திடீரென அந்த கடைக்காரர் என்னை கடைக்குள் இழுத்து தகாத முறையில் தீண்டினார் - My Story #213

Posted By: Staff
Subscribe to Boldsky

எனக்கு இப்போது 18 வயதாகிறது. நீண்ட நாள் என் மனதுக்குள் மறைந்திருந்த வடுவை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். சரியாக பத்து வருடங்களுக்கு முன்னாள் நடந்தது அந்த கொடுமை.

யார் ஒருவராக இருந்தாலும், அவர்கள் அதிகம் அழுத நாட்கள் எது என்று கேட்டால்? நிச்சயம் அவர்கள் குழந்தை பருவத்தை அல்லது துக்கமான நாட்களை / காலத்தை கூறுவார்கள். ஆனால், என்னிடம் இப்படியான கேள்வியை யாராவது முன் வைத்தால்... என் ஒவ்வொரு இரவினையும் சுட்டிக் காட்டுவேன்.

அப்போது என் வயது 8. அந்த மாலை நேரத்தில் அந்தவொரு சம்பவம் என் வாழ்வில் நடக்காமல் இருந்திருந்தால்... நான் ஒரு தைரியமான பெண்ணாக வாழ்ந்திருப்பேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃப்ரூட்டி!

ஃப்ரூட்டி!

ஃப்ரூட்டி எனக்கு மிகவும் பிடித்த பானம். தினமும் எப்படியாவது அடம் பிடித்து அப்பா, அம்மா, பாட்டி என யாரிடமாவது பணம் வாங்கிக் கொண்டு ஃப்ரூட்டி வாங்கிக் குடித்துவிடுவேன். எனக்கு அதில் ஒரு அலாதியான பிரியம். ஆனால், அந்த சம்பவத்திற்கு பிறகு நான் ஃப்ரூட்டியை என் வாழ்நாளில் குடிக்கவே இல்லை.

கடைக்காரர்!

கடைக்காரர்!

அந்த கடைக்காரர் எனக்கு மிகவும் பரிச்சயமான நபர் தான். என் வீடு அமைந்திருக்கும் தெரு முனையில் தான் அந்த மளிகை கடை அமைந்திருந்தது. அதற்கு முன் எத்தனையோ முறை அந்த கடைக்கு சென்றுள்ளேன். ஆனால், அன்று அந்த கடைக் காரருக்கு என்ன ஆனது என தெரியவில்லை. என்றுமில்லாத படி என்னிடம் நடந்துக் கொண்டார்.

பாலியல் வன்கொடுமை!

பாலியல் வன்கொடுமை!

எப்போதும் அவர் என் கன்னங்களை கிள்ளி கொஞ்சுவது வழக்கம். ஆனால், அன்று ஜூஸ் வாங்க சென்ற என்னை கடைக்குள் அழைத்தார். என்னை சில இடங்களில் தீண்டி கொஞ்சினார். கட்டியணைத்துக் கொண்டார். சில இடங்களில் முத்தமிட்டார். அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. என்னுள் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவர் என் உடலில் ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் அறிய முடிகிறது.

மிட்டாய்!

மிட்டாய்!

அவர் செய்த காரியங்களுக்கு எனக்கு ஒரு மிட்டாய் இலவசமாக கொடுத்து அனுப்பினார். இதை நேராக சென்று அம்மா, அந்த கடைக்காரர் என்னை முத்தமிட்டார், கட்டிப்பிடித்தார் என்று மட்டும் கூறினேன்.

அம்மாவிற்கு என் மழலை குரலில்இருண்டு வெளிப்பட்ட வார்த்தைகளில் என்ன புரிந்தது என்று நான் அறியேன். என்னை திட்டினார். இப்படியா பழகுவாய் என்று ஏதேதோ சொல்லி திட்டினார்.

இதை அப்பா அறிந்தால், வீண் பிரச்சனை வரும் என்று கூறினார். என்னுள் அச்சம் அதிகரித்தது, பதட்டத்தில் உடல் நடுங்க துவங்கியது. இரவு முழுக்க விம்மி, விம்மி அழுதேன்.

தொடர்ந்தது...

தொடர்ந்தது...

அழுது ஓய்ந்து விம்மி, விம்மி சோர்ந்த பிறகே அன்று இரவு உறங்கினேன். உண்மையில் அன்று இரவு மட்டுமல்ல, இந்த அழுகை பல நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் தொடர்ந்தன. கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் இந்த அழுகை தொடர்ந்தது. என்னால் அழாமல் உறங்க முடியாது. எத்தனை அடக்கி கொண்டாலும் கூட, அனைவரும் உறங்கிய பிறகு, நள்ளிரவு வீட்டின் பின்புறம் சென்று கண்களை துடைத்துக் கொண்டே அழ துவங்கிவிடுவேன்.

நட்பு?!

நட்பு?!

எட்டு வயது வரை அழுகை அறியாத நான், அதன் பிறகு தினமும் அறிந்தது அழுகை மட்டுமே. பகல் வேளையில் அமைதியான பெண்ணாக இருப்பேன். இரவு நேரங்களில் அந்த நினைப்பு வந்து அழுக துவங்கிவிடுவேன்.

பள்ளிகளிலும் நான் யாருடனும் பெரிதாக பேசிப் பழகியது இல்லை. ஆகையால், என்னுடன் யாரும் நட்பாக இல்லை. இந்த காரணத்தால், என்னுள் இருக்கும் வருத்தம் அல்லது அழுகை, வலி குறித்து பகிர்ந்து கொள்ள தோழிகள் இல்லாமல் போயினர்.

மாற்றம்!

மாற்றம்!

எட்டு வருடம் கழித்து நான் எனக்கு தைரியம் புகட்டிக் கொண்டேன். அந்த எண்ணங்களை ஒருவழியாக மறந்தேன். என்னுள் கண்ணீர் ஒருவழியாக வற்றியது. எனக்கான நெருக்கமான நண்பர்களை சம்பாதித்தேன். 10, 11 மற்றும் 12 வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்தேன். ஆயினும் என்னுள் கொஞ்சம் மன அழுத்தம் மீதம் இருந்தது. எப்போதாவது ஒருநாள் அந்த நினைவுகள் வந்து செல்லும், என் உறக்கத்தை கெடுக்கும். ஆயினும், நான் மீண்டும் அழவில்லை.

இம்முறை அம்மா...

இம்முறை அம்மா...

எப்படியோ, 10ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த பிறகு எனக்கு பிடித்த காமர்ஸ் படிக்கலாம் என்று கனவுக் கண்டேன். ஆனால், என் அம்மாவின் பிடிவாத குணத்தால், அவரால் முடிக்க முடியாத கனவு என்று கூறி என்னை சயின்ஸ் க்ரூப்பில் சேர்த்துவிட்டார். பரவாயில்லை என்று ஏற்றேன். எனக்கு காமர்ஸ் போக, கெமிஸ்ட்ரியிலும் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. ஆம்! அனைவரும் வெறுக்கும் கெமிஸ்ட்ரியில் எனக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம்.

கல்லூரி!

கல்லூரி!

ஒருவழியாக 12ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண். கெமிஸ்ட்ரியில் சேர முனைந்துக் கொண்டிருந்தேன். விடுமுறை நாட்கள் முடிந்து, கல்லூரியில் சேர்க்கை நடந்துக் கொண்டிருந்தது. என் கண் முன்னாலேயே என் எதிர்காலத்தை நாசம் ஆக்கினார் என் அப்பா. கிட்டத்தட்ட 8 வருடங்கள் பெரும் மன அழுத்தத்தில் இருந்த என்னை வெளிக் கொண்டு வந்ததே என் கல்வி தான். ஆனால், அதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார் என் அப்பா.

இயற்பியல்!

இயற்பியல்!

காமர்ஸ் படிக்கவிருந்த என்னை, அம்மா அவரது கனவு என்று கூறி சயின்ஸ் க்ரூபில் சேர்த்து வைத்தார். சரி, அதிலாவது நான் விரும்பிய கெமிஸ்ட்ரி படிக்கலாம் என்றால், இம்முறை அப்பா அவரது கனவை கொண்டு வந்து திணித்தார். கெமிஸ்ட்ரியை காட்டிலும், இயற்பியல் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்று ஏதேதோ கூறினார். கல்லூரியில், ஃபார்ம் என்னை எழுத விடாமல், அவரே எழுதி, கட்டணம் செலுத்தி என்னை இயற்பியல் பிரிவில் சேர்த்துவிட்டார்.

என்ன வாழ்க்கை?

என்ன வாழ்க்கை?

யாரோ செய்த தவறுக்கு, அது என்ன எது என்று தெரியாமல் என் வாழ்வின் பெரும்பங்கை அழுதே தீர்த்தேன். அதற்கு முழுக் காரணம் என் அம்மா. உண்மையில், ஏனடா என் மகளிடம் தவறாக நடந்துக் கொண்டாய் என்று அம்மா, அன்றே அந்த கடைக்காரரை பிடித்து திட்டியிருந்தால் நான் இன்னும் தைரியமான பெண்ணாக வளர்ந்திருப்பேன்.

திணிக்காதீர்!

திணிக்காதீர்!

எப்படியோ, என் அந்த கொடுமையான நினைவுகளை கடந்து வெளிவர காரணமாக இருந்தது என் கல்வி தான். ஆனால், அதிலும், எனக்கு பிடிக்காத ஒன்றை திணித்து என் கனவுகளை நாசம் ஆக்கிவிட்டார்கள் என் பெற்றோர். பெற்றோர்களே! உங்கள் கனவுகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். எங்களுக்கென தனி கனவுண்டு. நாங்கள் உங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால் உங்கள் கனவுகளை சுமக்க முடியாது. கனவுகளை சுமையாக்கி, வாழ்க்கையை ரணமாக்காதீர்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: I Was Molested and Mom Says It is My Fault!

I Was Molested When I Was 8 But My Mother Told Me It Was My Fault. And here it is My Story #213.