For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

6 மாத குழந்தை புற்றுநோயால் இறந்ததால் தற்கொலை செய்து கொண்ட தந்தை - நடுரோட்டில் தாய்

இது ஒரு உண்மை சம்பவம். நம் கண்முன்னே வறுமையும் நோயும் ஒரு அன்பான குடும்பத்தை எப்படி சிதைத்தது என்பது பற்றிய கதை.

|

சைமா மற்றும் ஜாஹீர் என்னும் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை இருந்தது. குழந்தை பிறந்து ஆறு மாதத்தில் அதற்கு உடல்நிவை சரியில்லாமல் போகவே, புற்றுநோய் இருந்த உண்மை தெரிய வந்தது. சில நாட்களில் குழந்தை இறந்தும்போனது.

Real Life Stories

இதை தாங்கிக் கொள்ளவே முடியாத ஜாஹீர் தன்னுடைய மனைவியை பற்றி யோசிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி தனியே சென்று ஒரு அறை எடுத்து தங்கிவிட்டார். ஒருநாள் மன அழுத்தத்துக்குப் போடப்படும் மாத்திரையை சாப்பிட்டு இறந்துவிட்டார். இப்போது நிர்கதியாக சைமா தெருவில் ஆதரவின்றி நிற்கிறார். அவரே இதுபற்றி சொல்கிறார் கேளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல்

காதல்

என் கண்களில் கண்ணீர் ஆறாக புரண்டு ஓடியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. நான் காதலில் விழுந்திருக்கவே கூடாது. ஒரு கேள்வி இரவும் பகலும் என் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் என்னை விட்டு சென்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு அவர் மீது எனக்கு இருந்த காதல் என் கண்களை மறைத்ததா? அவர் என்னை விட்டு பிரிந்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எங்கள் அருமை குழந்தை ஒவைசின் இறப்பிற்கு பிறகு நாங்கள் இருவருமே தொலைந்து விட்டோம்.

நிர்கதி

நிர்கதி

நாங்கள் இருவரும் பேசிக் கொள்ள வார்த்தைகளே இல்லை. உற்ற சமயத்தில் அவர் எங்களுடன் இல்லை என்பதை நினைத்து அவர் வருந்தியதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவருக்கு அதனை புரிய வைக்க என்னால் முடியவில்லை. அவர் எங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே செய்திருக்கிறார் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல விரும்பினேன். என்னை பாதி வழியில் விட்டு செல்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தனிமை

தனிமை

நான் எல்லாவற்றையும் சரி செய்து மறுபடி, வாழ்க்கையின் அந்த இன்பமான நாட்களுக்கு அவரையும் என் குடும்பத்தையும் கூட்டிச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஒன்றாக அமர்ந்து, ஒன்றாக பேசி, சிரித்து மகிழ்ந்த அந்த நாட்கள் இப்போது வெறும் நிழற் படமாக எனக்குள் முடங்கிக் கிடக்கிறது. இப்போது என் வலியைப் புரிந்து கொள்ள யாருமே இல்லாமல் தனியாக இருக்கிறேன். என் குழந்தையை என்னிடம் இருந்து பிரித்தது புற்றுநோய். ஆனால் என் கணவரை பிரித்தது என்ன என்பது தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன்.

அழகான குடும்பம்

அழகான குடும்பம்

அவர் என்னை விட்டு விட்டு செல்வார் என்பதை நான் முன்கூட்டியே உணர்ந்திருக்க வேண்டும். அது மட்டும் எனக்கு தெரிந்திருந்தால் அவரின் மனதை எப்படியாவது நான் மாற்றியிருப்பேன். எங்கள் திருமணத்திற்கு பிறகு, என் உலகம் முழுவதும் அவர் மட்டும் தான் இருந்தார். எங்களுக்கு திருமணமான புதிதில் நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஒரு அன்பான அப்பா மற்றும் அரவணைக்கும் தாயாக நாங்கள் மாறி எங்கள் மகனை இந்த உலகிற்கு வரவழைத்தோம். எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமல் இருந்தது.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

ஒவைசிற்கு ஆறு மாதங்கள் ஆகும்போது அவனுக்கு உடல் நிலை பாதித்தது. அதன் பிறகு அடிக்கடி உடல்நிலை பாதித்ததால், மருத்துவமனை சென்று அவனை பரிசோதித்தோம். அவனுக்கு போன் மறோ (Bone marrow) புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்களை மீறி அனைத்தும் நிகழ்ந்தது. அவனை உயிர் பிழைக்க வைக்க எல்லா சிகிச்சைகளும் மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்தோம். ஆனால் எங்களால் எங்கள் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

குழந்தை இறப்பு

குழந்தை இறப்பு

என் குழந்தையின் இறப்பிற்கு பிறகு, என் கணவர் ஜாஹிர் மட்டுமே என் ஆதரவு. ஆனால் இன்று அவரும் இல்லை. இன்று நான் கண் இழந்த குருடாய் என் வாழ்க்கையில் பல ஆயிரம் கேள்விகளுடன் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழக்கையில் ஒளியூட்டி என் கேள்விக்கு பதில் தர யாருமே இல்லை.

எங்கள் குழந்தையின் மரணத்தால் நாங்க இருவருமே சுக்கு நூறாக உடைந்து போனோம். எங்கள் இருவரின் இழப்பை புரிந்து கொள்ளக் கூடிய ஒரே நபர் என் கணவர் என்பதால் நான் அவரை விட்டு விலகவே இல்லை. ஆனால், அவர் மட்டும் எப்படி சுயநலமாக சிந்தித்து என்னை விட்டு சென்றார் என்பது எனக்கு புரியவில்லை. இதில் என் தவறு என்ன? நாங்கள் ஏன் பிரிந்தோம்? எங்கள் இருவரின் அன்பிற்கு குழந்தை மட்டும் தான் காரணமா? குழந்தையைத் தாண்டி எங்கள் இருவருக்கும் அன்பு இல்லையா?

மன அழுத்தம்

மன அழுத்தம்

இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் அவர் என்னுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னை துயரக் கடலில் தனியாக விட்டுவிட்டு அவர் சென்று விட்டார். குழந்தையின் இறப்பால் ஏற்பட்ட பாதிப்பால், ஜாஹிர் தனியாக இருக்கத் தொடங்கினார். என்னுடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்தி விட்டார். ஒவைசின் இறப்பிற்கு பிறகு எந்த ஒரு உணர்வையும் அவர் என்னிடம் வெளிக்காட்டவில்லை. அவர் என்னை ஏறெடுத்து பார்க்கக் கூட இல்லை. ஒவைஸ் பற்றிய நினைவு மட்டுமே அவரிடம் இருந்தது. அவருக்கு மட்டுமே இழப்பு என்ற விதத்தில் அவர் நடந்து கொண்டார். எல்லாவற்றையும் அவருக்குள் வைத்துக் கொண்டார். அவர் என்ன நினைக்கிறார், எப்படி உணருகிறார் என்பதை என்னிடம் வெளிக்காட்ட அவர் விரும்பவில்லை. என் இழப்பு இரவின் இருட்டில் மறைக்கப்பட்டு அழுகையாக வெளிப்பட்டு வந்தன.

எதிர்பார்ப்பு ஆறுதலும்

எதிர்பார்ப்பு ஆறுதலும்

எல்லாம் இன்னும் கொஞ்ச காலத்தில் சரியாகி விடும் என்று நம்பினேன். என் வலியை மனதின் ஆழத்தில் புதைத்து மறுபடி இயல்பிற்கு வர தயாராக இருந்தேன். ஜாஹிருக்கு மற்றொரு குழந்தையைத் தர காத்திருந்தேன். அவர் மறுபடி இயல்பாக, மகிழ்ச்சியாக ஆறுதலாக இருக்க விரும்பினேன். அவர் முன்னால் அழுது புலம்புவதை நிறுத்திக் கொண்டேன்.

கவலை

கவலை

இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஜாஹிர் முற்றிலும் முடங்கிப் போனார். என்னால் முடிந்தவரை அவரை மீட்டெடுக்க முயற்சி செய்து நான் தோற்றுப் போனேன். என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பது ஜாஹிரின் உடல் மட்டுமே. எங்கள் குழந்தை பிரிந்தே போது ஜாஹிரின் உயிரும் பிரிந்திருந்தது.

தற்கொலை

தற்கொலை

ஜூன் 9ம் நாள் நான் அவரை கடைசியாக பார்த்தேன். அவருடைய மகனின் ஞாபகங்களை அவரால் மறக்க முடியவில்லை என்றும் அவரால் இதற்கு மேல் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் கூறினார். என்னை விட்டு விட்டு தான் சென்று விடுவதாக அவர் கூறினார். "என் கண்களை குருடாக்கி விட்டு நீங்கள் செல்லுங்கள். உங்கள் உருவம் தான் நான் பார்க்கும் கடைசி காட்சியாக இருக்கட்டும்" என்று கதறினேன். ஆனால் அவரால் என் வலியை புரிந்து கொள்ள முடியவில்லை. அவரின் வலியைப் பற்றி மட்டுமே அவர் பேசிக் கொண்டிருந்தார்.

இரவின் இருளைப் போல் எங்கள் வாழ்க்கையும் வேதனை இருளால் சூழப்பட்டு இருந்தது. அந்த இரவு தான் எங்கள் குடும்பத்தின் கடைசி இரவு. கொடிய விஷம் கொண்ட தனிமையில் மூழ்கி ஜாஹிர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். மன அழுத்த தடுப்பு மாத்திரைகளை அதிகம் உட் கொண்டு அவர் அறையில் இறந்து கிடந்தார். இன்று வரை அந்த காட்சியை என்னால் மறக்க முடியவில்லை.

என் மகன் உயர் பிரிவதைத் தடுக்க எனக்கு சக்தி இல்லை. ஆனால் ஜாஹிர் என்னை விட்டு பிரியாமல் இருக்க என்னால் முடிந்தவற்றை என்னால் செய்தேன். ஆனாலும் அவர் என்னை விட்டு பிரிந்து விட்டார்.

இது ஒரு உண்மைக் கதை. இது போன்ற ஒரு கதை உங்களிடம் இருந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Stories; Why Did He Leave Me Blindfold In Questions?

here we are giving a real life story about a single family. why the family destroyed.
Story first published: Tuesday, September 11, 2018, 16:22 [IST]
Desktop Bottom Promotion