ஆபீஸில் பாஸ் குஸ் விட்டுக்கிட்டே இருக்கார்.. 11 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஊழியர் வழக்கு!

Posted By: Staff
Subscribe to Boldsky

கிணற்றை காணவில்லை என்று படத்தில் வழக்கு போட்டு பார்த்திருப்போம். ஏன் எங்க ஏரியா எம்.எல்.எ காணவில்லை என்று நம் நாட்டில் போஸ்டர் ஓட்டிக் கூட கண்டிருப்போம்.

ஆனால், உலகிலேயே முதல் முறையாக, ஊழியர் ஒருவர் தனது பாஸ் குஸ் விட்டுக் கொண்டே இருக்கிறார். நாற்றம் தாங்கவில்லை. நான் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்று கூறி நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

வெறும் வழக்கு அல்ல, பாஸ் தொடர்ந்து குஸ் விட்டுக் கொண்டே இருந்ததற்கு நஷ்ட ஈடாக தனக்கு 1.8 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். இது இந்திய பண மதிப்பில் 11 கோடி ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எங்கே?

எங்கே?

இந்த விசித்திரமான வழக்கு பதிவானது ஆஸ்திரேலியாவில். வழக்கில் தனது பாஸ் தொடர்ந்து விட்டுக்க் கொண்டே இருக்கிறார். அதுவும் அவர் என்னை நோக்கியே குஸ் விடுகிறார். அவர் என்னை கேலி செய்யவும், கொடுமைப்படுத்தவும் இப்படி செய்கிறார் என்று கூறி, இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 11 கோடி கேட்டு வாங்கி தாருங்கள் என்று வழக்கு பதிந்துள்ளார்.

யாரு?

யாரு?

இப்படியான வழக்கை தனது பாஸ் மீது பதிந்த நபர் பெயர் டேவிட் ஹின்ஸ்க்ட். இவர் இதன் காரணாமாக மன அழுத்தம், பதட்டம் மற்றும் உடல் ரீதயாக சில காயங்களுக்கு கூட ஆளாகி இருக்கிறேன் என்று தனது மேலாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த ஒரு வருட காலமாக தான் விக்டோரியா சார்ந்த கட்டுமான என்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். அங்கே தான் இத்தகைய மோசமான அனுபவத்திற்கு நான் ஆளானேன் என்று டேவிட் கூறியுள்ளார்.

விசாரணை!

விசாரணை!

இந்த வழக்கினை தொடர்ந்து 18 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அந்த குஸ் பாஸ் முதற்கொண்டு பல சாட்சிகளிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் கூறிய ஒப்புதல் வாக்கு மூலங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டன. இதில், தனது குஸ் பிராப்ளம் பற்றி அந்த பாஸும் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ் என்ன கூறினார்?

பாஸ் என்ன கூறினார்?

விசாரணையின் போது கிரேக் ஷார்ட் எனும் அந்த பாஸ், நான் குறிப்பிட்டு எந்த நாளையும் நினைவுக் கொள்ளவில்லை. அப்படியே இருந்தாலும் ஒருமுறை நான் வாயு வெளியேற்றி இருக்கலாம். என்று டேவிட் தன் மீது சுமத்திய குற்றம் சார்ந்து வாக்குமூலம் அளித்திருந்தார்.

டியோடிரன்ட்!

டியோடிரன்ட்!

தனது பாஸ் குஸ் விட்டுக் கொண்டே இருப்பது தாங்காமல் ஒருமுறை டேவிட் டியோடிரன்ட் ஸ்ப்ரே எடுத்து அடித்தார் என்றும், அவரை மிஸ்டர் ஸ்டிங்கி என்று அழைத்தார் என்றும் டேவிடே கூறியிருக்கிறார்.

மேலும், டேவிட் பாஸின் இந்த குஸ் பிரச்சனை திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்றும் நீதி மன்றத்தில் கூறியிருந்தார். மேலும் இதனால் தான் வேலை இழந்துள்ளதாகவும் இவர் தெரிவித்திருக்கிறார்.

ஓரினச்சேர்க்கையாளரா?

ஓரினச்சேர்க்கையாளரா?

டேவிட், ஒருமுறை தனியாக என்னை அழைத்து சென்ற பாஸ், என்னை ஓரினச் சேர்க்கையாளரா என்று கேட்டார். மேலும், அணியுடன் வெளியே காபி ஷாப் போகும் போது வேண்டுமென்றே என்னை மட்டும் விட்டு அவர்கள் எல்லாம் ஒன்றாக சென்றனர், என்று அடுக்காக பாஸ் மீது குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தார்.

தீர்ப்பு என்ன?

தீர்ப்பு என்ன?

வழக்கை விசாரித்த நீதிபதி... டேவிட் பதிவு செய்திருக்கும் இந்த வழக்கில் எந்த மெரிட்டும் இல்லை. அலுவலகத்தில் குஸ் விடுவது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை. மேலும், வாயு வெளியேற்றுவதை எல்லாம் கொடுமை என்று எடுத்துக் கொள்ள மாட்டாது. டேவிட் உட்பட அனைத்து சாட்சியங்களையும் செல்லாது என்று கூறி, வழக்கை தள்ளுப்படி செய்து உத்தரவிட்டார்.

என்ன கொடுமை இது...

என்ன கொடுமை இது...

ஒன்று டேவிட் மனதளவில் ஸ்ட்ரெஸ் அல்லது பதட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.. இல்லை அந்த பாஸ் மீது வேறு ஏதேனும் பகை கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் இப்படியான வேடிக்கையான வழக்கை யாரும் வேலை, நேரத்தை விரயம் செய்து பதிவு செய்ய மாட்டார்கள்.ஆஸ்திரேலியாவாக இருந்ததால் இதை விசாரித்து நீதிபதி வழக்கை தள்ளுப்படி செய்திருக்கிறார்.

இதுவே நம் நாடாக இருந்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி வழக்கை பதிவு செய்த நபர் மீது அபராதம் பதிவு செய்து தண்டித்திருப்பார்கள்.

பார்த்து சூதானமா இருங்க...

பார்த்து சூதானமா இருங்க...

பார்த்துக்கங்க மேலதிகாரிகளே... பாஸ் மேல கோபப்பட்டா இப்படி எல்லாம் கூட கேஸ் போடு மானத்த வாங்க ஒரு புது ஐடியா கிடைச்சிருக்கு. இனிமேல் பார்த்து சூதானமா இருந்துக்குங்க. இல்லாங்காட்டி நம்மாளுங்க வேணும்னே கூட இப்படி ஒரு குஸ் கேஸ் போட்டு விட்டுருவாங்க. என்ன பண்றது நம்ம ஆளுங்க பிரைன் அப்படி ஒரு வித்தியாசமான டிசைன்ல இருக்கு.

தீர்வு இருக்கா?

தீர்வு இருக்கா?

இப்படியான பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கு. Fart Free Garmentsன்னு சும்மா தேடி பாருங்க, சில ஆடை நிறுவனம் குஸ் விட்டா நாற்றம் வெளியாராமல் இருக்க்க கார்பன் ஆக்டிவேட்டட் உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் எல்லாம் பிரத்தியேகமாக தயாரித்து விற்று வருகிறார்கள். எதுக்கு எல்லாம் டெக்னாலஜி யூஸ் பண்ண வேண்டி வருது பாருங்க.

ஏற்கனவே இந்த பிரச்சனை சந்கோஜமானது. இதுல இப்படி கேஸ் எல்லாம் போட்டா வெளிய தலை காட்டவே முடியாதே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Sues Gassy Boss For $1.8 Million. Farting Not Bullying, Judge Rules

A judge in Australia has thrown out a case by a man who sued his former boss for $1.8 million in damages for constantly farting, which he claimed, equalled to workplace bullying. The man, in his lawsuit, claimed his supervisor regularly "lifted his bum and farted" on him, News.com.au reported. Gross, we know.
Story first published: Friday, April 13, 2018, 17:35 [IST]