ஹனுமன் ஏன் குரங்கு வடிவத்தில் பிறந்தார் என்ற காரணம் தெரியுமா?

Posted By: Ssaravanan Kirubananthan
Subscribe to Boldsky

இராமாயண இதிகாசத்தில், ஹனுமானின் கதாபாத்திரம் மிக முக்கியமானது. சக்தியின் சின்னமாக இருப்பவர் ஹனுமான். ஹனுமான் என்ற நாமத்திற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.

வாயுவின் மகனான இவருக்கு "பவன்புத்ரா" என்ற பெயரும் உண்டு. அவருடைய சீடர்கள்,அவரை "பிரமச்சாரி" என்று அழைகின்றனர். ஹனுமான் குரங்குகளின் கடுவுளாக வணங்கப்படுகிறார்.

ஹனுமான் குரங்கு வடிவில் பிறந்ததற்கு பலவித கதைகள் கூறப்படுகின்றன. இந்து கடவுள்களில் மிகவும் வலிமையானவராக போற்றப்படுபவர் ஹனுமான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவன் மற்றும் பார்வதி

சிவன் மற்றும் பார்வதி

இந்துகளின் புராணங்களில் சொல்லப்படுவது யாதெனில், சிவனும் பார்வதியும் குரங்காக மாறி, வனங்களில் மகிழ்ச்சியாக இருந்தனர். இதனால் பார்வதி தேவி கர்ப்பமானார். மாறுவேடத்தில் இருக்கும் சிவ பெருமான் தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து, வாயு தேவனிடம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை எடுத்துக் கொள்ள கூறினார்.

பார்வதி தேவியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை வாயு தேவன் எடுத்து, ஆண் குழந்தை வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த அஞ்சனையின் கர்ப்பத்தில் வைத்தார் . இந்து புராணத்தில் மற்றொருபுறம் ஹனுமானின் பிறப்பை பற்றி கூறப்படுவதை இப்போது காண்போம்.

தவம் :

தவம் :

ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பத்தில், அஞ்சனை இறைவன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கம், ராமபிரானின் தந்தையான தசரத மகாராஜா குழந்தை இல்லாத காரணத்தால், , குழந்தை வேண்டி சில பூஜையும் யாகமும் செய்து கொண்டிருக்கிறார். பூஜையின் பலனாக அவருக்கு ஒரு புனித பிரசாதம் கிடைக்கிறது. அந்த பிரசாதத்தில் ஒரு சிறு பகுதியை, வாயு தேவன் அஞ்சனைக்கு கொடுத்ததால் , ஹனுமான் பிறந்ததாக கூறப்படுகிறது.

ஆஞ்சநேயா - அஞ்சனையின் மகன்

ஆஞ்சநேயா - அஞ்சனையின் மகன்

அஞ்சனை என்ற அப்சரஸ் குரங்கின் வடிவத்தை கொண்டவள். ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பத்தில் அவள் சிவபெருமானை நோக்கி தவமிருந்ததால். தவத்தின் பலனாக பார்வதி தேவியின் வயிற்றில் உருவான கருவை பெற்றாள் . இதன் காரணமாக பிறந்தவர் தான் ஹனுமான். அஞ்சனையின் மகனாக பிறந்ததால் இவர் "ஆஞ்சநேயர்" என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மலோகத்தில் அஹகிய அப்சரசாக இருந்தவர் அஞ்சனை. அஞ்சனைக்கு ஒரு முனிவர் சாபம் கொடுத்தார். அதாவது, அவள் காதலில் விழும் தருணம், அவளுடைய முகம் ஒரு குரங்காக மாறும் என்பது அவளுக்கிருந்த சாபமாகும். இந்த சாபத்தில் இருந்து விமோசனம் தரும் பொருட்டு பிரம்மர் அவளை பூலோகத்தில் பிறக்க வைத்தார். பின்னாளில், அஞ்சனை, கேசரி என்ற குரங்கு மன்னனினிடம் காதல் வசப்பட்டாள் .

இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சிவ பெருமானின் பக்தையான அஞ்சனை , தவத்தில் ஈடுபட்டு, இறைவனை வழிபட்டு வந்தால். இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான், தானே அவைக்கு மகனாக பிறந்து அவளுக்கு சாப விமோசனம் தர வேண்டும் என்று நினைத்தார்.

இந்த நேரத்தில், தசரத மகாராஜர், குழந்தை வேண்டி யாகம் புரிகையில் தவத்தில் பலனாக அவருடைய மனைவிகளுக்கு கிடைத்த பிரசாதத்தில் ஒரு பகுதியை, பரந்து வந்த ஒரு பருந்து பிடுங்கி சென்று அஞ்சனையின் கையில் போட்டது. இறைவன் கொடுத்த பிரசாதம் என்று கருதி, , அஞ்சனையும் அந்த பிரசாதத்தை உண்ணத் தொடங்கினாள் . இதானல் அவள் கர்ப்பமானாள். இவளுக்கு பிறந்த குழந்தை தான் ஹனுமான்.

 வலிமை மற்றும் தைரியத்தின் அடையாளம்:

வலிமை மற்றும் தைரியத்தின் அடையாளம்:

ஹனுமான், அவரின் தைரியம் மற்றும் வலிமைக்காக போற்றப்படுபவர். அர்பணிப்பு, தியாகம், சேவை போன்றவை இவரின் முக்கிய குணநலன்கள் ஆகும் . ஹனுமான் தன், பக்தர்களை தீவினையில் இருந்து காத்து அருள் பாலிப்பவர் .

 ராமாயணத்தில் இவர் பங்கு:

ராமாயணத்தில் இவர் பங்கு:

ராமாயணத்தில் ஹனுமான் முக்கிய கதாபாத்திரத்தில் இருக்கிறார். சீதை இலங்கையில் இருக்கும்போது, ராமனின் செய்தியை சீதாவிடம் கொண்டு செல்லும் பணியை ஹனுமான் மேற்கொள்கிறார். மேலும் இலங்கையுடன் நடந்த போரின்போது, குரங்கு படை தலைவனாக ஹனுமான் செயல்பட்டார்.

குரங்கின் சக்தி:

குரங்கின் சக்தி:

ஹனுமான் குரங்கு வடிவத்தில் இருப்பதால், தொலை தூரத்தை எளிதாக கடக்கும் சக்தி ஹனுமனுக்கு உண்டு. இலங்கை போரின்போது, ஹனுமான் அவருடைய வாலால் இலங்கை மாநகரை எரித்தார். குழந்தை பருவத்தில் மிகவும் குறும்புத்தனம் மிக்கவராக ஹனுமான் இருந்தார். பால்யபருவதில் சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் இருந்தார். இளம் வயதில் அர்பணிப்பு மற்றும் சேவையின் உதாரணமாக திகழ்ந்தார். அவருடைய வாழ்நாளை, ராமபிரானின் சேவைக்காகவே அர்பணித்தார்

 குரங்குகளின் தலைவன்:

குரங்குகளின் தலைவன்:

இந்து புராணத்தின் படி, குரங்குகளின் ராணியின் மகனாக இருந்தவர் ஹனுமான். ராமன் மற்றும் ராவணனுக்கு இடையில் நடந்த இலங்கை போரில், ஹனுமான் குரங்கு படை தலைவனாக செயல்பட்டார்.

 ஹனுமான் கதைகள்:

ஹனுமான் கதைகள்:

ஹனுமான் கதைகள் பொதுவாக குழந்தைகளுக்கு தைரியத்தை கொடுத்து, தீவினைகளை எதிர்த்து போராடும் குணத்தை தருகிறது. வாழ்க்கையின் தடைகளை எதிர்த்து போராடும் வழியை ஹனுமான் வழிபாடு அனைவருக்கும் தருகிறது.

அவதாரம் :

அவதாரம் :

பிரம்மர், ஸ்ரீ ராமருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், குரங்காக மாறி உருவெடுத்தார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன. சிவ பெருமான் ஹனுமனாக உருவெடுத்து ஸ்ரீ ராமராக அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கு உதவினார் என்றும் சில வரலாறுகள் கூறுகின்றன.

மதத்திலும் ஜெயின் மதத்திலும் ஹனுமன் வழிபாட்டு கடவுளாக இருக்கிறார். மியன்மார் , பாலி, மலேஷியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் ஹனுமன் பக்தர்கள் அதிகமானோர் உள்ளனர்.ராமாயணத்தில் ஒரு கதாநாயகனைப்போல் சித்தரிக்கப்பட்ட ஹனுமனை வழிபடுவதால், வாழ்க்கை சரியான பாதையில் முன்னேற்றமடைகிறது, மேலும் தீய சக்திகள் அவரை வழிபடுவோரை அண்ட விடாமல், ஹனுமான் பாதுகாப்பதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Hanuman Was Born In The Form Of A Monkey

Reasons Why Hanuman Was Born In The Form Of A Monkey
Story first published: Wednesday, January 3, 2018, 8:00 [IST]