For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கௌதம் கம்பீர் குறித்து பலரும் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!

|

சேவாகிற்கு இணையாக அதிரடியாகவும் ஆடுவார், விளையாட்டின் போக்கினை கணித்து நிதானமாகவும் ஆடுவார். சேவாக் - கம்பீர் நிறைய போட்டிகளில் இந்தியாவிற்கு சிறந்த துவக்கம் அளித்தவர்கள் என்பதை தாண்டி, சச்சின் - கங்குலிக்கு அடுத்ததாக இந்தியாவிற்கு கிடைத்த ஒரு சிறந்த வலதுகை, இடதுகை துவக்க ஆட்டக்கார ஜோடி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டு தோனி தலைமையில் உலகக் கோப்பை வாங்க இவரும் ஒரு முக்கியக் காரணம். இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றியடைய ரன்கள் குவித்தவர் கௌதம் கம்பீர். சமீபத்தில் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார் கம்பீர்.

சிரிக்கவே மாட்டாரா என்று இவரை பார்த்து கேள்வி எழுப்பியவர்கள் பலர். ஆனா, நிஜமாவே சிரிச்சா கம்பீர் தங்கம் மாதிரி தான். கம்பீரின் வாழ்க்கை, விளையாட்டு, சாதனைகள், எழுதப்படாத வரலாற்றுப் பக்கங்கள் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகளை இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கௌதம் கம்பீர் பிறந்தது 1981ம் வருடம் அக்டோபர் மாதம் 14ம் தேதி. இவர் டெல்லியின் மாடர்ன் ஸ்கூலில் படித்தவர். 2000ம் ஆண்டு முதன் முறையாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இடம் பிடித்தார் கம்பீர்.

#2

#2

பிறந்த சில நாட்களிலேயே தனது தாத்தா- பாட்டியால் தத்தெடுக்கப் பட்டவர் கம்பீர். பிறந்து 18 நாட்கள் கழித்து கம்பீர், அவரது தாய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியிலேயே கம்பீரை பார்த்த அவரது தாத்தா, பாட்டி அவரை மிகவும் பிடித்துப் போகவே தத்தெடுத்துக் கொண்டனர். கம்பீர் அவர்களுடன் தான் வாழ்ந்து வந்தார்.

#3

#3

தனது 17வது வயதில் டெல்லி அணிக்காக கம்பீர் விளையாடிய அந்த ஸ்டார்க் ப்ளே தான், தேசிய கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் பார்வையை கம்பீர் பக்கம் திருப்பியது. இதன் பலனாக, 2003ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் தாகாவில் தனது அறிமுகப் போட்டியை விளையாடினார் கம்பீர்.

#4

#4

2007ம் ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை விளையாட்டுத் தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமை கம்பீரையே சேரும். இவர் இந்த தொடரில் 227 ரன்கள் குவித்திருந்தார். மேலும், அந்த தொடரில், மேத்வ்யூ ஹைடனுக்கு (265) அடுத்ததாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தார் கம்பீர்.

#5

#5

2009ம் ஆண்டு கம்பீர் ஐ.சி.சி-யின் டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். அதே ஆண்டில் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் ப்ளேயர் விருதையும் வென்றார் கம்பீர்.

#6

#6

கம்பீர் இதுவரை இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் ஆறு போட்டிகளில் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். அந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 2010ம் ஆண்டு இவர் ஐந்துப் போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்றும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றிலும் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெற்றியை சுவைத்துள்ளது.

#7

#7

2011ம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்வதற்கு முதுகெலும்பாய் இருந்தவர் கௌதம் கம்பீர் தான். 122 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு சிறந்த துவக்கம் கொடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றவரே கம்பீர் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு அன்று ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை.

#8

#8

2011ம் ஆண்டு கம்பீர்க்கு டபிள் டமாக்கா என்று தான் கூற வேண்டும். ஒரு கையில் உலகக் கோப்பை, மறுகையில் தன் மனைவி நடாஷாவுடன் கம்பீர் வெற்றி நாயகனாக வலம்வந்தார். டெல்லியின் வெஸ்டன்ட் ஃபார்ம்'ல் இவர்களது திருமணம் நடைப்பெற்றது.

#9

#9

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்த கௌதம் கம்பீருக்கு கிரிக்கெட் தவிர மிகவும் பிடித்தமானவை படிப்பது மற்றும் குடும்பத்துடன் லாங் டிரைவ் செல்வது ஆகும். மேலும், ப்ளேஸ்டேஷனில் விளையாடுவது, லெப்ட் ரைட் லெப்ட் என்ற தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பது கம்பீருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

#10

#10

ஒருமுறை ஐ.பி.எல் தொடரில் 2.5 மில்லியன்னுக்கு விலைக்கு வாங்கப்பட்டார் கௌதம் கம்பீர். இது தான் ஐ.பி.எல் வரலாற்றிலேயே ஒரு வீரர் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டதாக சாதனையாக இருந்தது. கொல்கட்டா அணிக்காக இரண்டு முறை ஐ.பி.எல் கோப்பை வென்று கொடுத்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

#11

#11

டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை கௌதம் கம்பீரை தான் சேரும். மேலும், சர்வதேச அளவில் இந்த சாதனையை நான்காவது நபராக நிகழ்த்தினார் கம்பீர். கம்பீருக்கு முன் இந்த சாதனையை பிராட் மேன், காலிஸ் மற்றும் முகமது யூசப் நிகழ்த்தி இருந்தனர்.

#12

#12

அதே போல, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் க்கு பிறகு தொடர்ந்து 11 டெஸ்ட் போட்டிகளில் 11 அரைச்சதம் அடித்த இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் கம்பீர் தான்.

#13

#13

தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

#14

#14

2008ம் ஆண்டு இந்திய அரசு கௌதம் கம்பீருக்கு அர்ஜுனா விருதுக் வழங்கி கௌரவித்தது.

#15

#15

மனித நேயத்திற்கு தன்னாலான குரலை கொடுக்க கம்பீர் மறந்ததே இல்லை. தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட சத்தீஸ்கர் CRPF ஜவான் மற்றும் ஜம்மு காஷிமீர் காவல் அதிகாரியின் குழந்தைகளின் கல்வி செலவு மொத்தத்தையும் தானே ஏற்றுக் கொண்டார் கம்பீர்.

#16

#16

GG பவுண்டேஷன் என்ற பெயரில் மக்கள் நல்வாழ்வு சேவைகளை செய்து வருகிறார் கம்பீர். ஏழை மக்களுக்கு இலவச உணவுகள் அளிப்பது இதன் முக்கிய பங்காக இருக்கிறது. யார் ஒருவரும் பசியுடன் உறங்க கூடாது என்பதை குறிக்கோளாக வைத்து இந்த பவுண்டேஷன் இயங்கி வருகிறது.

#17

#17

திருநங்கைகளுக்கும் தனது ஆதரவை அளித்துள்ளார் கம்பீர். சோசியல் மீடியா மூலமாக ட்வீட் செய்வது, பதிவிடுவது என்று மட்டுமின்றி, திருநங்கைகள் போலவே உடை உடுத்திக் கொண்டு சென்று அவர்களுக்கு தனது ஆதரவை அளித்திருந்தார் கம்பீர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fact and Biography of Indian Cricketer Gautam Gambhir!

Here we have shared some interesting facts and records of Indian cricketer Gautam Gambhir who recently announced his retirement from all forms of cricket.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more