For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரில் பவுன்சராக பணியாற்றி, ஒருவேளை சோற்றுக்கே திண்டாடி... டாப் ஸ்டாரான ஹீரோ!

பாரில் பவுன்சராக பணியாற்றி, ஒருவேளை சோற்றுக்கே திண்டாடி... டாப் ஸ்டாரான ஹீரோ!

|

வாய்ப்புகள் அனைவரையும் தேடி வருவதில்லை. சில சமயம் நாம் தான் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது ரஜினி பேசிய வசனம். ஆனால், இது வாழ்வின் பெரும் பாடம் மற்றும் நிதர்சனம். வாய்ப்புகள் கிடைத்து அதை பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாய்ப்புகளை வீணடித்து பிறகு புலம்பியவர்களும் இருக்கிறார்கள்.

Life of Actor Vin Diesel AKA Mark Sinclair

வாய்ப்பிற்காக காத்திருந்த வாழ்க்கையை தொலைத்தவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் நிச்சயம் எதிர்பாராத வெற்றி மற்றும் தோல்விகளை எதிர்க் கொண்டிருப்பார்கள். ஆனால், தனக்கான வாய்ப்பினை தானே தேடி சென்று உருவாக்கிக் கொண்டவர்கள் மட்டுமே சாதனையாளர்களாகி, வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அப்படி, போராடி வெற்றிப் பெற்ற ஒரு ஹீரோவின் வாழ்க்கையை குறித்து தான் நாம் இங்கே காணவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறக்கும் முன்னரே...

பிறக்கும் முன்னரே...

மார்க் வின்செண்ட் பிறப்பதற்கு முன்னரே, இவரது பெற்றோர்கள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ துவங்கி விட்டனர். மார்க்கின் இயர் பெயர் மார்க் சின்கிளைர். தான் பிறந்ததில் இருந்தே அப்பாவை காணாத நிலையில் வளர துவங்கினார் மார்க். இவரது வளர்ப்பு தந்தையின் பெயர் அயர்விங் எச். வின்செண்ட். பிறகு, அவரது பெயரை சேர்த்துக் கொண்டு மார்க் வின்செண்டாக வளரத் துவங்கினார் மார்க்.

இரட்டையர்!

இரட்டையர்!

மார்க் இரட்டையர் ஆவார். இவரது ட்வின் சகோதரர் பெயர் பவுல். இருவரையும் இவர்களது தாய் தனி ஆளாக வளர்த்து வந்தார். பிறகு, இவர் அயர்விங் வின்செண்ட் எனும் நடிப்பு கற்றுக் கொடுக்கும் நபரை திருமணம் செய்துக் கொண்டார். தனது வளர்ப்பு தந்தை மூலம் தனது ஏழாவது வயதில் இருந்து நடிப்புக் கற்றுக் கொள்ள துவங்கினார் மார்க். சிறு வயதில் இருந்தே நடிகராக வேண்டும் ஆர்வம் மார்க்கிடம் அதிகமாக இருந்தது.

மேடை!

மேடை!

தனது ஏழாவது வயதில் நடிக்க மேடை ஏறினான் மார்க். நியூயார்க் நகர தியேட்டரில் அன்று மேடை ஏறிய போது, நிச்சயம் ஒருநாள் தான் இத்தனை பெரிய நட்சத்திரமாக வளர்வேன் என்று மார்க் நினைத்திருக்க மாட்டார். ஆனால், மார்க்கிற்கு இந்த இடம் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை என்பது தான் உண்மை. ஒருமுறை அந்த சின்ன வயதில், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், நான் நிச்சயம் ஒரு பெரிய ஹீரோவாக வளர்வேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருந்தார் மார்க்.

MOST READ: உங்கள் கை ரேகைகள் உங்கள் எதிர்காலம் பற்றி என்ன கூறுகிறது?

இளமை காலம்!

இளமை காலம்!

தன் இளமை காலத்தில் நிறைய நாடகங்களில் நடித்தார் மார்க். ஆனால், வளரவும், வாழவும் அந்த நாடகம் மட்டும் மார்க்கிற்கு போதுமானதாக இல்லை. தன் பதின் வயதில் தனது அடுத்த துறையை தேர்வு செய்தான் மார்க். அதுதான் கிளப்களில் பவுன்சராக பணியாற்றுவது. இதற்காக நிறைய உடற்பயிற்சியும் செய்தான் மார்க்.

சண்டை!

சண்டை!

பவுன்சராக பணியாற்றிய அனுபவம் மார்க்கிற்கு திரைப்படங்களில் நன்கு உதவியது என்று தான் கூற வேண்டும். தான் பவுன்சராக பணியாற்றிய காலங்களில் குறைந்தது தினமும் இரவு ஒரு சண்டையாவது நடந்திருக்கும். ஐநூறுக்கும் மேற்பட்ட முறை சண்டைகளில் ஈடுப்பட்டிருப்பேன் என்று கூறி இருந்தார் மார்க்.

கனவு!?

கனவு!?

பவுன்சராக பணியாற்றி வந்த காலத்தில் மார்க், நடிக்க வாய்ப்பு தேடுவது மற்றும் கல்வியை சரியாக பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. கிடைத்த சில வாய்ப்புகள் தன் திறமையை நிரூபிக்கும் படி இல்லை. தன் திறமையை நிரூபிக்க மார்க் தேடி சென்ற வாய்புகள், மார்க்கை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி, தான் நடிகனாகும் கனவை விரட்டிக் கொண்டு ஒரு கடினமான பாதையில் ஓடிக் கொண்டிருந்தான் மார்க்.

குறும்படம்!

குறும்படம்!

அந்த காலக்கட்டத்தில் தான் மார்க் ஒரு குறும்படம் இயக்கினார். அந்த குறும்படத்தை இயக்கம் போது மார்க் கல்லூரியில் டிராப் அவுட் ஆகி இருந்தார். மல்டி ஃபேசியல் என்று பெயரிட்டு மார்க் தயாரித்து, இயக்கி, நடித்த அந்த குறும்படம் மார்க்கின் நேர்மையான உழைப்புக்கு நல்ல பலனை கொடுத்தது.

ஆம், அந்த குறும்படம் கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 1995ம் ஆண்டு இடம் பெற்றது.பிறகு இவர் நடித்த முழுநீள திரைப்படமான ஸ்ட்ரேஸ் சண்டன்ஸ் திரைப்பட விழாவில் 1997ம் ஆண்டு இடம்பெற்றது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!

இந்த காலக்கட்டத்தில் தான் ஒரு கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகில் சிறந்த இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கு மார்க் மீது ஒரு ஆர்வம் உண்டானது. பல்வேறு இனத்தவரை கொண்டு மார்க் இயக்கியது அவரை மிகவும் ஈர்த்தது. அதுவே, மார்க்கினை தனது சேவிங் ப்ரைவேட் ரியான் என்ற படத்தில் 1998ம் ஆண்டு அவர் நடிக்க தேர்வு செய்ய காரணியாக இருந்தது.

தொடர் வெற்றிகள்!

தொடர் வெற்றிகள்!

அதைத் தொடர்ந்து மார்க் பெரும் பட்ஜெட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். பிட்ச் பிளாக், தி க்ரானிக்கல்ஸ் ஆப் ரிட்டிக், ட்ரிப்பில் எக்ஸ், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் என்று மார்க் நடித்த அனைத்து படங்களும் அவரை பல நிலைகளுக்கு மேல் எடுத்து சென்றது. மார்க் ஹாலிவுட்டில் ஒரு அசைக்க முடியாத நடிகராக மாறினார்.

MOST READ: உங்க கிட்னிய இப்படி சுத்தமா வெச்சுக்கணுமா? இந்த இலைய தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...

பன்முக கலைஞர்!

பன்முக கலைஞர்!

நடிப்பு, பவுன்சர், சண்டை, எழுத்து, இயக்கம், தயாரிப்பு, டப்பிங் ஆர்டிஸ்ட் என மார்க் ஒரு பன்முக கலைஞராக தன்னை மேம்படுத்திக் கொண்டார். கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸி என்ற திரைப்படத்தில் இடம்பெறும் க்ரூட் என்ற கதாப்பாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தது மார்க் தான்.

வின் டீசல்!

வின் டீசல்!

ஆம்! நாம் வியந்து இத்தனை நேரம் தெரிந்துக் கொண்டிருந்த அந்த மார்க் தான் வின் டீசல் பவுன்சராக இருக்கும் போது,தனது பெயரை வின் டீசல் என்று மாற்றிக் கொண்டார். உண்மையில், இவரது வேகம் மற்றும் விவேகத்தை கொண்டு இவரது சுற்றி இருந்தவர்கள் இவரை வின் டீசல் என்று அழைக்க துவங்கினர் என்றும் அறியப்படுகிறது.

இன வாதம்!

இன வாதம்!

இவர் பிறப்பில் இருந்தே இன வாத பிரச்சனையில் சிக்கித் தவித்தவர். இவர் வெள்ளையரா, கருப்பரா என பல இடங்களில் சிக்கித் தவித்திருக்கிறார். மார்க்கின் பயலாஜிக்கல் தந்தை ஆப்ரிக்கன் அமெரிக்கர், தாய் ஒரு ஜெர்மன் ஸ்காட்டிஷ். எனவே, இவரை இந்த இனவாதம் நிறைய இடத்தில் விரட்டி இருக்கிறது.

தான் வெள்ளையனா, கருப்பனா என்பதை காட்டிலும், தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள போராடினர் வின் டீசல். அதில் வெற்றியும் கண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life of Actor Vin Diesel AKA Mark Sinclair

Here we have shown struggling Life of Actor Vin Diesel AKA Mark Sinclair and How He achieved this heights. Lets take a look on his impressive life journey.
Desktop Bottom Promotion