாக தகவல்கள் போலீசாரிடம் இருந்து கிடைச்சது.

தன்னோட மொத்த கும்பல் மற்றும் தொழில, தான் வாசிச்சு வந்த சவுத் டெல்லி அப்பார்ட்மெண்ட் இருந்து இயக்கி வந்திருக்கா கீதா என்கிற சோனு பஞ்சாபன். வாட்ஸ்-அப் மூலமா டீலிங் முடிச்சு, மொபைல் ஏப்ஸ் மூலமா பேமெண்ட் வாங்கிட்டு இருந்திருக்கா கீதா.

கடைசியா தன் கூட தங்கி இருந்த காதலன் குறித்து எந்த தகவலும் போலீஸ் காரங்ககிட்ட வாயே திறக்கல கீதா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Sonu Punjabhan, Who is a Mastermind Behind North India Prostitution!

    Her real name is Geeta Arora and she used to work in a beauty parlour before she tried her hand at prostitution with the contacts she made through her then-boyfriend, Vijay Singh.
    Story first published: Tuesday, May 29, 2018, 11:50 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more