For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்படி வந்தது கருணாநிதிக் இவ்வளவு புகழ்?...

இங்கே கருணநிதியின் கவேரிக்க முதல் காவேரி மருத்துவமனை வரையிலான சிறுசிறு வாழ்க்கை குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

|

கலைஞர் மு.கருணாநிதியாகிய நான்... என்ற வசனத்தை அவர் பதவிப் பிரமானம் செய்வதற்காக மட்டுமே பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார். மற்ற சமயங்களில் தமிழக மக்களுக்கு அவர் உடன் பிறப்பாக மட்டுமே இருந்திருக்கிறார்.

karunanidhi life reveal

தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் தான் கருணாநிதி. அப்படிக்கூட சொல்ல முடியாது. தமிழக அரசியல் வரலாற்றின் பெரும்பகுதியை அவரே வியாபித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய வாழ்க்கை ஏதாவது ஒரு வகையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாகவே இருந்திக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இவர்

யார் இவர்

முத்தமிழ் அறிஞர், கலைஞர், தமிழனத் தலைவர் என்றெல்லாம் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் கருணாநிதி. காவிரி ஆற்றங்கரையில் தொடங்கிய அவரது வாழ்க்கை அவருடைய 95 வது வயதில் மீண்டும் காவேரி என்னும் பெயரில் அமைந்த மருத்துவ மனையிலேயே முடிந்திருக்கிறது. அவர் வாழ்க்கையில் முன்னேறிய விதம் பற்றி சுருக்கமாக பார்த்தாலே நமக்கு மளைப்பு தோன்றும். அந்த அளவுக்கு தன்னுடைய உயர்வுக்கும் தமிழ்நாட்டின் உயர்வுக்கு சேர்த்தே உழைத்தவர். ,

ஊரும் பேரும்

ஊரும் பேரும்

காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிற திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் ஆகியோருக்கு மகனாக 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயரோ தட்சிணாமூர்த்தி.

அரசியல் தொடக்கம்

அரசியல் தொடக்கம்

இளம் வயதிலேயே பல சமூக இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு சமூகப் பணியாற்றத் தொடங்கிய அவர், நீதிக்கட்சியில் தன்னுடைய அரசியல் ஆர்வத்தை வெளிக்காட்டினார். அந்த சமயத்தில் மிகத் தீவிரமடைந்திருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

மாணவர் அணி

மாணவர் அணி

தமிழகத்தில் திராவிடக் கழகத்துக்கான மாணவர் அணியை முதன் முதலாகத் தொடங்கியவரும் இவர் தான். இதுதான் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் அரசியல் மாணவரணி என்று கூட சொல்லலாம்.

முதல் தேர்தல்

முதல் தேர்தல்

தான் முதலில் தன்னுடைய சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிட வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்கான முழு வேலைகளையும் தானே தொகுதியில் முனு்நின்று செய்து கொண்டிருந்த போது, திடீரென அண்ணாதுரை அழைத்து, குளித்தலையில் போட்டியிட வேண்டும் என்று ஆணையிட்டதும் அதை துளியும் மறுக்காமல் உடனே குளித்தலைக்குச் சென்று தேர்தல் வேலைகளைச் செய்து, குளித்தலையில் வெற்றியும் பெற்று முதன்முதலாக சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார்.

தோல்வியே சந்திக்காதவர்

தோல்வியே சந்திக்காதவர்

தொடர்ந்து 13 முறை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர். இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் தோல்வியைக் காணாத வரலாற்று நாயகராகத் திகழ்ந்தவர். தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

தொழில்

தொழில்

பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டாலும், கற்றலில் பேரார்வம் கொண்டதால் தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடி படித்தார். திரைப்படங்களில் கதை, வசனங்கள் எழுதத் தொடங்கிய பின், அவரது கதைகளனைத்தும் விதவை மறுமணம், ஜமீன்தார் முறையை ஒழித்தல், மத பாசாங்குகளை எதிர்த்தல், சுய மரியாதை திருமணம் என சமூக தாக்கங்கள் கொண்டவையாகவே இருந்தன.

வாங்கிய விருதுகள்

வாங்கிய விருதுகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்' வழங்கியது.

தமிழ் பல்கலைக்கழகம், இவரது தென்பாண்டி சிங்கம் என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை' வழங்கி கௌரவித்தது.

தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்' வழங்கி கௌரவித்தார்கள்.

தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி கருணாநிதிக்கு முஸ்லீம் சமூக நண்பர் என்ற பட்டதை வழங்கி பெருமை சேர்த்தது.

செம்மொழி மாநாட்டை உலகமே வியக்கும்படி நடத்தி மொழிக்காவலர் என்று உலகம் முழுதும் அறியப்பட்டார்.

காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனை

95 வயதாகியும் சமூகப் பணியை நிறுத்தமாமல் இயங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே உடல் நிலை சற்று மோசமடைந்ததைத் தொடர்ந்து வீட்டிலேயே மருத்துவக் குழுவினரின் உதவியினால், சிகிச்சை பெற்று வந்த அவர், சில வாங்களுக்கு முன் காவேரி மருத்துவமனைக்குச் சென்று, தொண்டையில் குழாய் மாற்றம் செய்து வந்தார். அதன்பின் கடந்த 28 ஆம் தேதி மாலை திடீரென உடல் நிலை மோசமடைந்ததால், அன்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.

ரத்த அழுத்தம் திடீரென குறைந்த போதும், தொண்டர்களுடைய ஆரவாரத்தால் மீண்டும் மீண்டும் சீரான ரத்த அழுத்த நிலைக்கு வந்து மருத்துவகளையே ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தார். திடீரென கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை மேலும் மோசமடைந்தது. 11 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர், ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10க்கு சூரிய அஸ்தம நேரத்திலேயே இந்த மக்கள் சூரியனும் தன்னுடைய இறுதி அஸ்தமனத்துக்கு தயாராகி, எல்லோரையும் விட்டு விடைபெற்றுச் சென்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

life history of kalaignar karunanidhi

here we disuss about -kaveury to kaveruy hospital- karunanidhi life reveal.
Desktop Bottom Promotion