மூன்றாம் கணவரின், முதல் மனைவி மகனை காதலித்த சொந்த மகளை கொன்ற தாய் - India's Mysteries!

By: Staff
Subscribe to Boldsky

வருடங்கள் ஓடினாலும் சில வழக்குகளும் அதை சுற்றி பின்னப்பட்டிருந்த மர்மங்களும் என்றும் மறக்க முடியாதவை.

சில முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகளை சுற்றி நடந்த கொலைகளும், அதன் பின்னணியில் போலீஸ் விசாரணையின் போது தெரியவந்த திடுக்கிடும் உண்மைகளும் இந்தியாவை திணறடித்தன.

ஐ.என்.எக்ஸ் என்ற தனியார் ஊடக நிறுவனத்தை தனது மூன்றாம் கணவருடன் துவங்கினார் இந்தியாவின் டாப் 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திராணி.

இவரது மூன்றாம் கணவரின், முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுலும், இந்திராணியின் முதல் கணவருக்கு பிறந்த மூத்த மகளான ஷீனா போராவும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திராணி, தன் பேச்சை கேட்காத மகளை கொடூரமாக கொன்றார்.

2012ல் துவங்கிய இந்த வழக்கு, 2015ல் திருப்புமுனை கண்டது... இன்று வரை இந்த வழக்கு ஒரு முடிவில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷீனா போரா

ஷீனா போரா

அசாம் மாநிலத்தின் குவாஹாட்டியில் பிறந்து வளர்ந்தவர் இந்திராணி. இவருக்கு திருமணம் ஆகுமுன்னரே இரண்டு குழந்தைகள் பிறந்தன என்று கூறப்படுகிறது. இதில் மூத்த மகள் ஷீனா போரா. இளைய மகள் மிகைல் போரா. இந்திராணியின் முதல் கணவர் யார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.

பின்னர் இந்திராணி சஞ்சீவ் கண்ணா என்பவரை இரண்டாவதாகவும், பீட்டர் முகர்ஜி என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்துக் கொண்டார்.

டாப் 50:

டாப் 50:

இந்திராணியின் மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி ஒரு தனியார் தொலைக்காட்சி தலைமை செயல் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்திராணியும், பீட்டரும் 1996ல் ஊடக நிறுவனம் தொடங்கினார்கள். இவர்கள் இருவருக்கும் 2002ல் திருமணம் நடந்தது.

இந்திராணி தனியார் ஊடக நிறுவனம் துவங்கிய சில வருடங்களிலேயே இந்தியாவின் டாப் 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.

விசித்திர காதல்!

விசித்திர காதல்!

பீட்டருடன் திருமணமான பிறகு தனது மகள்கள் ஷீனா மற்றும் மிகைல் மற்றும் உடன் பிறந்தவர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார் இந்திராணி. ஆனால், அப்போது ஷீனாவை தனது மகள் என்று வெளியுலகுக்கு காண்பித்துக் கொள்ளாமல், சகோதரி என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார் இந்திராணி.அப்போது தான் பீட்டரின் முதல் மனைவியின் மகன் ராகுலுக்கும், இந்திராணியின் முதல் கணவர் மூலமாக பிறந்த ஷீனா போராவுக்கும் காதல் மலர்ந்தது.

கொலை!

கொலை!

அண்ணன், தங்கை உறவில் உள்ள இவர்களது காதலுக்கு குடும்பத்தார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திடீரென ஒரு நாள் ஷீனா காணாமல் போனார். ஆனால், இதை மறைத்து இந்திராணி உறவினர்களிடம் ஷீனா அமெரிக்கா சென்றுவிட்டதாக கூறிவிட்டார்.

ஷீனா காணாமல் போய் ஓரிரு வருடங்கள் கழித்து, போலீஸுக்கு ஒரு பெயர் தெரியாத நபரிடம் இருந்து அழைத்து வந்தது. அதில், இந்திராணி தனது மகள் ஷீனாவை உயிருடன் எரித்துக் கொலை செய்து விட்டார் என்று ஒரு நபர் கூறியிருந்தார்.

கண்காணிப்பு!

கண்காணிப்பு!

இந்த மர்மமான போன் காலுக்கு பிறகு, போலீஸ் இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் மற்றும் ஓட்டுனர் ஷியாம் போன்றவர்களை கண்காணிக்க துவங்கினார்கள்.

இரகசியமாக போலீஸ் கண்காணித்து வந்த போதுதான் இந்திராணி தனது ஓட்டுனர் மற்றும் முன்னாள் கணவருடன் சேர்ந்து தனது சொந்த மகளை கொலை செய்த சம்பவம் 2015 ஆகஸ்ட் மாதம் தெரியவந்தது. பிறகு, அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

மயக்க மருந்து!

மயக்க மருந்து!

2012 ஏப்ரல் மாதம் 24ம் தேதி, ஷீனாவை பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவியின் மகன் ராகுல் மும்பையில் இருந்த தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். ராகுல் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, ஷீனாவுக்கு தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயக்கமடைய செய்துள்ளார் இந்திராணி.

ஷீனா மயங்கிய பிறகு, அவரை இரண்டாவது கணவர் சஞ்சீவ் மற்றும் ஓட்டுனர் ஷியாம் உதவியுடன் காரில் தூக்கி போட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து, பிறகு அவரது உடலை தீ மூட்டி எரித்துள்ளனர்.

குழப்பங்கள்...

குழப்பங்கள்...

ஷீனாவை காதலித்ததாக கூறும் ராகுல், அவர் அமெரிக்கா சென்றவுடன் தேடவில்லையா? இந்திராணிக்கு ஏற்கனவே குழந்தைகள் இருப்பது பீட்டருக்கு முன்னாரே தெரியாதா? இது கௌரவ கொலையா? அல்ல தொழில் சார்ந்த பணப் பிரச்சனை காரணமாக நடந்த கொலையா? என்று மர்மங்களும், கேள்விகளும் எழுந்தன.

அவதூறு!

அவதூறு!

சென்ற வருடம்... இந்திராணி சிறப்பு நீதி மன்றத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தனது மகள் ஷீனா போராவை கொலை செய்தது தனது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி தான் என்றும். அவர் தான் குற்றவாளி என்றும் கூறியிருந்தார். ஆனால், பீட்டர் முகர்ஜி தாக்கல் செய்த மனுவில், தனது குற்றத்தை மறைக்க, என் மீது அபாண்டமாக அவதூர் கிளப்பும் வகையில் இந்திராணி போலி புகார் அளிக்கிறார் என்று பீட்டர் பதில் அளித்திருந்தார்.

இந்திராணியின் குழந்தை பருவம்!

இந்திராணியின் குழந்தை பருவம்!

உபேந்திர குமார் மற்றும் துகா ராணி போரா என்ற தம்பதியனருக்கு மகளாக பிறந்தவர் தான் இந்த இந்திராணி. முதலில் பொறி போரா என்ற பெயரிடப்பட்டுள்ளார். பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கும் உள்ளூரில் வசித்து வந்த பூசாரி மகனுக்கும் உறவு ஏற்பட்டு, ஊரைவிட்டு ஓடியதாக தகவல்கள் கூறுகின்றன.

பின்னர் பொறி போரா என்கிற இந்திராணியை மீண்டும் அழைத்து வந்துவிட்டனர்.

சில்லாங்!

சில்லாங்!

1987ல் 12வது படித்துக் கொண்டிருந்த போதுதான், விண்ணு பிரசாத் என்பவர் மீது காதல்வயப்பட்டுள்ளார் இந்திராணி. ஆனால், ஒரு சில மாதங்களில் இவர்களது காதல் முடிவுக்கு வந்துவிட்டது.

பள்ளிப்படிப்பு முடித்து, கல்லூரி பயில சில்லாங் சென்றுள்ளார் இந்திராணி. எங்கே 1988ல் சித்தார்த் தாஸ் என்பவருடன் திருமணம் செய்யாமலேயே உறவில் இருந்துள்ளார் இந்திராணி. அப்போது தான் 1989ல் ஷீனா போரா பிறந்துள்ளார். பிறகு அடுத்த வருடமே மிகைல் போராவும் பிறந்துள்ளார்.

பிரிவு!

பிரிவு!

பிறகு, சித்தார்த் தாஸை பிரிந்த இந்திராணி, சஞ்சீவி இரண்டாவது கணவராக ஏற்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். இதன் பிறகு சஞ்சீவி விவாகரத்து செய்து மூன்றாவது கணவராக பீட்டரை மணக்கிறார்.

2006ம் ஆண்டு தான் ஷீனாவை மும்பைக்கு அழைத்து வந்து கல்லூரியில் படிக்க வைத்திருக்கிறார் இந்திராணி.

2015ம் ஆண்டு, ஷீனாவின் கொலை வழக்கில் கைதான பிறகு, ஷீனா இந்திராணியின் சகோதரி அல்ல, சொந்த மகள் என்ற தகவல் வெளியாகின.

இந்த மர்மமான கொலை வழக்கு இந்தியாவின் குற்ற வழக்கு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

India's Mysteries - Sheena Bora Murder Case!

India's Mysteries - Sheena Bora Murder Case!
Story first published: Tuesday, February 6, 2018, 11:07 [IST]
Subscribe Newsletter