For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  எந்தவொரு கர்ப்பிணிக்கும் என் நிலை வரக் கூடாது... - My Story #217

  By Staff
  |

  எனக்கு 21 வயதாகிறது. நான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தேன். ஆனால், அவன் என்னை நேசிக்கிறேன் என்று கூறி, அவன் ஆசை வார்த்தைக்கு மயங்கவில்லை என்ற காரணத்தால்... என்னுடன் பழகிக் கொண்டே வேறு ஒரு பெண்ணுடன் உடலுறவில் இருந்து வந்தான். இதை அறிந்தவுடன், அவனுடன் ப்ரேக்-அப் செய்துவிட்டேன்.

  ஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு, என் தோழியுடன் சேர்ந்து விளையாட்டாக மேட்ரிமோனி தளம் ஒன்றில் முகவரி துவங்கினேன். அடுத்த சில நாட்களில் 50 வயதுமிக்க பெண்மணி ஒருவர் எனக்கு செய்தி அனுப்பியிருந்தார். அதில், நான் அவரது மருமகளாக வந்தால் மிகவும் மனம் மகிழ்வேன் என்று கூறி இருந்தார்.

  ஆனால், அந்த நேரத்தில் என்னால் அவரது செய்திக்கு ஒப்புதல் அளிக்க முடியவில்லை. மேலும், அவரது மகன் என்னைவிட 9 வயது மூத்தவர். ஆகையால், இந்த காரணத்தை சுட்டிக் காட்டி நீங்கள் உங்கள் மகனுக்கு வேறு பெண் தேடுங்கள். எனக்கு இது சரியாக படவில்லை என்று கூறிவிட்டு, அந்த மேட்ரிமோனி முகவரியை டி-ஆக்டிவேட் செய்துவிட்டேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஃபேஸ்புக்!

  ஃபேஸ்புக்!

  அடுத்த ஒரு வாரத்தில், அந்த பெண்மணியின் மகனை ஃபேஸ்புக்கில் கண்டேன். உடனே ஒரு ஈர்ப்பில் அவருக்கு ஃபிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் அனுப்பினேன். அந்நாள் மாலையே எனது ரெக்வஸ்ட்டை ஓகே செய்தார் அவர். மெல்ல, மெல்ல வருடன் பேச துவங்கினேன். என்னிலை, நான் யார் என்று அவரிடம் பகிர்ந்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கினோம்.

  பொய்!

  பொய்!

  அவரிடம் நான் ஒரு சிங்கிள் சைல்டு என்றும், எனக்கு பெற்றோர் யாரும் இல்லை என்றும் பொய் கூறினேன். அவரும் என்னை பற்றி அவரது வீட்டில் பேசி அம்மாவிடம் சம்மதம் வாங்குகிறேன் என்று கூறினார். விளையாட்டாக நான் செய்தது தவறு என்பதை அறிந்து, இல்லை... நான் கூறியது பொய், எனக்கு பெற்றோர் இருக்கிறார்கள் என்று கூறினேன். அதற்கான மன வருத்தத்தையும் அவரிடம் கூறிவிட்டேன்.

  எதிர்ப்பு!

  எதிர்ப்பு!

  சரி! நான் அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்குகிறேன் என்று கூறினார். அவர்கள் ஒரு நல்ல நாள் பார்த்து என்னை பெண் பார்க்க வந்தனர். இரு குடும்பத்திற்கும் திருமணத்திற்கு சம்மதம் தான். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த டவுரி எங்களால் தர இயலாது. இதை என் அப்பா ஆரம்பத்திலேயே கூறிவிட, உடனே அவரது அம்மா திருமணத்திற்கு எதிர்ப்பு கூறினார். எங்கள் வீட்டிலேயே கத்திக் கூச்சலிட்டார்.

  ரிஜிஸ்டர் திருமணம்!

  ரிஜிஸ்டர் திருமணம்!

  இரண்டு வாரங்கள் சென்றன.... எங்கள் காதல் குறுகிய காலத்தில் மலர்ந்தது தான் என்றாலும். நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த காதல் ஆழமானது. நாங்கள் ஒருவரை ஒருவர் பிரிய முடியாமல் தவித்தோம். ஒரு நாள் அவராகவே, பேசாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்துக் கொள்வோம். எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள், எந்த பிரச்சனையும் வராது என்றார்.

  சம்மதம்!

  சம்மதம்!

  நான் என் பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்ய இயலாது என்றேன். மேலும், அவர்களிடம் ஒப்புதல் வாங்க சிறிது கால அவகாசமும் கேட்டேன். என் அப்பா - அம்மா எங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், என் வருங்கால மாமியாரின் மேல் தான் அவர்களுக்கு மிகுந்த அச்சம். ஆனாலும், என் கணவர் கூறிய வார்த்தைகளை நம்பி, சரி என்றனர்.

  மிரட்டல்!

  மிரட்டல்!

  எங்கள் திருமணம் அதற்கு அடுத்த வாரமே இனிதே முடிந்தது. ஒரு மாத காலம் நான் எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தேன். பிறகு, சரியான நேரம் வந்த போது, திருமணம் நடந்ததை குறித்து கணவரின் அம்மாவிடம் கூறிவிடலாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் தம்பதியாக அவர் வீட்டுக்கு சென்றோம், ஆத்திரத்தில் கத்தினார், நான் அவர் வீட்டில் தங்கினால் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டினார்.

  கர்ப்பம்!

  கர்ப்பம்!

  ஆனாலும், மாமனார் ஒப்புக்கொள்ள நான் அவர்கள் வீட்டில் தங்க அனுமதி கிடைத்தது. நான்கு மாத காலம் சென்றிருக்கும். அனுதினமும் சித்திரவதை தான். ஒரு நாள் என்னை என் வீட்டுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டார்... அந்த நாள் தான் நான் ஏற்கனவே மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறேன் என்ற உண்மை வெளிப்பட்டது. எனவே, அவர் என்னை முழுமனதுடன் அரவணைத்துக் கொண்டார்.

  கொடுமை!

  கொடுமை!

  என் கணவர் இருக்கும் போது மிகவும் அன்பாக நடந்துக் கொள்வார், அவர் இல்லாத போது அதிகமான வேலை கொடுத்த செய்யக் கூறுவார். சுத்தமாக இருக்கும் இடத்தை துடைப்பது, பரணில் இருக்கும் அவசியமற்ற பாத்திரங்களை எடுத்து கழுவி வைப்பது என நான் செய்யாத வேலை இல்லை. என் உடல்நலம் மிகவும் மோசமாக இருந்தது, அடிக்கடி மயக்கம், வாந்தி எடுத்த வண்ணமே இருந்தேன்.

  ஆறு மணிக்கு!

  ஆறு மணிக்கு!

  ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு எழுந்திருக்கும் போது மயங்கிய நிலையில் தான் இருப்பேன். மருத்துவர் இது கர்ப்ப காலத்தில் சாதாரணம் என்று கூறினார். ஒவ்வொரு நாளும் காலை எங்கள் அறைக்கு அந்து என்னை எழுப்பி வேலை செய்ய கூறுவார். ஒருநாள் நான் மிகவும் முடியாமல் போனேன். மறுநாளும் வந்து என்னை எழுப்பினார். என் கணவர் எழுந்து அவளுக்கு உடம்பு முடியவில்லை, அவளை தொந்தரவு செய்யாதே என்றார். எல்லாம் குழந்தையின் நலத்திற்காக தான் செய்கிறேன் என்று கூறி, என்னை அழைத்து சென்றார்.

   தனிக்குடித்தனம்!

  தனிக்குடித்தனம்!

  சமையல் அறைக்கு என்னை அழைத்து சென்றதும் அடிக்க துவங்கினார், நான் வலி தாங்காமல் கத்தினேன். என்னை விட சத்தமாக கத்த ஆரம்பித்தார். நான் ஒருக்கட்டதில் அழுகை கட்டுப்படுத்த இயலாமல் தொடர்ந்து அழவே, என் கணவர் மேல் மாடியில் இருந்து ஓடிவந்தார். அவர் எதிரே எந்த தவறும் செய்யாதது போல நடித்தார். உண்மை அறிந்த என் கணவர் நாங்கள் தனிக்குடித்தனம் செல்கிறோம் என்று கூறிவிட்டார்.

  பிரசவம்!

  பிரசவம்!

  சில மாதங்கள் நாங்கள் தனிக்குடித்தனம் சென்றோம். எனக்கு பிரசவ நாள் நெருங்கிக் கொண்டிருந்த காரணத்தாலும், அவரால் வேலை முடிந்து சீக்கிரம் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறி, கொஞ்ச நாட்கள் அம்மா உடன் இருக்கலாம் என்று கூறினார். நான் வேண்டவே வேண்டாம் என்றேன். என்னை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்.

  சித்திரவதை!

  சித்திரவதை!

  நிறைமாத கர்ப்பிணி என்று கூட பாராமல், உணவளிக்காமல் கொடுமை செய்தார். அடிக்கடி என்னை அடிப்பார். குழந்தை பிறந்தவுடன் இந்த வீட்டில் இருந்து சென்றுவிடலாம் என்று முடிவு செய்தேன். குழந்தை பிறந்தது, பிரசவத்திற்கு பிறகும் இதே கொடுமை தொடர்ந்தது. சரியான உணவு தரமாட்டார். பசியில் குழந்தை அழுதாலும் என்னை பாலூட்ட அனுமதிக்க மாட்டார். ஏதாவது கூறி திட்டிக் கொண்டே இருப்பார், கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கவும் செய்வார்.

  மீண்டும்....

  மீண்டும்....

  மீண்டும் தனிக்குடித்தனம் சென்றோம். கொஞ்ச நாட்கள் வாழ்க்கை நிம்மதியாக சென்றது. சில மாதங்கள் கழித்து, மீண்டும் ஒருநாள் அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றார். ஏன் என்று கேள்வி கேட்டதற்கு நான் வேலை இழந்துவிட்டேன். மீண்டும் வேலை கிடைக்கும் வரை அங்கே தான் இருக்க வேண்டும். இனிமேல், அவர் உன்னை கொடுமை செய்யமாட்டார் என்று வாக்குறுதி அளித்தார். நான் வேண்டுமானாலும் வேலைக்கு செல்கிறேன் நாம் இங்கேயே இருப்போம் என்று கெஞ்சிப் பார்த்தும் எந்த பலனும் இல்லை.

  விவாகரத்து?!

  விவாகரத்து?!

  கொடுமைகளும், நான் அடி வாங்குவதும் தொடர்ந்தன. நிச்சயம் குழந்தையை அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு என்னால் வேலைக்கும் செல்ல இயலாது. அவர் என் குழந்தையை ஏதாவது செய்துவிடுவார். இதை எல்லாம் என் வீட்டில்கூறினால் மனம் வருந்துவார்கள் என்று நான் எதுவும் கூறுவதும் இல்லை. என் மாமியார் எப்படியாவது என்னை விவாகரத்துய் செய்து, வேறு பெண்ணுக்கு (நிறைய பணம் வரதட்சணை கொடுக்கும் பெண்) தன் மகனை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்.

  டவுரி!

  டவுரி!

  என் மாமியார் மனதை எப்படி மாற்றுவது, அவரது கொடுமைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று எதுவும் விளங்கவில்லை. என்னால் என் கணவரை விட்டும் பிரிய இயலாது. அவர் தான் என் உலகமே. இப்போது என்னுடன் சேர்ந்து என் குழந்தையும் கொடுமைகளை அனுபவிக்கிறான். எப்படியாவது என் மாமியார் மனதை மாற்ற வேண்டும். அதற்கு அவர் விரும்பும் டவுரியை நான் அவரிடம் கொடுக்க வேண்டும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Mother in Law Tortures Me Everyday, Because I Did Not Bring Her Dowry For Her Precious Son!

  Mother in Law Tortures Me Everyday, Because I Did Not Bring Her Dowry For Her Precious Son!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more