பெண்ணை பள்ளிக்கு அனுப்ப இவர் செஞ்ச வேலையை பாருங்க !

Subscribe to Boldsky

இன்றைக்கு கல்வியின் அவசியம் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை மிகப்பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் நகரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் கிராமத்தில் இருப்பவர்களுக்கு இன்னமும் அடிப்படை கல்வியைத் தாண்டுவதே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கல்வி கட்டணம் என்பது பெரிய பிரச்சனையாக இருந்தாலும்,இன்னொரு மிக முக்கியமான பிரச்சனையாக அவர்கள் பார்ப்பது போக்குவரத்து. அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு சென்று வர வேண்டுமானால் பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்,பேருந்து கிடைக்குமோ கிடைக்காதோ சொல்ல முடியாது, சத்தான ஆகரங்கள் கிடைக்காமல் இன்னமும் இந்திய கிராமங்களில் மாணவர்கள் சிரமப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாங்கள் என்ன செய்ய :

நாங்கள் என்ன செய்ய :

Image Courtesy

ஆண் குழந்தைகள் எப்படியாவது லிஃப்ட் கேட்டு சென்று வந்து விடுவார்கள் ஆனால் நாங்கள் என்ன செய்வது? அதோடு மாலை ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்தாக வேண்டும் என்கிற கெடுவும் எங்களுக்கு விதித்திருக்கிறார்களே... மற்ற நாட்களில் எப்படியாவது சமாளித்துவிடுவோம். ஆனால் இந்த மாதவிடாய் நாட்களில் என்ன செய்வது?

வழியில் ஏன் பள்ளியில் கூட கழிப்பறை வசதி இருக்காது. இந்த மாதவிடாய் பிரச்சனையினால் தான் என் தோழிகள் பலரும் பள்ளியிலிருந்து நின்று விட்டார்கள் என்கிறார் லக்னோ அருகில் இருக்கிற கிராமத்தில் வசிக்கும் சிறுமி.

தலைவர் :

தலைவர் :

Image Courtesy

பருவமடையும் பெண்கள் தாங்களாகவே பள்ளிக்குச் செல்லாமல் தவிர்த்து வர ஆரம்பித்தார்கள். இச்சம்பவம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்தது. லக்னோ அருகில் இருக்கிற கைராஹி என்ற கிராமத்திற்கு தலைவராக வந்தார் ஹரி பிரசாத்.

கவனம் :

கவனம் :

Image Courtesy

பெண்கள் ஆரம்பகால பள்ளிக்கல்வியைகூட சரியாக முடிக்காமல் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டவர் ஒரு கணக்கெடுப்பை நடத்தினார். அதில் கிட்டத்தட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் இதுவரை 28 லட்சம் பெண்கள் அடிப்படை கல்வியையே தாண்டவில்லை என்பது தெரியவருகிறது. இதனை மாற்ற புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

காரணம் :

காரணம் :

Image Courtesy

முதலில் பள்ளியை விட்டு நிற்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார் கழிப்பறை வசதி இல்லை என்பது ஒரு புறம் இருந்தால் கிராம மக்களின் மனநிலையிலும் பெண்கள் படிப்பது அவசியமன்று என்ற எண்ணத்திலேயே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் படிப்பு தடைபடுவது குறித்து எந்த குற்றஉணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்.

மாற்றம் :

மாற்றம் :

Image Courtesy

பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் யுனிசெஃபிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராஜெக்ட் கரிமா. தன் கிராமத்து பெண்களின் நிலையை உயர்த்த ப்ராஜெக்ட் கரிமாவின் உதவியை நாட முடிவு செய்கிறார் ஹரிபிரசாத்.

தன்னுடைய கிராமம் மட்டுமின்றி அருகிலிருக்கக்கூடிய மிர்சாபூர்,ஜவுன்பூர்,சோனேபத்ரா ஆகிய இடங்களிலும் இதே நிலைமை என்று தெரிந்து கொள்கிறார்.

மாதவிடாய் பிரச்சனை :

மாதவிடாய் பிரச்சனை :

Image Courtesy

முதலில் கல்வியை விட அவசியமானது ஆரோக்கியம். அதனால் சுகாதாரம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதர முறைகள் பேட் பயன்பாடு ஆகியவை குறித்தெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்.

பேட் :

பேட் :

பல தன்னார்வலர்களின் உதவியுடன் கிராமத்தில் இருக்கிற பெண்களுக்கு குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக பேட் வழங்க ஏற்பாடு செய்கிறார். கழிப்பறைகள் கட்டப்படுகிறது. மாணவிகள் மத்தியில் இது போன்ற தடைகளுக்கு எல்லாம் கல்வியை நிறுத்தக்கூடாது, கல்வி ஏன் உங்களுக்கு மிகவும் அவசியம் என்பது குறித்தும் சொல்லி புரியவைக்கிறார்.

சவால் :

சவால் :

Image Courtesy

எல்லா பிரச்சனைகளை ஒருவாராக சமாளித்து மேலே வரும் போது தான் மிக முக்கியமான பிரச்சனை கண்ணில் படுகிறது. அது இந்த சமூகத்தில் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மனதில் வேரூன்றி இருக்கக்கூடிய விஷயம். பெண்களுக்கு எல்லாம் கல்வி எதற்கு? பருவம் அடைந்தவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டியது தானே... அதோடு மாதவிடாய் காலத்தில் வீட்டிற்குள் வரக்கூடாது, சாமான்களை தொடக்கூடாது என்று சொல்லி ஒதுக்கி வைப்பது என்று அதிகளவு நடைப்பெற்று வந்திருக்கிறது.

மாதவிடாய் :

மாதவிடாய் :

பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த நடைமுறையை மாற்றச் சொல்கிறான் என்று ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பள்ளியிலிருந்து இடையில் நின்ற பெண் குழந்தைகளின் தந்தையிடம் முதலில் பேசினார். மெல்ல மெல்ல அந்த கிராம மக்களிடம் மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று, அது நிகழ்வதினால் பெண்கள் ஒன்று தொடக்கூடாதவர்கள் அல்ல, இன்னும் சொல்லப்போனால் மாதவிடாய் மட்டும் இல்லையென்றால் உங்களுக்கு வாரிசே கிடைக்காது.

என்று சொல்லி உடல் ரீதியாக நிகழ்வதை விவரித்திருக்கிறார்.

பேட்மேன் :

பேட்மேன் :

பல போராட்டங்களை கடந்து மக்களிடம் கொண்டு சேர்த்த விஷயங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பள்ளியிலிருந்து இடைநின்ற 35 மாணவிகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இளைஞர்கள் சிலர் இவரை பேட் மேன் என்று அழைப்பார்களாம். பேட் மேன் குறித்து தெரியுமா என்று கேட்டால், பேட்மேன் என்று ஒரு திரைப்படம் வந்தது, ஆனால் அதனை நான் பார்க்கவில்லை என்னை இந்த இளைஞர்கள் சிலர் அப்படிக் கூப்பிடுகிறார்கள் என்கிறார் சாதரணமாக.

உத்திரபிரதேச அரசாங்கம் எடுத்திருக்கிற கணக்கெடுப்பின்படி 60 சதவீத பெண்கள் வரை பள்ளிக் கல்வியை தாண்டவில்லை. கிட்டத்தட்ட பத்தொன்பது லட்சம். இவர்கள் அனைவருக்குமே கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync life women
  English summary

  Lucknow village man who helps girls

  Lucknow village man who helps girls
  Story first published: Tuesday, May 29, 2018, 15:40 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more