For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனாதை என்பது ரணமானது, அதை ஒவ்வொரு முறை நினைவூட்டுவது கொடூரமானது - My Story #135

அனாதை என்பது ரணமானது, அதை ஒவ்வொரு முறை நினைவூட்டுவது கொடூரமானது - My Story #135

|

ஞாயிறு பிடிக்காது என கூறும் நபர்களே இருக்க முடியாது. அந்த ஒரு நாளில் தான் நினைத்த நேரம் வரை உறங்க முடியும், நமக்கு பிடித்த வேலைகளை மட்டும் செய்ய முடியும், அதிக நேரம் பொழுதுப் போக்கலாம். ரிலாக்ஸாக இருக்கலாம்.

அதிலும், பள்ளிக் குழந்தைகள் அனைவர்களுக்கும் இந்த ஞாயிறு மிகவும் பிடித்தக் கிழமையாக இருக்கும், என்னைத் தவிர. நான் ஹாஸ்டலில் இருந்துப் படித்து வந்த பெண். என்னுடன் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தவர்கள் அனைவருக்கும் ஞாயிறு என்றால் அவ்வளவு பிடிக்கும்.

சீக்கிரம் எழ வேண்டாம், பயிற்சிகள் செய்ய வேண்டாம், வகுப்புக்கு கிளம்ப வேண்டாம்., நாமாக எழுந்திருக்க நினைக்கும் வரை தூங்கலாம். ஆனால், எனக்கும், என் வாழ்க்கைக்கும் ஞாயிறு தான் பரமவிரோதி. அதற்கு சில காரணங்களும் இருந்தன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை பருவம்!

குழந்தை பருவம்!

அது என்னுடைய குழந்தை பருவம். ஒவ்வொரு ஞாயிறும் அனைவருக்கும் மிக சிறப்பானதாக அமையும். எங்கள் பள்ளியில் வேலை செய்யும் ஆயம்மாக்கள் தான் ஞாயிறுகளில் எங்களை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள். அன்று ஒரு நாள் மட்டும் எங்களுக்கு பிடித்தது போல கலர், கலர் ட்ரஸ் அணிந்துக் கொள்ளலாம், ஸ்டைலாக தலை வாரிக் கொள்ளலாம்.

அனைவருக்கும் பிடித்த ஞாயிறு எனக்கு மட்டும் பிடிக்காமல் போக காரணம். நான் அனாதை என்பதே ஆகும். மற்ற அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரும் வந்து அவரவர் பிள்ளைகளை பார்த்து, மகிழ்ந்து பிடித்தவற்றை வழங்கி செல்வார்கள். ஆனால், எனக்கு?

காத்திருப்பு!

காத்திருப்பு!

ஞாயிறுகளில் மற்றவர்கள் எல்லாம் ப்ளேகிரவுண்ட், லாபி மற்றும் பள்ளி வாசலில் தங்கள் பெற்றோரை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அவர்களது பெற்றோரு தூரத்தில் வரும் போதே.... அப்பா.... அம்மா.... என ஆசையாக கத்திக் கொண்டு ஓடி சென்று கட்டிக் கொள்வார்கள்.

இத்தகைய தருணங்கள் என் வாழ்வில் இல்லாமல் போனதை குறித்து நான் அதிகம் வருந்தியது உண்டு. அதனால் தான் எனக்கு ஞாயிறுகள் பிடிப்பதில்லை.

உறவினர்கள்!

உறவினர்கள்!

எனக்கு யாருமே இல்லை என்றில்லை. எனக்கு தாத்தா பாட்டி, மாமா அத்தை என உறவுகள் உண்டு. ஆனால், அவர்களிடம் இப்படி ஒரு நாள் இருக்கிறது என்பதையே நான் கூறுவதில்லை. கூறினாலும் அவர்கள் வாராவாரம் வருவார்களா? என தெரியாது, அப்படியே வந்தாலும் மற்றவர்கள் தங்கள் குழந்தைகள் மீது காட்டும் அதே அன்பு எனக்கும் கிடைக்குமா என தெரியாது.

கத்தினேன்...

கத்தினேன்...

பல சமயம் நான் என்னுள் மிக சப்தமாக கத்தியுள்ளேன். "ஏன் எனக்கு மட்டும் இப்படி இருக்கிறது? என் வாழ்க்கை மட்டும் ஏன் சபிக்கப்பட்டுள்ளது? நான் என்ன தவறு செய்தேன்? இது என்ன என் தலைவிதியா? என பல கேள்விகள் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கும் சில தருணங்களில்.

அனைவருக்கும் அவரது வாழ்க்கை பாதை என்ன என்பதை சுட்டிக்காட்ட பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு... அதை நானாக தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

பரிசுகள்!

பரிசுகள்!

ஒவ்வொரு ஞாயிறுகளில் என் தோழர்கள், தோழிகளின் பெற்றோர்கள் அன்பு மட்டுமின்றி, நிறைய பரிசுகள், ஸ்நாக்ஸ் தந்து செல்வார்கள். சிலரது பெற்றோர் எனக்கும் சேர்த்து பரிசுகள், ஸ்நாக்ஸ் வழங்கி செல்வார்கள். ஆனால், அந்த சிம்பதி, அனுதாபம் எனக்கு வேண்டாம் என விலகியே இருந்தேன்.

அனுதாபத்திற்கான குறி...

அனுதாபத்திற்கான குறி...

என்னை அனுதாபத்திற்கான அறிகுறியாக சிலர் கண்டனர். முக்கியமாக எனது தோழிகளின் பெற்றோர். அந்த அனுதாபம் எனக்கு பிடிக்கவில்லை என்பதாலேயே... அவர்கள் தரும் பரிசுகளையும் புறக்கணித்தேன். அதற்காகவே இந்த ஞாயிறுகளையும் புறக்கணித்தேன்.

முடிந்தவரை ஞாயிறுகளில் யார் கண்களிலும் படாமல் ஒளிந்துக் கொள்வேன்.

வரிகள்...

வரிகள்...

நான் இல்லாவிட்டாலும், நான் வாங்காவிட்டாலும்... பள்ளி அலுவலகத்தில் எனக்கான பொருட்களை தந்து சென்றுவிடுவார்கள். அதில், நான் எதிர்பார்ப்பது எல்லாம் பரிசோ, உணவுகளோ கிடையாது. எனக்காக, என் நலம் விசாரித்து யாராவது எழுதியுள்ளனரா என்று தேடுவேன். "டூ ஆர்ஃபன் சைல்ட்" என்றே பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும்.

நான் அனாதை, எனக்கு யாருமில்லை என்று வரும் எந்த பரிசும் எனக்கு தேவையில்லை. என்னை யாரவது அவர்கள் மகளாக பார்க்க மாட்டார்களா என்ற ஏக்கம் மட்டுமே என்னுள் நிறைந்திருந்தது.

சிலர்...

சிலர்...

எல்லாருடைய பெற்றோரும் ஒவ்வொரு ஞாயிறும் வந்து செல்ல மாட்டார்கள். குறைந்தபட்சம் மாதம் ஒரு ஞாயிறாவது சிலர் வந்து செல்வார்கள். அவர்களுக்காக நான் என்றும் பரிதாபப்பட்டது இல்லை. அவர்களுக்கு வாழ்க்கையில் பெற்றோரு என்று சொல்லிக் கொள்ளவாவது இருவர் இருக்கிறார்களே.

என்னுடன் பள்ளியில் படித்த சிலரது சகோதர உறவுகளும் ஹாஸ்டலில் தங்கியிருந்தனர். அவர்களுக்குள் ஒரு பெட் நடக்கும். முதலில் யார் தங்கள் பெற்றோரை காண்கிறார்கள் என. அவை எல்லாம் காணும் போது மிகவும் கொடுமையாக இருக்கும்.

ரணம்!

ரணம்!

அவர்களது பெற்றோர் தூக்கி மகிழும் போதும், அள்ளி அணைத்து முத்தமிடும் போதும் ... விரட்டிப் பிடித்து விளையாடும் போதும் என்னுள் ரணம் அதிகரிக்கும். அவற்றை எல்லாம் ஏன் கண்டு வருந்த வேண்டும் என்றே ஞாயிறுகளில் யாருக்கும் தெரியாத இடத்தில் சென்று ஒளிந்துக் கொள்வேன்.

அடம்!

அடம்!

சிலர் அவர்கள் பெற்றோரிடம் அடம் பிடிப்பார்கள். அவர்கள் வாங்கி வந்த பொருட்கள் பிடிக்கவில்லை, அந்த வண்ணம் பிடிக்கவில்லை என்று. மேலும், அவர்கள் சென்ற முறை அவர்களிடம் கூறி, அவர்கள் அதை வாங்கி வரவில்லை எனில் சண்டைப் பிடிப்பார்கள்.

அவர்களிடம் எல்லாம்... அந்த பரிசுகளை காட்டிலும் பெரிய பரிசு தான் உங்களை ஒவ்வொரு ஞாயிறுகளிலும் காண வருகிறது. பரிசிடமே பரிசு கேட்டு சண்டைப் போடவேண்டாம் என கூற விரும்புவேன். ஆனால், அதை நான் கூறினால்... என்னை அனாதை என்றும்... எனக்கு என்ன தெரியும் என்றும் சிலர் திட்டிவிடுவார்களோ என்ற அச்சம் என்னுள் அதிகம் இருந்தது.

இதயம்!

இதயம்!

ஞாயிறுகளின் காலையை விட மாலை மிகவும் ரணமானதாக இருக்கும். பெற்றோர்கள் மீண்டும் சென்றுவிட்டாலும். அவர்கள் விட்டு சென்ற நினைவுகள் ஓரிரு நாட்கள் தொடரும். சிலர், என்னிடம் வந்து அவர்களது பெற்றோரை பற்றி பெருமையாக பேசும் போது ஏக்கம் அதிகரிக்கும். தொண்டையை அடைத்துக் கொண்டு துக்கம் வெளிவர துடிக்கும். அடக்கிக் கொள்வேன்.

இழப்பு!

இழப்பு!

சிலர் அவர்கள் பெறோர் பற்றி என்னிடம் தவறாகவும் கூறுவதுண்டு. அவர்களிடம் எல்லாம்... பெற்றோருடன் முடிந்த வரை நேசமாக பழகுங்கள், அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்றே கூறுவேன்.

அவர்கள்... பெற்றோரின் இழப்பை உணரும் முன்பே, அவர்களுடன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

It is Bad To Be An Orphan. The Worst Part of It Is, Someone Reminds This Everytime!

It is Bad To Be An Orphan. The Worst Part of It Is, Someone Reminds This Everytime!
Desktop Bottom Promotion