அலுவலக வேலையின் போது இதை அவசியம் கவனிங்க! my story #228

Posted By:
Subscribe to Boldsky

ஒன்றை இழந்து இன்னொன்றை பெற வேண்டும் என்ற நியதி யாருக்கு பொருந்துகிறதோ எனக்கு நிச்சயமாக பொருந்தும். இது யதார்த்தாம் தானே எல்லா இடங்களிலும் நடப்பது தானே என்று போகிற போக்கில் எல்லாரும் கடந்து சென்று விடுகிறார்கள் ஆனால் என்னால் அப்படி கடந்து செல்ல முடியவில்லை.

இதனாலேயே கூட்டத்திலிருந்து தனித்து விடப்படுகிறேன். அந்த கூட்டத்திலும் சேர முடியாமல் தனித்து வாழ்கிற இடத்திலும் வெறுமையை மட்டும் சம்பாதித்து கிட்டத்தட்ட இறுதலைக்கொள்ளி பாம்பு போல என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. காவிரி, ஸ்டெர்லைட்,ஐபில்ன்னு ஊர்ல என்னென்னவோ நடந்துட்டு இருக்கு அதையெல்லாம் தாண்டி என் பிரச்சனையப் பத்தி யாருக்கும் எந்த அக்கறையும் இருக்காது ஆனாலும் ஒரு ஆறுதலுக்காக இத சொல்றேன் என்றே தன் மின்னஞ்சலை துவங்கியிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என் உலகம் :

என் உலகம் :

பெரிதாக வசதி வாய்ப்பெல்லாம் இல்லை முதல் தலைமுறை பட்டதாரி நான் படித்து முடித்ததும் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது. இதுவரை பார்க்காத உலகம் ஐடி துறையில் பணிகிடைத்தது.

வழக்கமாக சென்று கொண்டிருந்த வாழ்வில் ஹைதிராபத் பாஸ் என்ற பெயரில் ஒரு தொல்லை வந்தது.

புது பாஸ் :

புது பாஸ் :

வந்தவர் எங்கள் டீமின் நேரடியாக கண்காணிக்கிற பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இவர் வந்ததும் எங்கள் டீமின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும் சென்னை அலுவலகத்தில் இருந்த தலைமை பொறுப்பாளருக்கு பிடிக்கவில்லை. எங்கள் டீமை அவர் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டியிட துவங்கினார்.

மறைமுகமாக இருவருக்கும் போர் துவங்கியது.

வேலை :

வேலை :

அலுவலகத்தில் அவர் வந்த மூன்று மாதங்கள் மிகத் தீவிரமாய் வேலை பார்த்தோம். எழுந்து போக கூட நேரமிருக்காது. அதன் பின் ஒருமாதம் அவர் ஊருக்குச் சென்றுவிட்டார். இதன் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பமானது ஹைதிராபாத்திற்கு சென்றவர் ப்ராஜெக்ட் ஃபாலோ அப் என்ற பெயரில் தினமும் நடக்கிற அப்டேட் எல்லாம் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதன் பிறகு அது தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள்,ரிவியூ என்று எங்கள் பேச்சு தொடர்ந்தது.

வேலையையும் தாண்டி :

வேலையையும் தாண்டி :

ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென ஒரே பிரசர் ஃபேமிலி வொர்க் க்ளைண்ட்டுனு எவ்ளோ தான் சமாளிக்கிறது பேசமாக எங்கயாவது போய் செத்துடலாமான்னு இருக்கு மேலிடத்துல பாலிடிக்ஸ் பண்றாங்க இந்த ப்ராஜெக்ட் சரியா முடியலன்னா என் வேலையே காலி. அதனாலேயே இத முடிக்க விடாம செய்றாங்க என்று சொன்னார்.

அப்படி புலம்பும் போது நம் வாய் சும்மா இருக்குமா?

ஆறுதல் :

ஆறுதல் :

அப்படி அவர் சொன்னதுமே எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. எங்களுடைய பாஸ் அதுவும் வெளியூரில் பணியாற்றுக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டிற்கு எல்லாம் சென்று வருகிறார்.

அதுவும் அவர் வந்தாலே சென்னை அலுவலகமே குதூகலித்து தீவிரமாக வேலைப்பார்க்கிறது. சென்னையில் இருக்கும் பாஸ் முதற்கொண்டு எல்லாரும் அவருக்கு மரியாதை செய்கிறார்கள் அப்படிப்பட்ட உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் என்னிடத்தில் அதுவும் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் மட்டுமேயான என்னிடத்தில் பேசுகிறார் என்றாலே எவ்வளவு பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டேன்.

அதனால் அவருடைய புலம்பலை கேட்கும் போதெல்லாம் கவலப்படாதீங்க சார். இந்த ப்ராஜெக்ட்ட நம்ம சக்சஸ் பண்ணி காமிக்கலாம் என்று சொல்வேன்.

பேரைச் சொல்லியே கூப்பிடு :

பேரைச் சொல்லியே கூப்பிடு :

எங்கள் பேச்சு வேலையைத் தாண்டி பல விஷயங்களை விவாதிக்க ஆரம்பித்தோம். பேச்சில் வித்யாங்கள் தெரிய ஆரம்பித்தது செல்லப்பெயர்களை சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தார்.

அசௌகரியமாக உணர்ந்ததால் வேண்டாமே என்று முதலில் சொன்னேன். பிறகு அது பேச்சுவாக்கில் அப்படியே வந்து விடுகிறது. நீ ஏன் இன்னும் என்னை சார் சார் என்று கூப்பிடுகிறாய் பேரைச்சொல்லியே கூப்பிடு என்று ஆரம்பித்தார்.

நிறைய அன்பு :

நிறைய அன்பு :

கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் பேச்சு அலுவலக விஷயத்தையே பேச மறந்து நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம். இருந்தும் ஒரு பாஸ் போன் செய்யும் போது எப்படி எடுக்காமல் இருப்பது என்ற தயக்கத்திலேயே தான் பல முறை போனை அட்டெண்ட் செய்வேன்.

அடிக்கடி இன்னும் சொல்லப்போனால் தினமும் போன் வைக்கும் போதெல்லாம். இப்பதாண்டா கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருக்கு, இதுவரைக்கும் மனசுல இருந்த விஷயத்த எங்கயும் ஷேர் பண்ணிக்க முடியாம ரொம்ப சிரமப்பட்டேன்.

இப்போதான் நீ கிடச்சுட்டல்ல ரொம்ப நிம்மதியா இருக்கு. இதுக்கெல்லாம் உனக்கெ என்ன கைமாறு செய்யப்போறேனோ என்றும் சொல்வார்.

 மெயில் :

மெயில் :

புகைப்படங்களை எல்லாம் பரிமாறிக் கொள்ளத் துவங்கியிருந்தோம். இப்போது பாஸ் என்ற இடத்தை கடந்து நண்பர் அதுவும் நெருங்கிய நண்பர் என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டிருந்தார்.எதோ ஒரு டாக்குமெண்ட் அனுப்பச் சொன்னார்.

ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை. சரி மெயில் பாஸ்வேர்ட் கொடு நானே ஒப்பன் பண்ணி பாத்துக்குறேன் என்று சொல்லி வாங்கிக் கொண்டார்.

அதை வெளியில் பகிரலாமா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. பாஸ் தானே... அதுவும் மிகவும் நெருங்கிய தோழனாயிற்றே எப்படி கொடுக்காமல் இருப்பது.

 சென்னை பாஸ் காலி :

சென்னை பாஸ் காலி :

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து ஹெச் ஆர் என்னை அழைத்துப் பேசினார். இங்கே எதாவது பிரச்சனை என்றால் எங்களிடம் சொல்ல வேண்டியது தானே எதற்கு மெயின் ஆபிஸ் வரைக்கும் போறீங்க என்று கேட்டார்.

எனக்கா? பிரச்சனையா? அப்படியொன்றும் இல்லையே என்றேன ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவேயில்லை ஒரு வாரம் லீவ் எடுத்துக்கோங்க என்று சொல்லி ஒரு வாரம் விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

என்ன பிரச்சனை என்னை ஏன் விடுமுறை எடுக்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டும் நீங்க தான நம்ம பாஸ் பத்தி கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கீங்க நல்ல மனுஷன் மேடம் அவரு இன்னும் ஐஞ்சு வருசத்துல ரிட்டையர்டு ஆகிடுவாரு இந்த நேரத்துல போய் இப்டி....

சரி நீங்க மொதோ கிளம்புங்க என்று வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார்கள்.

என்ன நடந்தது ? :

என்ன நடந்தது ? :

நடந்ததை ஹைதிராபாத்காரனுக்கு போன் செய்து சொல்லலாம் என்றால் அவனது போன் ரீச் ஆகவேயில்லை. அலுவலகத்தில் இருந்த பிறரிடம் விசாரித்தேன். அவர்கள் கூறியது என்னை பயங்கர ஷாக்கிங்காக இருந்தது.

சென்னை கிளை மேலாளர் என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும் போன் மூலமாகவும், நேரிலும் மிரட்டல் விடுப்பதாகவும் இதனால் அதிக மனவுளைச்சல் ஏற்படுகிறது.

நான் போலீசில் சென்று புகாரிடுவதற்கு முன்னர் நீங்கள் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லி ஹைதிராபாத்தில் இருக்கக்கூடிய பாஸ் அதாவது என் நண்பனுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன்.

இந்த புகாரின் அடிப்படையில் அவரை டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள்.

 நாடகம் :

நாடகம் :

சென்னை பாஸிடம் நான் அதிகமாக பேசியது கூட இல்லையே.... என் மெயிலை ஓப்பன் செய்தேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் என் மெயிலிருந்து அவனுக்கு புகார் சென்றிருக்கிறது. எப்படி சாத்தியம் இது.... அப்போது தான் என் மெயில் ஐடி பாஸ்வேர்டை ஒரு முறை அவனுக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது.

அதற்கடுத்து அவனது போனுக்கு முயற்சித்தேன். பல முயற்சிகளுக்கு பிறகு எடுத்தான் ஆனால் வேறு யாரோ பேசினார்கள். நான் அவரோட பிஏ பேசுறேன் சார் மீட்டிங்க்ல இருக்காரு என்றார் அவர். அதன் பிறகு என்னிடம் பேசுவதை முழுவதுமாகவே குறைத்துக் கொண்டார்.

வீண் பழி :

வீண் பழி :

விஷயம் அலுவலகத்தில் எல்லாருக்கும் பரவியது. நிச்சயமாக அவரது குடும்பத்தினருக்கும் யார் மூலமாவது தெரிந்திருக்கும். இப்படி ஒருவரின் வாழ்க்கை கெடுவதற்கு நாமே காரணமாகிவிட்டோமே என்று தினம் தினம் குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வார விடுமுறைக்குப் பின் நான் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டேன் எல்லாரும் என்னை வெறுப்புடனும் சற்று தள்ளிவைத்தே தான் பார்க்கிறார்கள். ஒவ்வொரு நாளும் என்னால் ஒரு பெரிய மனிதருக்கு இப்படியான இழுக்கு ஏற்பட்டுவிட்டதே.... ஏதேதோ பேசி என்னை ஏமாற்றிவிட்டானே என்று என்னுள் புலம்பிக் கொள்ளவே முடிந்தது.

 யார் நம்புவார்? :

யார் நம்புவார்? :

இந்த புகார் நான் அளிக்கவில்லை ஹைதிராபாத் பாஸ் தான் இதற்கு காரணம் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா..... ஒவ்வொரு நாளும் அலுவலகம் மிகுந்த மனவுளைச்சலைக் கொடுக்கும் இடமாக மாறியது. இந்த சம்பவம் நடந்த அடுத்த மாதத்தில் என்னுடைய ஃபெர்ஃபார்மென்ஸ் சரியில்லை என்று சொல்லி மெமோ வந்திருந்தது.

இந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு போய்விட வேண்டும் என்று ஆசை தான் ஆனால் என்ன செய்ய இந்த சம்பளத்தை நம்பி அங்கே ஓர் குடும்பமே இயங்கிக் கொண்டிருக்கிறதே அவ்வளவு எளிதாக இதை உதறித்தள்ளவும் முடியவில்லை. வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்களே ஆன நிலையில் எனக்கே இவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருந்ததென்றால் அவருக்கு???

நினைக்கும் போதே அழுகை வந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: my story insync life
English summary

Girl Shared Her bad Experience in office

Girl Shared Her bad Experience in office
Story first published: Tuesday, April 10, 2018, 14:49 [IST]