For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் நியூட் வீடியோ பார்க்குறதுக்கு பதிலா... நீங்க இதப் பண்ணலாம் - ராதிகா ஆப்தே!

நியூடா பார்க்கணும்னா நீயே உன் உடல பார்த்துக்க, என் வீடியோ ஏன் பார்க்குற - ராதிகா ஆப்தே!

|

மாதவிடாய் கூச்சப்பட வேண்டிய காரியமே அல்ல. உங்கள் நிலை என்ன என்பதை நீங்கள் முதலில் உணருங்கள். பிறகு அதை மற்றவர் உணரும்படி செயல்படுத்திக் காட்டுங்கள்.

உங்கள் வேலை, நீங்கள் உடுத்தும் உடை, உங்கள் நேரம் என எதுவும் நீங்கள் தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். உங்கள் சுதந்திரமும், வெற்றியும், கனவுகளும் உங்கள் கைக்குள்ளேயே இருக்கிறது. அதை மற்றவர்கள் கைப்பற்ற விட்டுவிட வேண்டாம்.

இதை சரியாக பின்பற்றினாலே போதும். பெண்களின் மேன்மை இன்னும் பன்மடங்கு உயரும்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... ஆண்களைவிட சிறந்தவர்கள் என்பதை நீங்கள் நிரூபணம் செய்ய தேவையில்லை. உங்களிடம் இருந்து தான் ஆண்களே பிறக்கிறார்கள். குழந்தைகளுடன் தாய் போட்டியிடுவதும், தான் சிறந்தவள் என நிரூபிக்க முயற்சிப்பதும் சிறப்பானதல்ல.

இதோ! பெண்களுக்கு ஊக்கம் தரும்வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் நடிகை ராதிகா ஆப்தே மிக தைரியமாக கூறிய சில பதில்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய்!

மாதவிடாய்!

ராதிகா ஆப்தேவின் அடுத்தப்படம் பேட்மேன் (Padman). இந்த படத்தில் இவர் நடிகர் அக்ஷய் குமாருடன் நடித்துள்ளார். இந்த கதையானது தமிழகத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருடைய சொந்த வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாகும். இவர் சானிடரி நாப்கின்களில் புரட்சி செய்தவர்.

இந்த படத்தின் இசை நிகழ்வில் ராதிகா ஆப்தேவின் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மிக சென்சிடிவான விஷயத்தை மிக தைரியமாக கூறி அனைவரையும் அசத்தினார் ராதிகா.

அம்மாவின் பரிசு!

அம்மாவின் பரிசு!

"எனது பெற்றோர் மருத்துவர்கள் என்பதால், இப்படி ஒரு நடக்கும் என்று முன்கூட்டியே என்னிடம் கூறியிருந்தனர். எனக்கு முதல் முறையாக மாதவிடாய் தென்பட்ட நாளில் விருந்துக் கொடுத்து, ஒரு கைகடிகாரம் பரிசளித்து மகிழ்ந்தார் எனது தாய். அன்று நான் அழுதுக் கொண்டிருந்தேன். இன்றும் கூட எனது தாய் எனக்கு நிறைய பரிசுகள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்."

கூச்சம்!

கூச்சம்!

இன்றளவும் அதிகப்படியான பெண்கள் மத்தியில் இருக்கும் கூச்சம் இது. மாதாமாதம் வாங்க வேண்டிய பொருள் தான். ஆனால், தைரியமாக கேட்டு வாங்க இயலாத நிலை. தங்களை சுற்றி யாராவது இதுக்குறித்து சத்தமாக பேசினாலும் கூட சிலர் உடல் கூசி போவார்கள். நாப்கின் என்பது போதை பொருளல்ல. மற்றும் மாதவிடாய் என்பது குற்ற செயலல்ல.

ஆனால், இன்றும் நாம் இதுக்குறித்து பேச மிகவம் வெட்கப்படுகிறோம்.

ராதிகா ஆப்தே தனது வாழ்வில் இந்த வெட்கத்தை எப்படி உடைத்தார் என்பது குறித்து கூறியுள்ளார்.

வெட்கம்!

வெட்கம்!

"ஆரம்பக் காலத்தில் சானிடரி நாப்கின் வாங்க கடைகளுக்கு செல்லும் போது ஒருவித கூச்சம் இருக்கும். அது என்னை சங்கோஜப்பட செய்தது. ஒரு நாள் முடிவு செய்தேன். கடைக்கு சென்று ஒரு பாக்கெட் நாப்கின் தாருங்கள் என சப்தமாக கேட்டு வாங்கினேன். காரணமாக தான் அப்படி செய்தேன். அன்றிலிருந்து சானிடரி நாப்கின் வாங்க நான் கூச்ச்சப்பட்டதே இல்லை. மேலும், இது கூச்சப்பட வேண்டிய செயலும் இல்லை."

நிர்வாண உடல்!

நிர்வாண உடல்!

ராதிகா ஆப்தே நடித்த பர்செத் என்ற படத்தில் இருந்து ஒரு நிர்வாண காட்சி இணையங்களில் லீக்கானது. இது மிக வைரலாக பரவியது. இது எப்படி நடந்தது என தெரியவில்லை என படக்குழுவினர் கூறினார்கள். மேலும், இது ஒரு பிரமோஷன் ஸ்டண்ட் என மீடியாக்கள் கூறின. ஏனெனில், அதே சமயத்தில் தான் இவர் நடித்த ஒரு குறும்படத்தின் நிர்வாண காட்சியும் வெளியாகி இருந்தது.

இதுக்குறித்து ஒரு பேட்டியில் நிருபர் ராதிகா ஆப்தேவிடம் கேள்வி ஒன்று கேட்டிருந்தார்.

கண்ணாடி முன்...

கண்ணாடி முன்...

"நான் எதையும் அவமானமாக கருதவில்லை. யாரெல்லாம் அவர்களது சொந்த உடலை கண்டு வெட்கப்படுகிறார்களோ அவர்கள் தான் மற்றவர்கள் உடல் மீது அதிக கவனம் கொண்டிருப்பார்கள். ஒருவேளை, நாளை நீங்கள் ஒரு நிர்வாண உடலை காண வேண்டும் எனில், என் வீடியோவை பார்ப்பதற்கு மாறாக, கண்ணாடி முன்னாடி நிர்வாணமாக நின்று உங்கள் உடலையே காணலாம்."

மனநிலை!

மனநிலை!

ஃபோபியா என்ற படம் தான் பாலிவுட்டில் ராதிகா ஆப்தே லீட் நடிகையாக நடித்த முதல் திரைப்படம். அந்த படம் குறித்து கேட்கப்பட்ட போது,

"இது தான் எனது முதல் இந்தி படம். இதன் பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷன் எல்லாம் எப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு போதும் ஒரு கதையை, படத்தை அதன் பிரிவை கண்டு தேர்வு செய்வதில்லை. அந்த படத்தில் எனது ரோல் எப்படி இருக்கிறது என்பதை மட்டுமே காண்கிறேன். அது எனக்கு சவாலானதாக இருந்தால், அதில் நடிக்க முடிவு செய்வேன்."

இது அனைத்து பெண்களும் மனதில் ஆழப்பதிய வைத்துக்கொள்ள வேண்டியது ஆகும். உங்களால் முடியாது என்று எதுவும் இல்லை. ஆயினும், இன்றளவும் உலகின் கடினமாக கருதப்படும் வேலைகள் ஆண்களால் தான் செய்ய முடியும் என்ற நிலைப்பாடு இருக்கிறது. இதை பெண்கள் உடைக்க வேண்டும்.

அழகு, ஊக்கம்!

அழகு, ஊக்கம்!

ஒரு காணொளிப்பதிவில் ராதிகா ஆப்தே, அனைத்து பெண்களும் முதலில் அவரவரை விரும்ப கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் அழகு உங்களுக்குள் இருக்கிறது என்பதை உணர வேண்டும். இது ஒரு முக்கியமான விஷயம். ஆனால், இதுகுறித்து யாரும் பெரிதாக பேசுவதில்லை என கூறியிருந்தார்.

இதை அவர் கூறிய விதம் ஒரு பெண் தனது தோழிகளுக்கு கூறுவது போலும், ஒரு நாளை உத்வேகத்துடன் பெண்கள் துவக்க உதவுவது போலவும் அமைத்திருந்தது.

பெண்களே!

பெண்களே!

பெண்கள் முதலில் தாங்கள் அழகு என்பதை முழுமையாக நம்ப வேண்டும். சிலர் எவ்வளவு அழகாக இருந்தாலும், தாங்கள் அழகில்லை என்று கூறிக் கொண்டே இருப்பார்கள். தங்களை தாங்களே மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுக் கொள்வது தான் பெண்கள் செய்யும் முதல் தவறு.

இரண்டாவது தவறு, ஒரு ஆண் தன்னை வர்ணிப்பதில்லை, அவன் வர்ணிக்கும் படி நானில்லை என ஆண்களின் வர்ணிக்கும் படியாக இருக்க வேண்டும் என கருதுவது. ஆண்களின் வர்ணிப்பு தான் அழகென்றும் எண்ணுவது. பெண்களும், பெண்களின் உடலும் ஆண்களுக்கான யூசர் ஃபிரெண்ட்லி பொருளில்லை. நீங்களும் அப்படியாக மாறிவிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Radhika Apte Bold Statements!

Radhika Apte Bold Statements!
Desktop Bottom Promotion