For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓவியங்கள், சிலைகளில் பண்டையக் காலத்து இந்திய பெண்கள் மார்பு மறைவின்றி இருப்பது ஏன்?

கோவில் சிற்பங்களில் பெண்களின் மார் மறைவின்றி இருப்பது ஏன் என்று தெரியுமா?

|

நீங்கள் என்றாவது யோசனை செய்து பார்த்தது உண்டா...? ஏன் இந்தியாவின் பழங்கால கோயில்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் இருக்கும் சிற்பங்களில் பெண்கள் தங்கள் மார்பினை மறைக்காமல் இருக்கிறார்கள் என்று?

இதுகுறித்து நாம் பெரிதாக என்றும் ஆராய்ந்தது கிடையாது. இந்தியாவின் கலாச்சார உடை புடவை மற்றும் பிளவுஸ் என்று நாம் கூறிக் கொண்டாலும். இது எந்த காலத்தில் பிறந்தது. அதற்கு முன் பண்டையக் காலங்களில் நம் இந்திய நாட்டில் வாழ்ந்த ஆண், பெண்கள் என்ன உடை உடுத்தியிருந்தனர் என்பது பலருக்கும் தெரியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாறுபட்ட கலாச்சாரம்!

மாறுபட்ட கலாச்சாரம்!

உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு உடை கலாச்சாரங்கள் இருக்கின்றன. அவை யாவும் அந்தந்த பகுதியின் வெட்பதட்ப நிலை மற்றும் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்தே இருந்துள்ளன.

இன்றும் மேற்கத்திய நாடுகளில் கோட்ஷூட் அணிந்து இறுக்கமாக டை கட்டிக்கொள்ள காரணம் அங்கே வருடத்தில் பெரும்பாலான நாட்கள் மிகுந்த குளிராக இருக்கும். ஆனால், நாம் கொதிக்கும் சட்டியில் இருப்பதுபோன்ற வெயிலில் ஏன் அதே உடையை பின்பற்றுகிறோம்.

உடையில் இது தான் நாகரீகம் என்று எதுவும் இல்லை. எல்லாம் அவரவர் கலாச்சாரத்தை சார்ந்தது.

Image Source: wikipedia

ஓவியங்கள்!

ஓவியங்கள்!

அஜந்தா மற்றும் எல்லோரா போன்ற குகை ஓவியங்களிலும் நீங்கள் இதை மிக தெளிவாக காண்டிருக்கலாம். நமது பண்டையக் கால ஓவிய, சிற்ப கலைகளில் உடையானது மிக சிறிய அளவிலேயே உடலை மறைத்திருந்தது.

இந்த குகை ஓவியங்கள் மட்டுமல்ல, நீங்கள் பழங்கால சிற்பங்கள் என்று இந்தியாவில் எங்கு சென்று பார்த்தாலும் கூட பெண்களும், ஆண்களும் தங்கள் மார்பினை மறைத்ததாக சிலைகள் எங்கும் பெரிதாக காண இயலாது.

Image Source: wikipedia

சங்க காலம்!

சங்க காலம்!

அதே போல கிமு 300-களை சேர்ந்த மவுரியா மற்றும் சங்ககால சிற்ப கலைகளிலும் கூட ஆண்கள், பெண்கள் மிக சிறிய அளவிலான உடை உடுத்தி தங்கள் உடையை மறைத்திருந்ததை நாம் தெளிவாக அறிய முடிகிறது.

அதிலும், செவ்வக அளவிலான சிறிய உடையானதாக அது காணப்படுகிறது. அதன் மூலம் கீழ் உடல் மற்றும் மேல் உடல் சிறிதளவில் மறைக்கப்பட்டிருக்கும்.

Image Source: wikipedia

நாணம்!

நாணம்!

மக்கள் வாழ்ந்த அந்தந்த இடம் மற்றும் இனத்தை, குழுக்களை பொருத்து அவரவர் நாணம் என்பது வேறுப்பட்டு காணப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்தியாவில் நிலவிய சூடான தட்பவெட்பம் சிறிய அளவிலான உடைகளை உடுத்தும் முறையை பின்பற்ற முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

அல்லது இந்தியாவில் பண்டையக் காலத்தில் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்து அதற்கு ஏதுவாக, சௌகரியமாக இருக்கும் உடைகளை அவர்கள் உடுத்தி இருக்கலாம்.

Image Source: commons.wikimedia

விதிமுறை!

விதிமுறை!

மேலும், காலப்போக்கில் யார் மேலாடை உடுத்த வேண்டும், யார் மேலாடை உடுத்த கூடாது என்பது இந்தியாவில் சாதிய பிரிவினை மூலமாக பிரிக்கப்பட்டது. மேல் சாதி பெண்கள் மார்பகங்களை மறைத்துக் கொள்ள உரிமை இருந்தது. கீழ் சாதி பெண்களுக்கு தங்கள் மார்பகங்களை மறைக்க உரிமை மறுக்கப்பட்டது.

Image Source: suniljanah

முகலாயப் பேரரசு!

முகலாயப் பேரரசு!

இது போன்ற சூழல் அன்றைய மகாராஷ்டிரா, கங்கை உட்பட வட இந்தியாவின் பெரும்பகுதிகளில், இஸ்லாம அரசர்கள் வெற்றிக் கொண்டு ஆட்சி செய்ய துவங்கியதற்கு முன்பு வரை காணப்பட்டிருந்தது.

இந்தியாவில் முகலாயப் பேரரசு ஆதிக்கம் செலுத்த துவங்கிய போதுதான்.. அவர்கள் இந்திய பெண்களின் உடை நாகரீகத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்ததாக அறியப்படுகிறது. தலை மற்றும் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்ற சட்டங்களை அவர்கள் கொண்டுவந்துள்ளனர்.

Image Source: wikipedia

சல்வார் கமீஸ்!

சல்வார் கமீஸ்!

முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தின் மூலமாகவே, இந்திய நாகரீக உடைகளில் மாற்றங்கள் பிறந்தன என்றும். வட இந்தியாவில் சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகள் பிறக்க, பரவ இவர்களே முக்கிய காரணமாக இருந்தனர் என்றும் அறியப்படுகிறது.

முகலாயர்கள் ஆட்சி மறைந்த பிறகும், கூட இதே உடை கலாச்சாரம் இந்தியாவில் நிலைத்திருந்தது. ஏன் இன்றைய இந்தியாவில் புடவைக்கு இணையாக பாரம்பரிய உடையாக இவை தானே கருதப்படுகின்றன.

Image Source: commons.wikimedia

பெங்கால்!

பெங்கால்!

விக்டோரியா வாழ்ந்த காலத்தில் பெங்காலில் சில வகுப்பை சேர்ந்த பெண்கள் புடவை உடுத்த மட்டுமே உரிமை வழங்கப்பட்டிருந்தது. சில வகுப்பை சேர்ந்த பெண்கள் மேலாடையாக பிளவுஸ் அணிந்துக் கொள்ளும். சில வகுப்பை சேர்ந்த பெண்கள் தங்கள் புடவை கொண்டு மட்டுமே மார்புகளை மறைத்துக் கொள்ளவும், பிளவுஸ் போன்ற உடைகள் உடுத்த உரிமை மறுப்பு இருந்தது என்றும் அறியப்படுகிறது.

Image Source: commons.wikimedia

கேரளா!

கேரளா!

கேரளாவில் இதுவொரு பெரிய கொடுமையாகவே இருந்தது. சில சாதியை சேர்ந்த பெண்களை தவிர, ஏனைய அனைத்து சாதியை சேர்ந்த பெண்களும் தங்கள் மார்புகளை மறைக்க கூடாது என்றும். மீறி மறைத்தால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் கொடுமையான சட்டங்கள் இருந்தன.

1858-க்கு பிறகு பெரிய போராட்டம் உண்டாகவே இதில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு அனைத்து சாதியை சேர்ந்த பெண்களும் தங்கள் மார்பினை மறைத்துக் கொள்ளலாம் என்ற நிலை பிறந்தது.

Image Source: dainiksaveratimes

பிரிட்டிஷ்!

பிரிட்டிஷ்!

இந்த சட்ட திருத்தத்திற்கு உள்ளூர் உயர் சாதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஆங்கிலேய ஆட்சிக் காரர்கள் தனது ஆதிக்கத்தின் மூலமாக இந்த மாற்றத்தை கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு தான் கேரளத்தில் பெரும் கொடுமை நீங்கள் பிளவுஸ் போன்ற உடைகள் என்பது சாதிய உரிமை அல்ல மக்களுக்கான அடிப்படை உடை உடுத்தும் உரிமையாக மாறியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ever Wondered Why In Ancient Temple Sculptures Indian Women Were Not Covered Their Breast?

Ever Wondered Why In Ancient Temple Sculptures Indian Women Were Not Covered Their Breast?
Desktop Bottom Promotion