Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
உங்கள் நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் பொழுதுபோக்குகள்!
தொழிலை தொடங்கி அதில் வெற்றி பேர் விரும்புவது பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஆசை தான்; உங்கள் நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் பொழுதுபோக்குகள் பற்றி இங்கு படித்து அறியலாம்.
தொழிலை தொடங்கி அதில் வெற்றி பேர் விரும்புவது பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஆசை தான்; ஒரு நிறுவனத்தை தொடங்கி தொழிலதிபர் ஆக நினைக்கும் ஆண்கள் சில விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்!

ஒவ்வொரு நிறுவனமும் சிறப்பாக இயங்க, நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் புத்துணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். அப்படி எந்தவொரு நிறுவனத்தின் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க உதவும் சில பொழுதுபோக்குகள் பற்றி இங்கு படித்தறிவோம்..!

நடனம்!
நடனம் என்பது ஒரு மிக முக்கியமான பொழுதுபோக்காகும்; நடனக்கலையில் ஈடுபடுவர்களிடம் முழுமையான அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இருப்பதை நம்மால் அறிய இயலும். மேலும் நடனம் ஒரு நிறுவனத்தில், பொழுதுபோக்காக மேற்கொள்ளப்படும் பொழுது, அது அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் புத்துணர்வை ஏற்படுத்தி, நிறுவனத்தின் உற்பத்தித்திறனை மிக எளிதாக அதிகரித்து விடுகிறது.

யோகா
யோகா என்றால், தியானம் செய்வது அல்லது உடற்பயிற்சி வகைகளில் வரக்கூடிய ஒன்று என்று எண்ணினால் அது சரியல்ல. யோகா என்பது மனிதனின் உற்பத்தித்திறனை பெருக்கக் கூடிய ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்காகும். இதை ஒரு நிறுவனம் சரியாக பின்பற்றினால், அதன் உற்பத்தித்திறன் அதிகரிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் இது உங்கள் உடல் நலனை மேம்படுத்தவும் பெரிதும் உதவும்.

தோட்டக்கலை
ஒரு நிறுவனம் தோட்டக்கலையை, தனது பொழுதுபோக்காக மேற்கொள்ளுமானால், அங்கு உற்பத்தித்திறன் பெருகி இருப்பதை நம்மால் உணர இயலும். தோட்டக்கலையை மேற்கொள்வதால், நிறுவனத்தின் சூழல் அழகானதாக மாறி, அது அனைவரும் நேரம் செலவிட விரும்பும் ஒரு இடமாக மாறிவிடுகிறது; இந்த மாற்றம் நிறுவனத்தின் உற்பத்தித்திறனை எளிதாக உயர்த்திவிட உதவுகிறது. மேலும் இது சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் ஒரு செயலாகும்.

ஓவியம் வரைதல்
ஓவியம் வரைவதும் அதற்கு வண்ணம் தீட்டி மகிழ்வதும் எந்தவொரு மனிதருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. குழந்தைப்பருவத்தில் முதன் முதலாக அனைவரும் படித்த கலை.
ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் என்பது ஒரு மனிதரின் கற்பனைத்திறனையும், ரசனையையும், சிந்திக்கும் ஆற்றலையும் வளர்க்கக் கூடிய ஒன்று. அந்த வகையில் உங்கள் நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க இதைவிடவும் சிறந்த பொழுதுபோக்கு வேறெதுவும் இல்லை என்றே கூறலாம்.

மலையேற்றம்
இந்தக் காலத்தில் ட்ரெக்கிங் - ஹைக்கிங் என்று சொல்லக்கூடிய மலையேற்ற செயல்கள் பெரும்பாலான மக்கள் விரும்பக்கூடிய ஒன்றாய் விளங்கி வருகிறது. அதை உங்கள் நிறுவனத்தின் பொழுதுபோக்காக மேற்கொண்டால், அது மனதிற்கு மகிழ்ச்சி - தன்னம்பிக்கை, உடலுக்கு புத்துணர்வு, மூளைக்கு சுறுசுறுப்பை வழங்கி உற்பத்தித்திறனை எளிதில் அதிகரிக்க உதவும்.

படித்தல்
"கல்விக் கரையில கற்பவர் நாள் சில" எனும் வாக்கிற்கு ஏற்ப கற்பதற்கு எல்லை என்பதே இல்லை. உங்கள் நிறுவனத்தில் கற்றலை ஒரு பொழுதுபோக்காக மேற்கொள்ளும் பொழுது, அது உங்களின் அறிவை அகண்டமாக்கி, விசாலமான பார்வையை அளித்து, அதிக உற்பத்தித்திறனை உருவாக்கும் ஆற்றலை உங்களுக்கு அளிக்க உதவுகிறது.

போக்கர்
இது கார்டுகளை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு சூதாட்ட வகையாக உங்களுக்கு தோன்றினாலும், ஒரு நிறுவனத்தில் இது விளையாட்டாக, ஒரு பொழுதுபோக்காக மேற்கொள்ளப்படும் பொழுது அது நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும்.

நடித்தல்
நடித்தல் கலையை நிறுவனம் தனது பொழுதுபோக்காக மேற்கொண்டால், அது பணியாளர்களின் திறமையை தெளிவாக காட்டி, தனித்துவ திறன் கொண்டவர்களை எளிதாக பிரித்தெடுக்க உதவும். இத்தகைய நபர்களை கூட்டாக ஒரு வேலையில் அமர்த்தும் பொழுது, அது நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது.

அலங்காரம்
அலங்காரக் கலையை நிறுவனத்தின் ஊழியர்கள் மேற்கொள்ளும் பொழுது, அது நிறுவனத்தை அழகுபடுத்த உதவுவதோடு, பணியாளர்களின் கற்பனா வளத்தை அதிகரிக்கவும் உதவும். அலங்கரிப்பதை ஒரு வேலையாக தராமல், ஒரு பொழுதுபோக்காக, ஒரு போட்டியாக மேற்கொள்ளுதல் நல்லது.

நீச்சல்
நீச்சல் என்பது ஒரு ஆழமான ஆற்றலை மனிதர்களுக்கு தரக்கூடிய, ஓர் அற்புத பொழுதுபோக்கு ஆகும். நிறுவனம் நீச்சலை தனது பொழுதுபோக்காய் மேற்கொள்ளும் பொழுது, அங்கு பணிபுரியும் நபர்கள் தன்னம்பிக்கை, ஆற்றல், சிறந்த உடலமைப்பு மற்றும் நலம் பெற்று புத்துணர்வுடன் திகழ்வர். இது நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும்.

சமைத்தல்
சமைத்தல் என்பது மனதிற்கு திருப்தி அளிக்கும் ஒரு பொழுதுபோக்கு. அதை நிறுவனத்தில் மேற்கொள்ளும் பொழுது, அது அனைவரிடத்திலும் ஒருவித அன்னியோன்னியத்தை ஏற்படுத்தி, ஒற்றுமையை உருவாக்குகிறது. ஒன்றுபட்ட எந்தவொரு நிறுவனமும் அதீத உற்பத்தி திறனை வெளிப்படுத்தி, வெற்றிக்கனியை தட்டிப்பறிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

இசை
இசைக்கு மயங்காத உயிர்களே இந்த பூவுலகில் இல்லை எனலாம். அந்த வகையில் மனித மனம் பதற்றம், வேலைப்பளு போன்றவற்றிலிருந்து விடுபட்டு, மனமகிழ்ச்சியுடன் பணிபுரிந்து பணியை செம்மையாக முடிக்க இசை பெரிதும் உதவும். நிறுவனத்தில் இசையை பெரும்பாலான நேரத்தில் ஒலிக்கவிட்டு பணியை மேற்கொள்ளும் பொழுது, அது சூழலை இலகுவாக்கி, புத்துணர்வை காற்றில் பரப்பி, உற்பத்தித்திறனை கூட்ட உதவுகிறது.

நகைச்சுவை
"வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப்போகும்" என்ற மொழிக்கு இணங்க நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களை மகிழ்ச்சிப்படுத்த நகைச்சுவை நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்ற சில செயல்களை மேற்கொள்ளலாம். இது பணியாளர்களை ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வைப்பதுடன், ஒட்டுமொத்த நிறுவனத்தின் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க உதவுகிறது.

வீடியோ கேம்கள்
வீடியோ கேம்களை நிறுவனத்தின் பொழுதுபோக்காக மேற்கொள்ளும் பொழுது, அது மனதை வேலைப்பளுவிலிருந்து திசைதிருப்பி மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும் இது நிறுவன ஊழியர்களின் சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது; அவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

எழுதுதல்
எழுதுதல் என்பது மனிதர்களின் எண்ணங்களை தெளிவுபடுத்த உதவும் ஒரு சிறந்த பொழுதுபோக்காகும். இதை நிறுவனத்தில் மேற்கொண்டால், ஊழியர்களின் மனநிலை குறித்து எளிதில் அறிய இயலும்; அதன்படி அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்து நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். மேலும் இது நிறுவன மாந்தர்களின் கற்பனை வளத்தை அதிகரிக்கவும், சிந்தனை ஆற்றலை தூண்டவும் உதவுகிறது.

ஒரு கல்லில் இரு மாங்கனி!
இந்த பொழுதுபோக்குகளை அல்லது இவற்றில் சிலவற்றை போட்டிகளாக, விளையாட்டுகளாக நடத்தி, அதில் வெற்றி பெறுவோருக்கு பரிசளித்து ஊக்குவிக்கும் பொழுது, நிறுவனத்தின் உற்பத்தித்திறனுடன், பணியாளர்களின் மனமும் மகிழ்ச்சி கொண்டு, அவர்தம் மனதில் விசுவாச குணமும், நிறுவன வளர்ச்சியை பற்றிய எண்ணமும் பெருகும்.
இது "ஒரு கல்லில் இரு மாங்கனி" போல், பல வகையில் பொழுதுபோக்கு செயல்கள் நிறுவன வளர்ச்சிக்கு உதவும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
மேற்கண்ட பொழுதுபோக்குகளை ஒரு நிறுவனமாயினும், தனிமனிதர்களாயினும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்வார்களானால், அவர்தம் வாழ்க்கை புதுப்பொலிவுடன், போர் அடிக்காததாக விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உண்மைதானே நண்பர்களே!?



Click it and Unblock the Notifications











