For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நொடிக்கு 8 குழந்தைகள் மரணிக்கின்றன, எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?

|

நம் நாட்டில் டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் காற்று மாசுப்பட்டு போயுள்ளது. இதனால், மக்களுக்கு நிறைய நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்பட்டும், பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பும் நேரிட்டு வருகிறது. இந்த பகுதிகளுன் ஒப்பிடுகையில் சீனாவில் காற்று மாசு மிகவும் அதிகம். சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நான்கில் மூன்று பங்கு ஏற்படும் காற்று மாசுபடுதலுக்கு காரணம் சீனா என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது சீனாவில் இருந்து பரவுகிறது என்று கூறுகிறார்கள்.

Very Dangerous Fact That You Know About Global Pollution, Which is Done By Humans!

Image Source: redd.it

பெய்ஜிங் நகரில் நீங்கள் காற்றை சுவாசிப்பது என்பது ஒரு நாளுக்கு 21 சிகரெட் பிடித்தால் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுமோ, அதற்கு இணையானது ஆகும். மேலும், இது மும்பையுடன் ஒப்பீடு செய்யும் போது அதிகமாக இருக்கிறது. மும்பையில் ஒருநாள் முழுக்க சுவாசிப்பது நூறு சிகரெட் பிடிப்பதற்கு இணையானது என்று ஆய்வறிக்கை கூறுகின்றன.

இப்படி அடுக்கடுக்காக அதிர்ச்சிகளை அதிகரிக்க செய்கிறது... காற்று, நீர் மாசு காரணத்தால் ஏற்பட்டுள்ள அபாய தாக்கங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
600 கோடி

600 கோடி

ஓராண்டுக்கு கடலில் 14 பில்லியன் பவுண்ட் குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஏறத்தாழ இது 600 கோடி கிலோ எடையிலான குப்பைகள் ஆகும். இப்படி கொட்டப்படும் குப்பைகளில் பெரும்பகுதியானவை பிளாஸ்டிக் குப்பைகளாக தான் இருக்கின்றன. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு பல அரிய வகையிலான கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துக் கொண்டிருக்கின்றன.

விபரீத அமெரிக்கா!

விபரீத அமெரிக்கா!

உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் பங்கு வெறும் 5 சதவிதம் தான். ஆனால், உலகளவில் உற்பத்தியாகும் கழிவுகளில் 30% அமெரிக்கர்களால் உருவாக்கப்படுவது ஆகும். மேலும், உலக வளங்களில் 25%த்தை பயன்படுத்துபவர்களும் அமெரிக்கர்களே!

25 இலட்சம்!

25 இலட்சம்!

ஒரு மணி நேரத்திற்கு 2.5 மில்லியன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை அமெரிக்கர்கள் பயன்படுத்தி தூக்கி எறிகிறார்கள். ஒரு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் டீகம்போஸ் ஆவதற்கு ஐநூறு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்குறி!

ஆண்குறி!

மக்களால் ஏற்படுத்தப்படும் மாசின் காரணத்தால், போலார் கரடிகளின் ஆணுறுப்பு நீளம் குறைந்துள்ளதாக ஒரு ஆய்வுத் தகவல் குறிப்பிடுகிறது. இது மிகுந்த அச்சத்தை ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு டன்!

ஒரு டன்!

பெரும்பாலும் எண்ணெய் வர்த்தகமானது இன்றும் கப்பல் மூலமாக தான் நடைபெற்று வருகிறது. இதில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் என்னவெனில், ஒவ்வொரு பத்து இலட்சம் டன் எண்ணைய் ஏற்றுமதி / இறக்குமதி போக்குவரத்தில் ஒரு டன் எண்ணெய் கசிவு கடலில் கலக்கிறது என்பதே ஆகும். ஒரு டன் என்பது ஏறத்தாழ ஆயிரம் கிலோ.

நொடிக்கு எட்டு!

நொடிக்கு எட்டு!

ஆத்தமான நீரை பருகுவதால், பயன்படுத்துவதால் ஒவ்வொரு எட்டு நொடிக்கும், உலகில் ஒரு குழந்தை உயிரிழந்து வருகிறது என்பது பெருஞ்சோகம்.

அதே போல, உலகில் நிகழும் எட்டில் ஒரு மரணம் என்பது காற்று மாசுபாட்டுடன் சம்மந்தப்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

34 இலட்சம்!

34 இலட்சம்!

ஒவ்வொரு வருடமும் 34 இலட்சம் பேர் தண்ணீர் மாசுப்பட்டு சார்ந்த பிரச்சனைகள், உடல்நலக் குறைப்பாடுகளால் மரணிக்கின்றனர்.

ரஷ்யாவில் கராச்சே (Karachay) எனும் குளம் இருக்கிறது. உலகிலேயே அதிக ரேடியோ ஆக்டிவ் மற்றும் மாசுப்பட்டு போன குளம் என்று இது அறியப்படுகிறது.

4.9 கோடி!

4.9 கோடி!

கடந்த 2012ம் ஆண்டு மனிதர்களால் உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக் கழிவுகளின் எடை எத்தனை தெரியுமா? 49 மில்லியன் டன். அதாவது 4.9 கோடி டன்.

சீனப்பெருஞ்சுவர்!

சீனப்பெருஞ்சுவர்!

சமீபத்திய ஆய்வொன்றில் வானில் இருந்து பார்த்தால் தி கிரேட் வால் ஆஒ சீனா என்று அறியப்படும் சீனப்பெருஞ்சுவர் புலப்படுவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணம் சீனாவில் அதிகரித்து வரும் காற்று மாசு என்றும் அறியப்பட்டுள்ளது.

சீனாவின் பெருநகரங்களின் பூமிக்கு கீழ் இருக்கும் தண்ணீர் 90% அசுத்தமான நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது. சீனாவில் 70 கோடி மக்கள் அசுத்தமான நீரை பருகி வருகிறார்கள்.

டெல்லி!

டெல்லி!

காற்று மாசுப்பட்டு போயிருப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு பெய்ஜிங் மிகவும் பிரபலமாக உலக அளவில் அறியப்பட்டாலும். உலகின் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் காற்று மாசு நிறைந்த நகரம் புது தில்லி. இது தான் உலகளவில் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

மீன்கள்!

மீன்கள்!

அசுத்தமான குளங்களில் உயிர் வாழும் மீன்கள் தங்கள் வாசனை தன்மையை இழக்கின்றன என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய்!

புற்றுநோய்!

காற்று அசுத்தமாவதன் காரணத்தால் நுரையீரல் புற்றுநோய் அபாயம் பெருமளவு அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி, இது சிறுநீர்ப்பை புற்றுநோய் அபாய்த்தையும் அதிகரிக்கிறது.

சுற்றுசூழல் மாசு காரணமாக ஆண்டுக்கு பத்து இலட்சம் கடல் பறவைகள் மற்றும். பத்து கோடி பாலூட்டி உயிரினங்கள் மரணிக்கின்றன.

கிரீன் புரட்சி!?!?!

கிரீன் புரட்சி!?!?!

20 நூற்றாண்டின் ஆரம்பத்தில் குதிரை வண்டிகள் மூலம், அதாவது குதிரை ஓடும் போது அதன் சாணத்தின் மூலம் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது என்றும். அதற்கான சிறந்த கிரீன் ஆல்டர்நேடிவாக கார்களை மக்கள் கண்டனர்.

மீண்டும் அமெரிக்கா!

மீண்டும் அமெரிக்கா!

அமெரிக்கன் நுரையீரல் மையம் நடத்திய ஆய்வொன்றில், அமெரிக்காவில் நாற்பது சதவித மக்கள் ஆரோக்கியமற்ற காற்றை தினமும் சுவாசித்து வருகிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவில் பெருமளவு காற்று மாசு ஏற்பட்டுள்ள ஐந்து நகரங்களும் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Very Dangerous Fact That You Know About Global Pollution, Which is Done By Humans!

Very Dangerous Fact That You Know About Global Pollution, Which is Done By Humans!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more