TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
புயல், வெள்ளத்த கண்டுபிடிக்க ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்ட கல் மண்டபங்கள்... எப்படி கண்டுபிடிக்கிறது?
ஆற்றுக்கு நடுவே ஏன் இந்த மண்டபம் கட்டுகிறார்கள் தெரியுமா? அறிவியல் காரணம் தெரிஞ்சா அப்படியே ஆடிப்போய்டுவீங்க... நம்முடைய ஊர்களில் ஓடுகின்ற எல்லா ஆறுகளுக்கு நடுவிலும் குளங்களுக்கு இடையிலும் இப்படியொரு மண்டபம் இருப்பதைப் பார்த்திருப்போம்.
நம்முடைய இன்றைய தலைமுறையினருக்கு இதனுடைய அருமை என்னவென்றே தெரியாது. ஏதோ நிழலுக்காகவும் அழகுக்காகவும் கட்டப்பட்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான காரணம் அழகுக்காக அல்ல. இதன் பின்னால் பெரிய அறிவியல் காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.
வெள்ள அபாயம்
நவீன காலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கைக்கான உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால் நம்முடைய முன்னோர்கள் காலத்தில் தாமிரபரணியில் தான் முதலில் இந்த அறிவியல் காரணத்தை உணர்ந்து பயனடையத் தொடங்கினார்கள். வெள்ள அபாயங்களை இந்த மண்டபங்களின் மூலம் நம்முடைய முன்னோர்கள் அறிந்து கொண்டனர். இவ்வளவு அறிவியல் வசதிகள் இருந்து நம்மால் சரியாக கணிக்க முடியாமல் பேரிழப்புகளைச் சந்திக்கிறோம். அவர்களால் எப்படி முடிந்தது என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்.
MOST READ: இந்த மந்திரத்தோட பவர் தெரியுமா உங்களுக்கு? இப்பவாச்சும் தெரிஞ்சு நடந்துக்கோங்க...
சங்கு கல் மண்டபம்
அந்த வெள்ள அபாய எச்சரிக்கைகளை அறிவிப்பதற்காகக் கட்டப்பட்டது தான் இந்த சங்கு கல் மண்டபம். குறிப்பாக தாமிரபரணி ஆற்றுக்கு நடுவே உள்ள மண்டபத்துக்கு தனி சிறப்பு உண்டு. அதை சங்கு கல் மண்டபம் என்று அழைப்பார்கள். அந்த மண்டபத்தினுடைய உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பின் மீது, சங்கு போன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வருகின்ற பொழுது, அந்த மண்டபத்துக்குள் நீர் செல்லும்படியான அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சங்கு சத்தம்
வெள்ளம் வருகின்ற பொழுது, குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டும் உயர்ந்தால், வெள்ளத்தினுடைய சத்தத்தினால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களைச் சென்றடையும்.
இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து கொண்டு, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள்.
வெள்ளம் அதிகமாக அதிகமாக மண்டபத்தின் அமைப்பில் உள்ள சங்கு அமைப்பு மூழ்க ஆரம்பிக்கும். பிறகு வெள்ளம் வடிய ஆரம்பித்ததும் சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.
MOST READ: திருவண்ணாமலை தீபம் ஏற்றியாச்சு... எந்தெந்த ராசிக்கு என்னென் நடக்கப் போகுது?
எப்படி கண்டுபிடிக்கிறது?
இதுபோன்ற பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல் மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. இதனுடைய அருமை தெரியாமல் நாமும் கவனிக்கமால் விட்டுவிட்டோம். நம்முடைய முன்னோர்களின் அறிவியல் அறிவை எண்ணி வியந்து அதை பின்பற்றத் தொடங்குவது தற்போதைய காலகட்டத்தில் மிக அவசியமாக இருக்கிறது.