For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மீது திட்டமிட்டு கரிப் பூசுகிறதா ராய்ட்டர்ஸ்... எதற்கு இந்த கபடநாடகம்?

இந்தியா மீது திட்டமிட்டு கரிப் பூசுகிறதா ராய்ட்டர்ஸ்... எதற்கு இந்த கபடநாடகம்?

|

தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு சர்வே ரிசல்ட்டை வெளியிட்டது. பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற மோசமான நாடுகள் என்ற பெயரில் வெளியான அந்த சர்வே ரிசல்ட் இந்தியாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

காரணம், உலகில் பெண்களுக்கு பாதிகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடத்தை கொடுத்திருந்தது அந்த சர்வே ரிசல்ட். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் நடக்கிறது தான். நாள்தோறும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள் தான். பெண்ணடிமைத்தனம் இந்திய சமூகத்தில் அறவே இல்லை என்று யாராலும் கூற இயலாது தான்.

India is The Most Dangerous Country for Women in The World. Is it True or Not

ஆனால், உலகிலேயே பெண்கள் வாழ்வதற்கு பாதிகாப்பற்ற மோசமான நாடு இந்தியா என்பது எப்படி சாத்தியம்? அதிலும், அந்த பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அளவிற்கு நம் நாடு அவ்வளவு மோசமான நிலையில் இல்லை. பெண்களை மிக மோசமாக நடத்தும், கொடுமைப்படுத்தும் நாடுகள் எத்தனையோ உலகில் இருக்கின்றன.

அவற்றை எல்லாம் தாண்டி இந்தியா எப்படி இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தது? எதன் அடிப்படையில் இந்த பட்டியல் உருவானது? இந்த சர்வேவில் எத்தனை கோடி பேர் பங்கெடுத்துக் கொண்டனர்? தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் வெளியிட்டது போலவே இந்தியா அவ்வளவு மோசமான நாடா? அல்லது இது சித்தரிக்கப்பட்டதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிற நாடுகள்..

பிற நாடுகள்..

பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் போர் நடத்தி, குண்டு வெடிப்பு சம்பவங்கள் மூலம் கொத்துக் கொத்தாக அவர்களை கொன்று குவித்த சிரியா, ஆப்கானிஸ்தானை விட இந்தியா பெண்களுக்கு எதிரான மோசமான நாடாக மாறிவிட்டதா? தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் வெளியிட்ட இந்த சர்வே ரிசல்ட் அனைவரும் ஏற்றுக் கொள்வது போல இல்லை என்பதே உண்மை.

எத்தனை?

எத்தனை?

சரி! இந்தியா உலகிலேயே பெண்களுக்கு பாதிகாப்பற்ற மோசமான நாடு என்று குறிப்பிடும் இந்த சர்வேவில் எத்தனை கோடி பேர் பங்கெடுத்துக் கொண்டார்கள்? எதன் அடிப்படையில் இந்த சர்வே ரிசல்ட் வெளியானது? பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து ஆராயும் நிபுணர்கள் என்று கூறப்படும் வெறும் 548 பேரால் உருவாக்கப்பட்ட சர்வே தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விடையரியப்படாத கேள்விகள்...

விடையரியப்படாத கேள்விகள்...

1) பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளை ஆராயும் நிபுணர்கள் என்று கூறப்படும் அந்த 548 பேர் யார்?

2) அந்த 548 பேர் கொண்ட நிபுணர்களின் அடையாளம் / பெயர் / தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருப்பது ஏன்?

3) வெறும் 548 பேரின் கருத்தை அடிப்படையாக கொண்டு எப்படியான, எந்த வகையிலான சர்வேவையும் வெளியிடலாமா? இது போதுமானதா?

4) மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் வகையிலான ஆய்வுகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டனவா?

5) பெண்களுக்கு எதிரான தாக்குதல், பாலியல் வன்முறை என்பது உலகளாவிய அத்தனை நாடுகளிலும் நடந்துக் கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம்.

லண்டன்!

லண்டன்!

லண்டன் மேயர் அலுவலகம் மற்றும் குற்றப்பிரிவு காவல் தகவலின் படி, லண்டனில் மட்டுமே (ஒரு நகரத்தில்) சென்ற 2017ம் ஆண்டு கட்டாயப்படுத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 20% அதிகரித்துள்ளது.

ரேப் க்ரைசிஸ் செண்டர் கடந்த 2015ல் வெளியிட்ட அறிக்கை தகவலின் படி பார்த்தால்.. ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் 85,000 பெண்களும், 12,000 ஆண்களும் கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாகப்பட்டது ஒரு மணி நேரத்தில் 11 பேர் கற்பழிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த தகவலறிக்கை. ஆனால், இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் கணக்கை கொண்டு பார்த்தால் ஒரு மணி நேரத்தில் 4 பேர் பாலியல் குற்றத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வீதம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிநபர் எண்ணிக்கை!

தனிநபர் எண்ணிக்கை!

உலகளாவிய விகிதத்தில் கற்பழிப்பு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று 2010ல் வெளியான தனிநபர் எண்ணிக்கை கணக்கு வைத்து பார்த்தால்..

(வருடத்திற்கு, புள்ளிகள் இலட்சத்தில்)

-> இந்தியா - 1.8

-> ஜெர்மனி - 9.4

-> யு.கே - 17

-> நார்வே - 19.2

-> அமெரிக்கா - 27.4

-> ஸ்வீடன் - 63.5

இதில் முதல் இடத்தில் இருப்பது யார்?

பிறகு தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் வெளியிட்ட பட்டியலில் மட்டும் இந்தியா எப்படி முதல் இடத்தை பிடித்தது?

எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கவே இல்லை என்று யாரும் கூறவில்லை. ஆனால், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் வெளியிட்ட சர்வே அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அளவிற்கு இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்பது ஒப்புக்கொள்ள முடியாதது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு தகுந்த தண்டனைகள் இல்லை தான். ஆகையால் தான் தவறுகள் மேலும், மேலும் தொடர்ந்து அனுதினமும் நடக்கும் வாடிக்கையாகிவிட்டது என்பதும் மறுப்பதற்கு அல்ல.

ஆனால், உலகளாவிய மற்ற அறிக்கைகளின் தகவல், எண்ணிக்கை வைத்து பார்த்தால்... இந்தியா தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ள சர்வே ரிசல்ட் அளவிற்கு மோசமான நாடு இல்லை என்பது அறிய வருகிறது.

இந்தியாவிற்கு எதிரான...

இந்தியாவிற்கு எதிரான...

தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேசன் இந்த சர்ச்சைக்குரிய சர்வே ரிசல்ட்டை வெளியிட்டதற்கு பின், பல பக்கவிளைவுகளை சந்தித்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய தகவல் இணையதளமான விக்கிப்பீடியாவில் தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் அமைப்பு என்ற தகவல் பதிவாகியுள்ளது.

இந்த சர்வே அறிக்கையானது முழுக்க, முழுக்க இந்தியாவிற்கு எதிராக செயற்படும் அமைப்புகளால் உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.

ஆனால், இதுவரையிலும் இந்த சர்வே அறிக்கைக்கு எதிராக இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் எந்த நடவடிக்கையும், கண்டனமும் பதிவு செய்யவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

India is The Most Dangerous Country for Women in The World. Is it True or Not

As Per Recent Survey India is The Most Dangerous Country for Women in The World. Is it True or Not, How come they say, and In Which Basis They Pointed India in The Top Place.
Desktop Bottom Promotion