For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் ரூ.234யுடன் தெருவில் அழுதுக் கொண்டிருந்த நடிகர், இன்று 1500 கோடிகளுக்கு அதிபதி!

|

தேங்க்ஸ் கிவ்விங் டின்னர் நாளில் ஜான்சனின் வீட்டில் மட்டும் யாருக்கும் கொடுப்பதற்கு என்று மட்டுமில்லாமல், அவர்கள் உண்ணவே உணவு இல்லாத நிலை. யாரேனும் உணவருந்த அவர்கள் வீட்டுக்கு தங்களை அழைக்க மாட்டார்களா என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துக் கொண்டு காத்திருந்தனர்.

Life of Actor and Wrestler The Rock AKA Dwayne Johnson!

Image Source: Google

தான் வாழ்க்கைக்காக, வாழ்வாதாரத்திற்காக ஜான்சனின் தந்தை மல்யுத்தம் செய்வதை வேலையாக கொண்டிருந்தார். ஜான்சனின் தந்தை மட்டுமல்ல, அவரது தாத்தாவும் மல்யுத்த வீரர் தான். மேலும், ஜான்சனின் பாட்டி பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகளை ஊக்குவித்து வந்த நபர் என அறியப்படுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டினி!

பட்டினி!

தன் தகப்பனார் மற்றும் தாத்தாவை தான் ஜான்சன் ஹீரோவாக கண்டு வந்தார். இரத்தத்திலேயே மல்யுத்தம் ஊறி இருந்தது ஜான்சனுக்கு. இரத்தத்தில் மல்யுத்தம் ஊறிப்போய் இருந்தாலும், அதனால் அவர்களது பசியைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. அதன் மூலம் கிடைத்த பணம் அவர்கள் குடும்பத்தை நடத்த பற்றாக்குறையாக இருந்தது. ஆகையால், பசியும், பட்டினியும் அவர்களது அன்றாட வாழ்வில் நீங்கா இடம் பிடித்திருந்தது.

வீடு ஜப்தி!

வீடு ஜப்தி!

ஒரு நாள் பள்ளி சென்று வீடு திரும்பும் போது, வீடு பூட்டப்பட்டு அதன் மேல் சீல் வைத்து கதவில் ஒரு நோட்டீசும் ஓட்டிச் சென்றிருந்தனர். ஆம்! வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போனதால், அவர்கள் வீடு ஜப்தி ஆனது. இனி எங்கே செல்வது, எங்கே தங்குவது? எப்படி வாழ்க்கை நடத்துவது? என நிறைய கேள்விகள் அவர்கள் கண்முன் வந்து சென்றது. ஜான்சனின் அம்மா கத்தி கதற ஆரம்பித்தார்.

விவாகரத்து!

விவாகரத்து!

ஒருக் கட்டத்தில் ஜான்சனின் பெற்றோர் விவாகரத்து பெறும் நிலை உண்டானது. அது தான் ஜான்சனின் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலமாக இருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனுக்கு கட்டுப்பட்டது, அவனது கைகள் மட்டும் தான். அவனது கைகளை கருவியாக மாற்றினான். பயிற்சிகள் மேற்கொண்டான். கால்பந்தாட்டம் ஆடத் துவங்கினான். அப்போது அவன் மேல்நிலைப் பள்ளி பயின்று வந்தான்.

மியாமி!

மியாமி!

நல்ல மதிப்பெண் பெற்ற காரணத்தால் யுனிவர்சிட்டி ஆப் மியாமி அவனுக்கு சீட் கொடுத்து அடைக்கலம் கொடுத்தது. பிறகு, மியாமியில் இருந்து கனடா சென்று புரொஃபஷனல் அணியில் விளையாட துவங்கினான். ஆனால், ஓரிரு மாதங்களில் ஒரு காயம் ஏற்பட்ட காரணத்தினால், அந்த அணியில் இருந்து விலகும் நிலை உண்டானது. பார்த்து வந்த வேலை போனது, விளையாடி வந்த அணியில் இருந்து வெளியேறும் நிலை, உடைந்துப் போனான் ஜான்சன்.

ரூ. 234

ரூ. 234

அப்போது ஜான்சனிடம் இருந்த கையிருப்பு வெறும் ஏழு டாலர். அன்றைய இந்திய பண மதிப்பில் கூற வேண்டும் என்றால், வெறும் 234 ரூபாய். அது தான் ஜான்சன் தன் வாழ்வில் கடந்து வந்த மிகவும் மோசமான காலம். தன் அம்மா வசித்து வந்த அப்பார்ட்மெண்ட்க்கு சென்றான். தேம்பி, தேம்பி அழுதான். அடுத்த என்ன செய்யலாம் என்ற எந்த திட்டமும் இல்லை. எங்க செல்வது என்ற கேள்விக்கு விடையும் அவனிடம் இல்லை.

பயிற்சி!

பயிற்சி!

மிக நீண்ட யோசனைக்கு பிறகு, தன் குடும்பத்தின் பாரம்பரிய விளையாட்டை கையில் எடுக்க தீர்மானம் செய்தான் ஜான்சன். தன் அப்பாவை சந்திக்க சென்றான். ஆரம்பத்தில் தன் மகனுக்கு பயிற்சி அளிக்க மறுத்த ஜான்சனின் தந்தை. பிறகு, ஜான்சனிடம் இருந்த ஆர்வத்தை வைத்து அவனுக்கு பயிற்சி அளிக்க முன்வந்தார்.

உண்மையான Wrestling Gear வாங்கவோ Wrestling Shorts வாங்கவோ ஜான்சனிடம் பணவசதி இல்லை. ஆகவே, Volley Ball Knee pad மற்றும் தனது அங்கிளின் Shortsஐ இரவல் வாங்கி பயிற்சி மேற்கொள்ள துவங்கினான்.

ஆரம்பம்!

ஆரம்பம்!

1996ம் ஆண்டு தனது மல்யுத்த வாழ்க்கையை துவக்க ஏறத்தாழ ஆயிரம் மைல்கள் பயணித்தான். அங்கே, ஜான்சனை புரோமோட் செய்ய வந்த நபர், நீ இதற்கு முன் மல்யுத்தம் செய்திருக்கிறாயா என்று கேட்ட கேள்விக்கு, மல்யுத்தம் என் இரத்தத்தில் கலந்திருக்கிறது என்று பெருமிதத்துடன் பதில் அளித்து தன் முதல் போட்டி ரிங்கினுள் நுழைந்தான் ஜான்சன்.

தி ராக்!

தி ராக்!

ஏழு முறை மல்யுத்தத்தில் சாம்பியன் பட்டம் வென்றான் ஜான்சன். பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கினான். தொடர் வெற்றிப் படங்களில் நடித்தான். மல்யுத்தம் மட்டுமின்றி, திரையுலகிலும் தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு, இன்ற உலகில் அதிக ஊதியம் வாங்கும் நடிகராக வளர்ந்து நிற்கிறார் ட்வைன் ஜான்சன் என்கிற தி ராக்.

தொடர்ந்து, ட்வைன் ஜான்சன் என்கிற தி ராக்கின் வாழ்க்கை ஒரு சிறிய டைம்லைனில்...

பிறப்பு!

பிறப்பு!

ட்வைன் ஜான்சன் என்கிற தி ராக் 1972ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி கலிபோர்னியாவின் ஹேவார்ட் எனும் இடத்தில் பிறந்தார். இவரது குடும்பம் மல்யுத்தத்தை பின்னணியாக கொண்டிருந்தது.

ஆக்லாந்து!

ஆக்லாந்து!

தன் இளம் வயதிலேயே அம்மாவின் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தார் ட்வைன் ஜான்சன். அங்கே ஆக்லாந்தில் ரிச்மண்ட் ரோட் ப்ரைமரி பள்ளியில் படித்து வந்தார்.

ஹவாய்!

ஹவாய்!

பிறகு தனது பத்தாவது கிரேட் படிக்கும் போது ஆக்லாந்தில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் பகுதிக்கு இடம் பெயர்ந்தார். பிறகு, ட்வைன் ஜான்சனின் குடும்பம் பென்சில்வேனியாவிற்கு குடிபெயர்ந்தது.

கால்பந்தாட்ட அணி!

கால்பந்தாட்ட அணி!

தனது கால்பந்தாட்ட திறமையால் யூனிவர்சிட்டி ஆப் மியாமியில் இடம் பிடித்தார். மற்றும் மியாமியின் தேசிய சாம்பியன்ஷிப் அணியிலும் இடம் பெற்றிருந்தார் ட்வைன் ஜான்சன். ஜான்சனுக்கு ஏற்பட்ட ஒரு காயத்தின் காரணத்தால் அணியில் இருந்து விலக நேர்ந்தது.

வருங்கால மனைவி!

வருங்கால மனைவி!

யூனிவர்சிட்டியில் இருந்த போது தான் தனது வருங்கால மனைவி டானி கார்ஸியாவை சந்தித்தார் ட்வைன் ஜான்சன். டானி மியாமியின் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை துவங்கினார். தனது பட்டப்படிப்பு முடித்த பிறகு ட்வைன் கனடாவிற்கு சென்றார். அங்கே சி.எப்.எல்'ல் சேர்ந்தார்.

சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார்!

பிறகு பல தடைகள், தோல்விகள், கடினமான காலங்களை தாண்டி 1996ல் தனது பரம்பரை விளையாட்டான மல்யுத்தத்தில் காலடி எடுத்து வைத்து இன்று, ஹாலிவுட்டின் சுப்பர் ஸ்டார் நடிகராக வளர்ந்து நிற்கிறார் ட்வைன் ஜான்சன் என்ற இயற்பெயர் கொண்டு தி ராக்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life of Actor and Wrestler The Rock AKA Dwayne Johnson!

Life of Actor and Wrestler The Rock AKA Dwayne Johnson!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more