For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஏழை பெண்ணுக்கு நேர்ந்த அவலம், கற்பழித்தவன் கையிலேயே ஒப்படைத்த பெற்றோர் - My Story #254

  By Staff
  |

  அது என் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு. ஒரு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்து வந்த காலம். நீண்ட நாட்களாக என் மனதினுள் நான் புதைத்து வைத்திருந்த மர்மம் இது. இன்று நம் நாட்டில் நடந்து வரும் பல கற்பழிப்பு குற்றங்களை காணும் போது இனிமேலும் இதை மறைக்க கூடாது என்று தோன்றுகிறது.

  இந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப்படுவது என்பது அன்றாட வேலைகளில் ஒன்றாக மாறிவிட்டது. கற்பழிப்பு வேதனை எனில், அதை கோர்ட்டுக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுவது எல்லாம் அதைவிட கொடுமை. இத்தனை கொடுமைகளை அந்த பெண் தாண்டி வருவதன் காரணம், தன்னை, தன் வாழ்க்கையை சீரழித்த அந்த கயவனுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பது தான்.

  Real Life Story: My Cook Was Raped and Forced To Marry The Rapist!

  ஆனால், நம் நாட்டில் இன்னும் பல கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் கற்பழிப்பை சிலர் கல்யாணத்திற்கான லைசன்சாக பயன்படுத்தி வரும் அவலம் அரங்கேறி தான் வருகிறது. இதெல்லாம் 90களில் நாம் படங்களில் கண்ட காட்சி தானே, இன்றுமா இப்படியான நிகழ்வு நடக்கிறது என்று நீங்கள் வினவினால்... ஆம்! என்பதே உண்மை!

  நம் நாட்டில் கௌரவம், பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகும் என்ற அச்சத்தின் காரணத்தால் கற்பழித்தவனுக்கே திருமணம் செய்து வைப்பது ஒரு எளிய தீர்வாக காண்கிறார்கள். என் வீட்டில் சமையல் வேலை செய்து வந்த தேவி எனும் பெண் கடந்து வந்த பாதை தான் இந்த கதை...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தேவதை!

  தேவதை!

  அப்போது எனக்கு 19 வயதிருக்கும். தேவிக்கும் அதே வயது தான் இருக்கும். அவள் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. எங்கள் ஊரிலேயே சில வீடுகளில் சமையல் வேலை செய்து வருகிறாள்.

  ஏழை குடும்பத்தில் பிறந்த தேவதை தேவி. லட்சணமான பெண். எப்போதுமே தன் முகத்தில் புன்னகையை சூடிக் கொண்டே திரிவாள். அதனால் தானோ என்னோ, கயவன் அந்த புன்"நகையை" திருடிவிட்டான்.

  ஒரு நாள்...

  ஒரு நாள்...

  நான் அப்போது இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவு கல்லூரி விடுமுறையில் இருந்தேன். எங்கள் கல்லூரியில் இருபது நாட்கள் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால். நகர் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய நிறுவனத்தில் இன்டர்னாக சென்று வந்துக் கொண்டிருந்தேன்.

  தினமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் காலை வேகமாக கிளம்ப வேண்டும். அன்று தேவி காலை சரியான நேரத்திற்கு வரவில்லை. ஆகையால் வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு விட்டு அவசர, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தேன்.

  திடீரென வீட்டின் கீழ் பகுதியில் யாரோ பலமாக கதவினை தட்டும் சப்தம்.

  அழுகை!

  அழுகை!

  நான் எனது கைப்பையை எடுத்துக் கொண்டு படியில் இறங்கி வர, வர அந்த சப்தம் பலமானது. உடன் ஒரு பெண் அழும் சப்தமும் கேட்டது. என்னுள் அச்சம் தொற்றிக் கொண்டது. அந்த குரல் எனக்கு பரிச்சயம் ஆன குரலாகவே இருந்த போதிலும், கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தேன் நான்.

  கதவை திறக்கும் முன் துவாரத்தின் வழியாக கண்ட போதுதான் வெளியே நின்றுக் கொண்டிருப்பது தேவி என்பதை அறிந்தேன். இவள் ஏன் இப்படி அழுகிறாள் என எண்ணியவாறு கதவை திறந்து உள்ளே அழைத்தேன்.

  தண்ணீர்!

  தண்ணீர்!

  அவளை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து. அமைதியாக இரு. லேட்டாக வந்ததற்கு எல்லாமா அழுவது. எனக்கு இன்று எதுவும் சமைக்க வேண்டாம். நேற்று இரவு சமைத்த பாத்திரங்களை மட்டும் கழுவு சுத்தம் செய்து வைத்துவிட்டு சென்றால் போதும் என்று கூறிவிட்டு, மீண்டும் என்பது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்ப ஆயத்தமானேன். தேவி பலமாக விம்மி, விம்மி அழுதாள்.

  இல்லை, நான் இன்று வெளியே போகாதே, அவளுடன் உட்கார்ந்து பேசு என்று என்னுடைய ஆழ்மனம் கூறியது. தேவியின் அழுகையில் அச்சம் இருந்தது. ஆனால், அது லேட்டாக வந்ததற்கான அச்சம் இல்லை என்பதை இப்போது புரிந்துக் கொண்டேன்.

  கற்பழிப்பு!

  கற்பழிப்பு!

  ஏன், என்ன ஆச்சு தேவி... ஏன் அழுகுற.. வீட்டுல ஏதாவது பிரச்சனையா... பணம் ஏதாவது வேணுமா.... நான் வரிசையாக கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே... என்ன ஒருத்தன் கற்பழுசுட்டான் அக்கா என்று கதறி அழுதாள் தேவி. ஒருசில நொடிகள் என் உலகம் நின்று போனது போல ஆனேன். என்னடி சொல்ற... எப்போ என்ன ஆச்சு... என்று தேவியை வினவினேன்.

  இப்ப இல்ல கொஞ்ச நாளுக்கு முன்னாடி... இத வீட்டுல சொல்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல. யார் கிட்டயும் சொல்லாம மறச்சுட்டேன். ஆனால், இன்னிக்கி காலையில அவன் எங்க வீட்டுக்கு வந்துட்டான் என்று தேம்பி, தேம்பி அழுதாள்...

  கௌரவம்!

  கௌரவம்!

  எதாச்சும் மிரட்டுறானா? வீட்டுல அப்பா, அம்மா கிட்ட சொல்லிடு.. போலீஸ்ல கேஸ் கொடுத்திடலாம் என்று கூறினேன்.

  இல்ல அக்கா... அவனே எங்க வீட்டுல சொல்லிட்டான். இப்போ வீட்டுல இருக்கவங்க அவனுக்கே என்ன கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்றாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. ரொம்ப பயமா இருக்கு. அவன பார்த்தாலே உடம்பு எல்லாம் கூசுது. அவன எப்படி அக்கா கல்யாணம் பண்ணிக்க முடியும் என்று பதற்றத்துடன் கூறினாள் தேவி.

  அம்மா, அப்பா!

  அம்மா, அப்பா!

  அன்று காலையில் வெளியே சென்று தேவி வீடு திரும்பிய போது அவளை கற்பழித்தவன் வீட்டில் காபி குடித்துக் கொண்டிருந்தானாம். தேவியின் அப்பா, அம்மா, சகோதரன் உட்பட அனைவரும் தேவிக்கு அவனையே திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று பேசி கொண்டிருக்க. அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் அங்கிருந்த பயந்து ஓடி வந்திருக்கிறாள் தேவி. முதலில் தோழிகளின் வீடுகளுக்கு ஓடி மறைந்துக் கொள்ள முயற்சித்த தேவி. வீட்டினர் அந்த இடத்திற்கு எல்லாம் வந்துவிட... கடைசியாக என் வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

  போலீஸ்!

  போலீஸ்!

  தேவியை அமைதிப்படுத்தி... என் கைப்பை, மொபைலை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு செல்லலாம் என்று தேவியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். வீட்டு வாசலில் போலீஸ் மற்றும் தேவியின் பெற்றோர் நின்றுக் கொண்டிருந்தனர்.

  நான் காவலரிடம் பேச முற்படும் முன்னரே தேவியின் அப்பா.. இது உனக்கு தேவையில்லாத வேலை. அவள விட்டுட்டு. அவளுக்கு என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும் என்று கூறி... என்னை பின்னோக்கி நகர விரல் மூலம் செய்கை செய்தார்.

  வீண் வேலை...

  வீண் வேலை...

  இது உங்களுக்கு வீண் வேலை... நீங்க ஒதுங்கி போனா... தேவியை மட்டும் அழைச்சுட்டு போவோம். இல்லன்னா உங்களையும் சேர்த்து அழைச்சுட்டு போறது தவிர எங்களுக்கு வேற வழி இல்ல.. என்று காவலர் ஒருவர் மிரட்டும் தொனியில் பேசினார்.

  அன்று நான் வீட்டில் தனியாக இருந்த காரணத்தாலும், அந்த 19 வயதில் என்னால் ஒரு அளவுக்கு மேல் தைரியத்தை வெளி கொண்டு வர முடியாத காரணத்தாலும்... அங்கேயே நின்று விட்டேன்.

  வலி!

  வலி!

  அதன் பிறகு தேவி எங்கே போனாள்... அவள் வாழ்க்கை என்ன ஆனது என்று எனக்கு எதுவும் தெரியாது. என் கல்லூரி முடிந்த பிறகு, சென்னைக்கு ஷிப்ட் ஆனேன். என் வாழ்க்கை, வேலை, அடுத்த கட்ட நகர்வு என இடையே எத்தனை மாற்றங்கள் வந்தாலும் என்னால் தேவியை மறக்க முடியவில்லை. அதிலும், ஒவ்வொரு முறை செய்தியில் கற்பழிப்பு வழக்கள் பற்றி காணும் போதெல்லாம் தேவியின் நினைவுகள் என்னுள் ஒருவித வலியை ஏற்படுத்தி செல்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Life Story: My Cook Was Raped and Forced To Marry The Rapist!

  Real Life Story: My Cook Was Raped and Forced To Marry The Rapist!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more