For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒற்றைப் புகைப்படத்தால் நின்றுப் போன திருமணம் - My Story #128

ஒற்றைப் புகைப்படத்தால் நின்றுப் போன திருமணம் - My Story #128

|
Impact of party Life in Marriage - My Story!

நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் தென் தமிழகத்தின் ஒரு டவுன் பகுதி தான். கல்லூரி படிக்கும் வரை மட்டுமல்ல, நான் சென்னையில் வேலை செய்து வந்த வரையிலும் கூட நான் பெரிதாக மாடர்ன், கீடர்ன் என வாழ்ந்தது இல்லை.

சென்னையில் நான் மூன்றாண்டு காலம் வேலை செய்து வந்தேன். பிறகு, கண்டிப்பாக ஒரு பிரேக் வேண்டும், ஒரே இடம், ஒரே பிராஜக்ட் என போரடிக்கத் துவங்கியது. வீட்டில் திருமண ஏற்பாடு என காரணம் கூறி வேலையை ரிசைன் செய்தேன்.

பிறகு, சொந்த ஊருக்கு சென்று இரண்டு மாத காலம் நன்கு ஓய்வெடுத்தேன். பெற்றோர், தோழர்கள், தோழிகள், உறவினர், அக்கம் பக்கத்து வாண்டுகளுடன் நாட்கள் நன்கு கழிந்தன.

பிறகு, வேலை தேட துவங்கினேன். ஆனால், நான் எதிர்பார்த்தது போல, மீண்டும் வேலை சீக்கிரமாக கிடைத்திடவில்லை. சென்னையில் நான் அப்ளை செய்த பல கம்பெனிகளில் இருந்து இன்டர்வியூவுக்கு கூட அழைக்கவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோதனைக் காலம்...

சோதனைக் காலம்...

அட! இருந்ததும் போச்சே... பேசாம அதே வேலையில இருந்திருக்கலாமோ என தோன்ற ஆரம்பித்தது. வீட்டில் நான் வேலைக்கு போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்ற போதிலும், சொந்தக் காலில் நிற்க வேண்டும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது என இலட்சியமாக இருந்தது. எனவே, சோர்வுறாமல் மீண்டும், மீண்டும் பல கம்பெனிகளுக்கு வேலைகக்க அப்ளை செய்துக் கொண்டே இருந்தேன்.

பெங்களூர்!

பெங்களூர்!

அப்போது தான் என் நண்பன் ஒருவன், சென்னையில் ஏன் வேலை தேடுகிறாய், பேசாமல் பெங்களூர் வந்துவிடு. இங்கே நிறைய வாய்ப்புகளும் உள்ளன. வெயிலும் குறைவு என கூறினான். வெயில் பெரிய காரணம் இல்லை எனிலும், வேலை எனக்கு அவசியமாக இருந்தது. ஏன் இந்த யோசனை எனக்கு முன்னவே தோன்றவில்லை என என்னை நானே கேட்டுக் கொண்டேன். புதிய இடம், புதிய அனுபவம், நிறைய வேற்று மாநில ஆட்களுடன் பழகும் வாய்ப்புகள் கிடைக்கும் என உடனே ஓகே சொன்னேன்.

இரண்டு வாரம்!

இரண்டு வாரம்!

அந்த நண்பனே இரண்டு வாரத்தில் ஒரு கம்பெனியில் ஓபனிங் இருக்கிறது என்றும், அங்கே அவனுக்கு தெரிந்தவர் மேனஜர் போஸ்டில் இருக்கிறார். இண்டர்வ்யூ மட்டும் அட்டண்ட் செய்தால் போதும் வா என அழைத்தான். எதுப் பற்றியும் யோசிக்கமால் கிளம்பிவிட்டேன். வேலையும் கிடைத்தது.

புதிது!

புதிது!

முதல் ஓரிரு மாதங்கள் கொஞ்சம் சிரமமாக இருந்தது. புதிய இடம், புதிய ஆட்கள் என யோசித்தவள், புதிய மொழி என்பதை யோசிக்கவில்லை. கன்னடம் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனாலும், பெங்களூரில் தமிழ் பேசினாலே பெரும்பாலான இடங்களில் மக்கள் புரிந்துக் கொள்வார்கள் என்பதால் போகப்போக கொஞ்சம் உதவியாகவும், எளிதாகவும் செட்டானது பெங்களூர்!

பார்ட்டி!

பார்ட்டி!

கார்டன் சிட்டி என்பதே பெங்களூரின் அடைமொழி. ஆனால், அது மெல்ல, மெல்ல ஐடி சிட்டியாக முழுமையாக மாறிவிட்டது என்பது வேறு கதை. இந்த ஐடியின் வருகை கர்நாடகத்திற்கு பெருமளவு வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியில் உதவினாலும். கலாச்சார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பதே உண்மை.

பப்புகள்!

பப்புகள்!

இந்திரா நகர், கோரமங்களா, எம்.ஜி. ரோடு (மகாத்மா காந்தி சாலை) என பல பகுதிகளில் பப்புகளின் இராஜ்ஜியம் குவிந்தவண்ணம் இருக்கும். வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து, சனிக்கிழமை இரவு வரை பார்ட்டிகள் தெறிக்கும். ஆரம்பத்தில் எனது டீமில் இருக்கும் நபர்கள் இந்த பார்ட்டிகள் பற்றி பேசும் போது திரும்பி, வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவேன்.

தலை திரும்பினாலும், காதுகளுக்கு அவர்கள் பேசுவது கேட்கத்தானே செய்யும்.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

கொஞ்சம், கொஞ்சமாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கேட்டு பார்ட்டி, பப்புகள் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. சிலர் பார்ட்டி, பப் என்பவை சோசியலிச கல்ச்சர் என கூறி ஈர்ப்பை அதிகரிக்க செய்தனர். ஒரே ஒரு வாழ்க்கை. இதை ட்ரை பண்ணிப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது என கருதி, ஒரு முறை போய் தான் பார்ப்போம் என நானும் என் பெங்களூர் நண்பர்கள், தோழிகளுடன் பப் செல்ல ஆரம்பித்தேன்.

முடிவிலி!

முடிவிலி!

ருசிப் பார்த்த பூனையின் ஆசை விடாது என்பார்களே., அப்படி தான் ஆனேன் நானும். ஒருமுறை சென்று வந்ததும், அதுவரை இருந்த அச்சம் என்னைவிட்டு அகன்றுவிட்டது. பிறகு மாதம் ஒருமுறை என்ற கணக்கில் துவங்கி, ஒவ்வொரு வாரமும் பப் செல்லும் வாடிக்கை வந்தது. குடிப் பழக்கம் இல்லை எனிலும், மாக்டெயில் பழக்கம் அதிகரித்தது. ப்ரீசரை வெறும் ஜூஸ் என சொல்லி குடிக்க ஆரம்பித்தேன்.

என்ஜாய்!

என்ஜாய்!

வாழ்க்கையை நான் அதிகமாக அனுபவித்தது அந்த நாட்களில் தான். அந்த ஒன்றைரை வருடத்தில் பார்ட்டி அனிமல் லிஸ்ட்டில் பெயர் சேரும் அளவிற்கு பார்ட்டிகள் சென்று வந்திருப்பேன். வாழ்க்கை இப்படியாக சென்றுக் கொண்டிருக்க. அப்பா திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். அப்போது எனக்கு வயது 26 இருக்கும்.

திருமணம் செய்துக் கொள்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. சரி என தலை ஆட்டினேன்.

வரன்!

வரன்!

ஓரிரு மாதங்கள் கழித்து, ஒரு நல்ல வரன் வந்துள்ளது. அடுத்த வாரம் அவர்கள் பெண் பார்க்க வருகிறார்கள். லீவ் போட்டு வந்துவிடு என அப்பா கூறினார். எல்லாம் நல்லப்படியாக முடிந்தது. மணமகன் வீட்டாருக்கும் என்னை மிகவும் பிடித்துப் போனது. எனக்கும் அவரைப் பிடித்திருந்தது.

பெண் பார்த்து சென்ற போதே, இருவரும் மொபைல் என் பரிமாறிக் கொண்டோம்.

மீண்டும் சென்னை...

மீண்டும் சென்னை...

அவர் சென்னை என்பதால் மீண்டும் பணியிட மாற்றம் பெற்று சென்னை போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. நாங்கள் இருவரும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால் செய்து பேசிக் கொள்வோம். வீட்டில், நிச்சயதார்த்தத்திற்கு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிளாக்!

பிளாக்!

ஒருநாள் எப்போதும் போல ஃபேஸ்புக்கில் அவருக்கு மெசேஜ் செய்ய சென்றபோது, மெசேஜ் அனுப்ப முடியவில்லை. பிறகு தான் எனது பிரஃபைல் பிளாக் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். பிறகு, கால் செய்ய முற்பட்டேன், நான்கைந்து முறை அழைத்தும் கால் எடுக்கவில்லை. பின் அதைப் பெரிதுப்படுத்தாமல் விட்டுவிட்டேன்.

மாலை...

மாலை...

மாலை அப்பா கால் செய்தார், எடுத்த எடுப்பிலேயே நீ வேலை செஞ்சு கிழிச்சது எல்லாம் போதும், உடனே ஊருக்கு வா என்று திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.ஏன் என்று நான் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய காரணம் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பிறகு, தான் என் பிரஃபைல் பிளாக் ஆனதற்கான காரணமும், என் அழைப்பை அவர் ஏன் ஏற்கவில்லை என்றதும் புரிந்தது.

போட்டோ!

போட்டோ!

என்னை பெண் பார்த்து சென்ற மணமகன், என் படத்தை அவரது நண்பர் ஒருவருக்கு காட்டியுள்ளார். அவர் என்னை எங்கோ பார்த்த்து போல இருக்கிறது என கூறி பிறகு நிறையவே யோசித்துள்ளார். அப்போது தான், என் புகைப்படம் ஒன்று நான் பரவலாக சென்று வந்த பப் ஒன்றும் முகநூல் பக்கத்தில் பதிவானது குறித்து அறிய வந்தேன். அந்த படத்தை தனது நண்பர் மூலம் கண்டு தான், திருமணத்தை நிறுத்தி இருக்கிறார் மணமகன்.

இடி!

இடி!

பிறகு, நான் எத்தனயோ கூறியும், கெஞ்சியும் கூட அப்பா என்னை வேலைக்கு அனுப்ப அனுமதிக்கவில்லை. சில மாதங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தேன்.

இடையே பலமுறை அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டும், அவர் என்னுடன் சரியாக பேசவில்லை. எப்படியோ அந்த பப் முகநூல் பக்கத்தின் அட்மினுக்கு மெசேஜ் செய்து எனது படங்களை நீக்கிவிட்டேன். ஆனால், அதனால் உண்டான கசப்பான அனுபவங்களை என்னால் வாழ்வில் இருந்து நீக்கவே முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Impact of party Life in Marriage - My Story!

Impact of party Life in Marriage - My Story!
Desktop Bottom Promotion